Pages

Banner 468

Subscribe
Tuesday, June 14, 2011

நவீன ராமானுஜர்களும் தள்ளாடும் தலித் விடுதலையும்!!!

10 comments
 

அம்பேட்கரின் மத மாற்றம் தோற்று விட்டது, புத்த‌ மதம் சர்வ நிவாரணியல்ல, தலித் அரசியல் தலைவர்களை விமர்சிக்க‌ கூடாது, பௌத்தம் பேசும் தலித்துக்கள் வெளிநாட்டு பணவுதவியுடன் பேசுகிறார்கள், இந்து மதத்தில் இருந்துகொண்டே சாதியை ஒழிக்க வேண்டும் என்பது போன்ற பாசிச சிந்தனையோடு ஒரு சூத்திரனோ அல்லது பார்பனனோ பேசினால் சரி அவன் சாதி வெறியில் பேசுகிறான் நம் வேலையைப் பார்க்கலாம் என்று போய்விடலாம் ஆனால் இத்தனையையும் பேசுபவர் தலித் என்றால் என்ன சொல்வது! நண்பகளின் இது போன்ற கேள்விகளால் எனக்கு சவார்கர் மற்றும் ஈ.வெ.ரா. ஆகியோரின் ஞாபகம் தான் வந்து தொலைகிறது.

சவார்கரின் தத்துவப்படி இந்தியா இந்துக்களுடைய நாடு, இந்துகள் மனுதர்மத்தை ஏற்று வாழவேண்டும் என்றார்.  ஈ.வெ.ரா. வின் தத்துவமோ பார்பனனை வெளியேற்று, கடவுள் இல்லை என சொல், ஆனால் இந்துவாகவே வாழ் என்றார் ஆக இருவருடைய பாதைக‌ள்தான் வேறானதே தவிர‌,  இலக்கு இந்து மத்தை வலுபடுத்துகின்ற வேலைதான், அப்படி இந்து மதம் வலுப்பெற்றால் மனுதர்ம‌த்தை ஒழிக்க முடியுமா? மனுதர்மத்தை கடைபிடித்தால் சமத்துவம் நிலைக்குமா?  சமத்துவம் இல்லாத பகுத்தறிவு பலிக்குமா? ஆக ஊருக்கு உபதேசம் என்ற மனநிலையோடுதான் இன்று இந்தியாவில் உள்ள அனைத்து தலித் அல்லாத‌ முற்போக்கு சிந்தனையாளர்களும், கட்சிகளும், அமைப்புகளும், ஊடகங்களும் செயல்படுகிறது.

பார்பதர்க்கு இந்த மனநிலை பிற்போக்கு மற்றும் முற்போக்கு சிந்தனைவாதமாக தெறியும் ஆனால் இவைகள் டார்வினின் கோட்பாடான "வலிமையானதே வாழும் (survival of the fittest)" என்ற நோக்கோடு தாம் சார்ந்த சமூகத்தை பொருளாதார‌ ரீதியாக‌ வலுப்படுத்தவே இந்த பிற்போக்கு மற்றும் முற்போக்கு வாதம் பேசப்பட்டதே ஒழிய, இந்து மதத்தில் உள்ள சாதியை ஒழித்து ஓர் சமத்துவ சமூதாயத்தை உருவாக்க அல்ல. இதை உணர்ந்தே தான் அயோத்திதாஸ் சொன்னார் "நான் ஒரு பூர்வ பௌத்தன்" என்று, அம்பேட்கரோ "நான் இந்துவாக பிறந்தேன் ஆனால் இந்துவாக சாக மாட்டேன் (I was born as a Hindu but I will not die as a Hindu)" என்றார்.

தலித் மக்களை பொருத்தவரையில் இந்து மதம் என்பது படு பாதாளத்தில் விழுந்து நொருங்கிய ஒர் பயனிகள் பேருந்தைப் போன்றது, பிழைத்துக்கொள்ள நினைப்பவர்கள் கையில் கிடைத்த கொடி கொம்பை பிடித்து அந்த பேருந்திலிருந்து வெளிவருவதே இப்போதைக்கு நிவாரணம், நீங்கள் பௌத்தத்தின் உதவியோடுதான் வெளியேரவேண்டும் என யாரும் கட்டாயப்படுத்தவில்லை, நீங்கள் எந்த மத‌த்திற்க்கு வேண்டுமானாலும் செல்லளாம், இல்லை இந்த பேருந்தை சீர் செய்து சாதி என்ற படுபாதாளத்திலிருந்து மீட்டு சமத்துவம் எனும் சமவெளியில் இயக்க முடியும் என்றால் முயற்சித்துப் பாருங்களேன் சகோதரா! இதையேத்தான் பார்பன குளத்தில் பிறந்த துறவி இராமானுஜர் பல நூற்றாண்டுகளுக்கு முன் முயற்சித்தார், அவர் ஆதி திராவிடர்களை "திரு குல‌ம்" என வர்ணித்து, தான் நரகத்திற்கு போனாலும் பரவாயில்லை, தாழ்த்தப்பட்ட மக்கள் சொர்க்கம் செல்லவேண்டும் என்று நினைத்து பல போராட்டங்களை செய்ததாக படித்திருக்கிறேன். இதுபோன்ற முயற்சிகளையும் வர‌வேற்கின்றோம்.

புத்த மதத்தில் பல‌ பிரிவுகள், பலநூறு உட்பிரிவுகள் உள்ளன, ஆனாலும் உலகின் மிக தொண்மையான மதம், மனிதனை மனிதனாக வாழ்விக்கும் மதமாக பௌத்தம் இன்றும் விளங்குகிறது. அதுபோல் உலகின் முதம் நிறுவனமாக்கப்பட்ட மதமும் பௌத்தமே, சில ஆண்டுகளுக்கு முன்பான உலகளாவிய‌ ஓர் கருத்துக்கணிப்பில் உலகின் மிகச்சிறந்த மதம் பௌத்தம் என அறிவிக்கப்பட்டது.

அதுபோல் புத்தம் சர்வ‌ நிவாரணியா அல்லது வலி நிவாரணியா என்பது அதை ஏற்றுக்கொண்டவர்களின் மனநிலையைப் பொருத்தது, ஆனாலும் பௌத்தத்திற்க்கு சர்வ‌ நிவாரணியாகவும், வலிநிவாரணியாகவும் இருக்க அனைத்து தகுதியும் உண்டென்பது அம்பேட்கர் வாதம். தலித் விடுதலைக்கு மத மாற்றம் ஓர் நல்ல வழி, இல்லை இல்லை தலித் விடுதலைக்கு மதமாற்றத்தை விடவும், புத்த மதத்தைவிடவும் சிறந்த வழி என்னிடம் உண்டென்று நீங்கள் சொன்னால் உங்கள் பின் அணிவகுக்க தாயார்! நமக்குத் தேவை சமநிகர் சமூக பொருளாதார வாய்ப்பு மட்டுமே! அதற்க்கு எந்த மதமோ அல்லது எந்த தத்துவமோ வாய்ப்பளித்தாளும் அதனைப் பின்பற்ற தலித் மக்கள் தயாராக உள்ளார்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பௌத்த தத்துவ‌த்தை உணர்த்து மதம் மாறிய அம்பேட்கரின் முயற்ச்சி தேக்கமடைந்ததற்க்கு தேர்தல் அரசியல் மட்டுமே காரணம், தலித் மக்களை வைத்து பிழைப்பு நடத்த தலித் அரசியல் வாதிகள் என்று ஓரு கூட்டம் இந்தியா முழுவது அலைந்து கொண்டிருக்கிறது, அவர்களை மத்திய மாநில கட்சிகள் தங்களின் ஏவலாளிகளாக மாற்றி தலித் விடுதலையை தலித் மக்கள் மூலமாகவே பின்னோக்கி தள்ளுகிறர்கள். பல ஆயிரம் கோடிகள் புறளும் அரசியல் சந்தையில் விலைபோக தலித் அரசியல் தலைவர்கள் பல சித்து வேலைகளை செய்து தங்களை நிலைநாட்ட வேண்டியிருக்கிறது, அதன் விளைவாகத்தான் தமிழகத்தில் பௌத்தத்திற்க்கான பாதை குறுகி, மொழி அரசியலுக்கான பாதை அகண்டு, இன்று ஈழ தமிழர்களுக்காக தீக்குளித்தலில் போய் முடிந்திருக்கிறது.

ஓட்டு அரசியல் என வந்துவிட்டால் தலித் அரசியல் வாதிகள் தலித் விடுதலையை மையமாக கொண்டு அரசியல் நடத்த இயலாது, அதனால் தான் இயக்கமாக இருக்கும் போது அவர்கள் பேசிய வீரவசனம் ஓட்டு கட்சியாக மாறிய பின்பு குறைந்துவிடுவது தவிற்க்க முடியாதது. எல்லா அரசியல் வாதிகளைப் போலவே தலித் அரசியல் வாதிகளும் அதிகாரத்தைக் கைப்பற்ற பல வழிகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது, ஆக தலித் அரசியல் வாதிகளின் நோக்கம் அதிகாரம்தானே தவிர விடுதலையல்ல.

எனவெ இத்தகய‌ எதார்த்த நிலையை நாம் உணர்ந்த பின்பு,  விடுதலையை நோக்கி பயனிக்கும் உணர்வை ஏற்படுத்தும் அமைப்புகளை கட்டமைக்கும் பொருப்பு ஏனைய தலித் இயக்கம், அமைப்புகள் மற்றும் அறிவு ஜீவிகளின் கடமை, மேலும் இது போண்ற அமைப்புகளை நிறுவ தலித் கட்சிகளும் மறைமுகமாக ஆதறவும் தரவேண்டும், மாறாக இங்கு உள்ள தலித் அரசியல் தலைவர்கள் யாரும் மாற்று இயக்கத்தை கட்டமைத்துவிடக்கூடாது, தங்களை இல்லாமல் யாரும் எந்தவித போராட்டத்தையும் நடத்தக்கூடாது என்பதில் கவனமாக, மிக குறுகிய மனப்பான்மையோட்டு வெந்தபுண்ணில் வேலைப்பாச்சும் வேலையை செய்துவருகிறார்கள்.

ஆக அதிகாரத்தை நோக்கி பயனிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் ஏனைய விடுதலைக்கான வழியான மதமாற்றம், சிறிய தலித் அமைப்புகளின் வளர்ச்சி, தலித் சிந்தனையாளர்களை ஒருங்கினைப்பு, தலித் இளைஞர்களுக்கான அரசியல் கல்வி, நில மீட்பு, தீண்டாமை ஒழிப்பு போராட்டம் போண்ற எல்லா விடுதலைக்கான வழியை மறித்துக்கொண்டு ஓர் ஆக்டோபஸ் போல் செயல்படும் தலித் அரசியல் தலைவர்களை விமர்ச்சனம் செய்யாமல் யாரும் மெச்ச முடியாது. .

தலித் விடுதலையைப் நோக்கி போகவேண்டுமானால் தலித் மக்கள் முதலில் கம்யூனிஸ, திராவிட மற்றும் தலித் கட்சிகளிடமிருந்து கருத்தியல் ரீதியான விடுதலையடைவது மிக‌ முக்கியம் அதுவும் குறிப்பாக தமிழகம் போண்ற மாநிலத்தில் இந்தி எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, தமிழ் தேசம், மற்றும் திராவிடம் போண்ற பல படுகுழிகளில் இருந்து வெளியேவரமல் தலித் விடுதலையைப் பற்றி பேசுவது, மேலும் மதமாற்றம் மாற்றம் தராது என்பது போன்ற வாதங்கள் எல்லாம் சவார்கர் மற்றும் ஈ.வெ.ரா.க்களின் சிந்தனையை வலுப்படுத்த வழிவகுக்குமே தவிர தலித் விடுதலைக்கு வழிவகுக்காது.

Readmore...
Monday, December 27, 2010

சில்லறை கேட்டால் ஏழரை: அரசு பேருந்தில் நடக்கும் அட்டூழியம்

6 comments
 
பெரும்பாலும் நம் பயனம் பெருந்தையே மையப்படுத்தி இருக்கிறது, ஓர் பத்து கிலோமீட்டருக்குள் செல்ல வேண்டுமானால் ஓரளவிற்க்கு வசதிபடைத்தவர்கள் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவார்கள் ஆணால் சாதாரன மக்களுக்கு அரசாங்க அல்லது தனியார் பேருந்து, மினிபஸ், ஷேர் ஆட்டோ இதைத்தவிர பெரும்பாலும் வேரு எதிலும் பயனிக்க வாய்ப்பு குறைவு, ரஜினி பாடியது போல பஸ்ஸை எதிபார்த்து பாதி வயசாச்சு என்பது உண்மைதான்.


இதுபோண்ற வாகனங்களில் பயனிப்பதென்பது மிக சாமார்த்தியமான செயல்தான், 6 பேர் பயனிக்க கூடிய ஓர் ஷேர் ஆன்டோவில் குறைந்தது பத்து பன்னிரண்டு பேரை ஒருவர்மேல் ஒருவராக அடுக்கி நகர்த்திக்கொண்டு செல்வார்கள், 15 நிமிடத்தில் நடந்து செல்லக்கூடிய தூரத்தை 30 நிமிடத்தில் கடந்து செல்லும் நமூர் ஷேர் ஆட்டோ, இதைவிட்டாலும் நமக்கு வேரு வழி இல்லை, சரி எல்லாவற்றையும் பொருத்துக்கொண்டு பயனித்தால் நம் இறங்கவேண்டிய இடத்தை அடைவதற்க்குள் பல்வேறு பிறச்சனைகளை சத்திக்க வேண்டிவரும், சில்லறை பாக்கி, சில நேரங்களில் பெண்கள் அருகிலோ அல்லது எதிரிலோ அமருவதால் ஏற்படும் பிறச்சனை இப்படி இடம் போய்சேர்வதற்க்குள் போதும் போதும் என்று ஆகிவிடும், இறக்கும் போது சட்டையெல்லாம் கசங்கி ஏதோ சண்டையில் அடிபட்டு வந்தவன் போல் காட்சியளிப்போம். இதில் முக்கியமான பிறச்சனை சில்லறை பாக்கி, இருகிற கூட்டத்தில் பர்சில் இருக்கும் பணத்தையோ சில்லறையோ எடுக்க கூட முடியாது, சரி இறங்கும் போது கொடுக்கலாம் என்றால் சில நேரங்களில் சில்லைறை இல்லாமல் பல நிமிடங்கள் அலைய வேண்டி வரும்.

அதுவும் இதுபோண்ற தனியார் பஸ்ஸோ ஆட்டோவோ இருந்தால் ஒரளவிற்க்கு சமளித்துவிடலாம், இதுவே அரசாங்க பஸ்ஸாக இருந்தால் மொய் எழுதிவிட்டுதான் போகவேண்டும், அரசாங்க பஸ்ஸின் நடத்துனர் பயனிகளை நாயைவிட கேவலமாக தான் நடத்துவார்கள், அவர்களுடைய சொந்தகாரர்களோ அல்லது கூட வேலைசெய்பவறோ இருந்தால் பேருந்து எங்குவேண்டுமானாலும் நிற்க்கும், யாரும் கேட்க முடியாது ஆனால் நம்மைப்போல சதாரன மக்கள் அவசரத்துக்கு ஓர் இடத்தில் நிருந்த சொண்ணால் நடத்துனர் ஓட்டுனரை கேட்க சொல்வார், ஓட்டுனர் நடத்துனரை கேட்க சொல்வார்,  இருவரிடமும் ஒப்பதல் பெருவதற்க்குள் நாம் இறங்கவேண்டியம் இடத்தை பேருந்து கடந்து சென்றிருக்கும்.


பெரும்பாலும் எல்லோரும் பேருந்தில் ஏறிய பிறகுதான் நடத்துநன் டிக்கட் கொடுக்க ஆரம்பிப்பிப்பார், இரண்டொரு டிக்கெட் கிழிப்பதற்க்குள் சில்லைரை பிறச்சனைய் அரபித்து கத்தி கொள்ளைவிடுவார், எப்போழுது கேட்டாலும் சில்லைரை இருப்பதில்லை என்றே பதில் வரும், முன்பெல்லாம் 50 பைசாவை நாம் கேட்கவே முடியாது ஆனால் இப்பொழுது ஒரு ரூபாயைகூட கேட்டால், ஓரே வார்த்தை "போகும்போது வாங்கிகலாம் கத்தாதிங்க" என்ற பதில்தான் வரும், இந்த ஒரு ரூபாய்க்காக பல முறை நாம் கேட்க வெட்கப்பட்டுகொண்டு பலர் இறங்கி போய்விவார்கள், ஆக நடத்துனர் இப்படி நாளைக்கு சில நூறு கல்லா கட்டுவார் போலிறுக்கு.

இரண்டு நாளுக்கு முன்பு நெய்வேலி செல்வதற்க்காக கடலூரில் ஒர் அரசு பேருந்தில் ஏறினேன், பேருந்து முதுநகரை அடைந்த நிலையில் நடத்துனர் நான் அமர்ந்திருக்கும் இருக்கை பக்கம் வந்தார், நான் 100 ரூபாயை நீட்ட "என்ன இல்லாம் நூறு அய்நூறுன்னு கொடுத்தா எப்படி, என்கிட்ட சுத்தம்மா சில்லறையில்லை ரெண்டு ரெண்டு பேரா ஜாயின் பன்னிதான் விடுவேன்" என்றார், சரி என்று தலையசைத்தவுடன் சீட்டை கிழித்து கொடுத்தார், சில்லறையை கொடுக்க வேண்டும் என சீட்டின் பின்புறம் எழுதி கொடுங்கள் என்று கேட்டதற்க்கு "அதெல்லாம் தருவோம் சும்மா ஒக்காருங்க" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார், சரி பர்சில் எங்காவது அஞ்சோ பத்தோ மறைந்திருக்கிறதா என தோன்டி துலாவி பார்த்தும் ஒன்றும் அகப்படததால், அன்றையை நாளிதழில் மூழ்கிவிட்டேன்,

நெய்வேலி மந்தாரகுப்பம் பஸ் நிலையம் வந்ததும் ஏதோ ஓர் மறதியில் சில்லறை வாங்க வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் இறங்கி சற்று தொலைவில் உள்ள ஓர் ஸ்வீட் கடையில் திண்பன்டங்களை வாங்கிவிட்டு பர்சை எடுத்த போதுதான் தெறிந்தது சில்லறை வாங்க மறந்துவிட்டோம் என்று, அவசர அவசரமாக ஸ்வீட் வாங்கியதற்க்கு காசை கொடுத்துவிட்டு போருந்து நிலையத்திற்க்கு போனால், நான் வந்த அந்த வண்டி சில நிமிடங்களுக்கு முன்புதான் கடலூர் புறப்பட்டு போனதாக சொன்னார்கள், சரி மொய் எழுதியாச்சு என நினைத்துக்கொண்டு வந்த வேலையை முடித்துக்கொண்டு கடலூர் வந்துசேந்தேன்.

மறுநாள் ஞாயிற்று கிழமை கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக டிக்கெட் முன்பதிவு செய்யும் அலுவலகத்திற்க்கு சென்று டிக்கெட்டை காண்பித்து இழந்த பணத்தை எப்படி வாங்குவது, அந்த நடத்துநர் யார் என கேட்க, அங்கிருந்த ஓர் செக்கர் என்னை பணிமனைக்கு சென்று கேட்கும்படி சொன்னார், மேலும் நடத்துனர்களை வெகுவாக குறைகூறிய அவர் சீட்டில் எதுவும் எழுதவில்லை ஆதலால் பணம் கிடைப்பது கஷ்ட்டம் என கூறியதும் அங்கிறுந்து நகர்ந்தேன், பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகில் உள்ள பணிமனைக்கு சென்று  காவலாளியிடம் விசாரிக்க அவர் ஓர் அறையை காட்டி அங்கு சென்று கேளுங்கள் என்றார், பின்பு அந்த அலுவளர்களிடம் முறையிட, முதலில் எதிற்மறையாக பதில் சொன்னார்கள், நான் இந்த சீட்டை வைத்து எழுத்துமூலம் புகார் அளிப்பேன் என்று சொன்னதும், என்னிடமிருந்த பயன சீட்டை வாங்கி அதில் உள்ள பஸ் நம்பரை வைத்து நடத்துனர் பெயரை கண்டறிந்து அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஒருவழியாக ஓர் 15 நிமிடம் கழித்தபின்பு என்னிடம் 87.50 ஐ கொடுத்தார்கள்.

எண்களால் எழத முடியாத அளவிற்க்கு பால லட்சம் கோடிரூபாய் ஊழல் நடைபெரும் இந்த நாட்டில், பொது ஜனங்களுக்கு அரசு எந்த திட்டத்தையும் முழுமையாகவும் சிறப்பாகவும் நடைமுறைப்படுத்துவதில்லை. இலவசம் அது இது என விளம்பர படுத்துவதோடு சரி, அரசு விளம்பரம் இல்லையேல் பிழைப்பு நடத்த முடியாது என்பதால் ஊடகங்களும் ஜால்லாராவாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை, அரசு ஊழியர்கள் அமைப்புகள், யூனியன் என பல சங்கங்கள் வைத்துக் கொண்டு பெரும்பாலானவர்கள் வாங்கும் சம்பளத்திற்க்கு வேலை செய்வதில்லை, தினமும் ஏதாவது போராட்டம் ஊர்வலம் என கழித்துவிட்டு மாத கடைசியில் அதுவும் 28ம் தேதியே சம்பள‌ம், இப்படியே போனால் நாடு எப்படி உருபடும், சீனாகாரன் ஏன் சீண்டமாட்டான் பாக்கிஸ்தான்காரன் ஏன் பாயமாட்டான்.


அறிவாளி என்று சொல்லி ஆட்சி செய்பவர்கள் மக்களை முட்டாளாக நினைக்கிறார்கள், என்ன செய்வது எப்போதோ படிதத ஓர் அன்னிய நாட்டு பழமொழி நினைவுக்கு வந்து தொலைகிறது " உன்னை ஒருவர் ஒருமுறை ஏமாற்றினால் அவன் மானங்கெட்டவன், அவனிடமே நீ மறுபடியும் ஏமாந்தால் நீ மானங்கெட்டவன்" இப்படி மக்களை தொடர்ந்து மானங்கெட்டவர்களாக ஆக்கும் அரசியல்வாதிகளிடமிருந்தும் ஆட்சியாளர்களிடமிருந்தும் ஏழைகளுக்கு எப்போது விடுதலை?
Readmore...
Saturday, November 13, 2010

நோபல் பரிசு பெற்ற பெண் அரசியல் தலைவரான ஆங் சான் சூகி விடுதலை!!

3 comments
 
நோபல் பரிசு பெற்ற பெண் அரசியல் தலைவரான மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி இன்று விடுதலை செய்யப்ப்பட்டார். மியான்மர் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயகத்துக்காகப் போராடிய ஜனநாயக தேசிய லீக் கட்சி (என்.எல்.டி.) தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலிலும், சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.


மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்களுக்கு, பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வந்தன. மேலும், அங்கு தேர்தல் நடத்தி ஜனநாயக ஆட்சி அமைக்க வேண்டும் என உலக நாடுகள் அந்நாட்டு இராணுவ அரசை வற்புறுத்தி வந்தன.


இந்நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யங்கூனில் உள்ள அவரது கட்சி அலுவலகத்துக்கு தொண்டர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
Readmore...
Tuesday, November 2, 2010

யார் பக்கிகள்?

1 comments
 
பக்கிகளைப் பற்றி சில நண்பர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள், பக்கி என்ற வார்த்தை ஓர் வசவுச் சொல்லாக நிலைத்துவிட்டது வருந்தத்தக்கது. பக்கி குஜராத் மாநிலத்தில் உள்ள ஓர் விளிம்புநிலை சமுகத்தின் பெயர், இந்த சமூகம் ஓர் உன்னதமான சிறப்பு பெற்ற ஓர் சமூகம், அதாவது அந்த காலத்தில் கால்நடைச் செல்வங்களை திருடுபவர்களின் பாதசுவட்டினை வைத்து திருடிய நாபர்களை கண்டறியும் ஒர் மதிநுட்பம் மிகுந்த கலையை பல காலமாக‌ செய்து வந்தவர்கள்தான் இந்த‌ பக்கிகள். திருடர்களின் பாத சுவடுகள் எதுவரைச் செல்கிறதே அதுவரைச் சென்று, அதே பாதஅடையாளம் உள்ளவர்களை கண்டறிந்து இழந்த பொருளை மீட்கும் பொருப்பு பக்கிகளுடையது, சில நேரங்களில் பலநாட்கள் கூட அவர்கள் காடு மெடுகள் என காலம் பார்க்காமல் நடக்க வேண்டியிருக்கும்.




தார்சாலைகள் மற்றும் செருப்பின் பயன்பாடு அற்ற அந்த நாளில் பாதசுவடுகளை கொண்டு திருடர்களை கண்டரியும் ஓர் நுண் அறிவு பெற்றவர்கள் பக்கிகள் தாங்கள் கண்ட ஓர் பாதசுவட்டை பல ஆண்டுகள் கூட நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என நான் எங்கோ எதிலோ படித்திருக்கிறேன், ஆனால் காலஓட்டத்தின் பக்கிகளின் பாரம்பறிய அறிவு சமூகத்திற்க்கு தேவைப்படாமல் போய்விட்டது. இதனால் அலைந்து திறிபவர்களை இங்கு பக்கிகள் என அழைப்பது சில இடங்களில் நடைமுறையில் உள்ளது. பக்கிகளைப் பற்றி மேலும் தெறிந்தால் நண்பர்கள் பகிர்ந்துகொள்ளவும்.
Readmore...
Wednesday, October 20, 2010

கலர் டி.வி மற்றும் பன்றி காய்ச்ல் இங்கு இலவசம்:

2 comments
 
"பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போடப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு, தடுப்பூசி இலவசம்' என, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி அறிவித்தார், ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


தமிஃப்ளு மற்றும் ரெலேன்சா ஆகிய இரண்டு எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப் படுகின்றன, இவை அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனையிலும் கிடைக்கும் என்று அறிவித்தார்கள்.

சரி, ஓர் தடுப்பூசி போட்டுக் கொள்ளளாமே என்று கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு சென்றேன், அங்கு தனி பிரிவு அமைத்து  ஓர் கந்து வட்டி காரன்போல் வசூல் நடத்துகிறார்கள். பெயர் மற்றும் முகவரியை குறித்துக்கொண்ட அவர்கள் ரூ.235 பனம் கேட்டார்கள், பின்பு ஓர் ஊசியைப் போட்டு ஜந்துநிடமாக சில்லரைக்கு அலையவிட்டார்கள்.

ரூ.235க்கு நான் ரசீது கேட்க, அதெல்லாம் கிடையாது அப்படி கொடுக்க அரசு எங்களுக்கு உத்தரவிடவில்லை என்றார்கள், ஓர் குண்டூசி வாங்கினால் கூட அதற்க்கு பில் தரவேண்டிய  நிலையில், என்னிடம் 235ஜ வாங்கிக்கொண்டு பில் இல்லை என்று சர்வ சார்வசாதாரனமாக சொல்கிறார்கள் இந்த பொருப்புள்ள அரசு பணியாளர்கள்.


மருத்துவ மனையில் பணியாற்றும் ஓர் நன்பரை சந்திக்கையில், அரசு பொது மருத்துவமனையில் நடக்கும் அவலத்தை விவறித்தார், 20 லட்சம் மதிப்புள்ள‌ சலவை எந்திரம் வந்து 4 மாதமாகியும் இன்னும் அது பொருத்தப்படவில்லை, பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அனுமதியில்லாமல் விடுப்பு எடுத்துக்கொள்வது என பலவற்றை வருதத்துடன் பகிற்ந்துகொண்டார்.

ஓரு ரூபாய் அரிசி, இலவச கலர்டிவி என பல்வேறு இலவசங்களை வழங்கும் இந்த அரசு ஏன் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை இலவசமாக வழங்க மறுக்கிறது, முதல்வர் விரைவில் இலவச தடுப்பூசி போடப்படும் என தெறிவித்து 50 நாட்கள் ஆகியும் கூட இன்றுவரை ஏன் அது நடைமுறைப் படுத்த‌வில்லை என்பது முதல்வருக்கே வெளிச்சம்.

இவற்றை கேட்க யாரும் முன்வராதது, மக்கள் மக்களாட்சியில் நம்பிக்கை இழந்துவிட்டதை காட்டுகிறது. கேட்க வேண்டிய எதிர் கட்சிகள் ஆர்பாட்ட அரசியலோடு ஓய்ந்து போகின்றன, ஆட்சியை வழிநடத்துவதில் எதிர் கட்சியின் பங்கே மிக அவசியமானது என்பதை மக்களும் புறிந்துகொள்ளவில்லை, மற்ற கட்சிகளும் புறிந்துகொள்ளவில்லை.
Readmore...
Friday, October 15, 2010

அறிஞர் அப்துல் கலாமும், கலைஞர் கருணாநிதியும்

4 comments
 
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளான இன்றைய தினத்தை (அக்டோபர் 15) ஐக்கிய நாடுகள் சபை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ளது என்பது இந்தியார் அனைவருக்கும் கிடைத்த பெருமை, குறிப்பாக தமிழர்களான நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் தமிழில் சிறந்த புலமைபெற்ற உலகம் போற்றும் இந்த தமிழனை உலக செம்மொழி மாநாட்டிற்க்கு அழக்கப்படவில்லை என்பது நாம் அறிந்த ஒன்றே.


நாடு போற்றும் தமிழனை, நாம் சுயநலத்திற்க்காக பயன்படுத்தும் மாநாட்டு மேடையில் ஏற்றி அவமானப்படுத்தக் கூடாது என்ற நல்ல என்னத்தால் கலைஞர் கருணாநிதி அதை செய்திருக்கலாம் என தோண்றுகிறது.

சரி அரசியல் மூதறிஞ்சர் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை ஐ.நா சபை எந்த நாளாக கொண்டாட நினைக்கும் என்பது உங்கள் கற்பனைக்கே!

தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் பிறந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் கல்வி கற்று நாட்டின் தலை சிறந்த அணுவியல் அறிஞராகவும், தொலைநோக்கு சிந்தனையாளராகவும் திகழும் அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக மிகச்சிறப்பாக பணியாற்றினார். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்களுக்கு முன்மாதிரி தலைவராக திகழும் அப்துல் காலம் உலகம் முழுவதும் இதுவரை 1 கோடி மாணவர்களை சந்தித்து உரையாற்றிவுள்ளார்.


மாணவர்கள் எதிர்காலத்தில் எப்படி வாழவேண்டும், நாட்டுக்கு எவ்வகையில் கடமையாற்ற வேண்டும் என்று தொடந்து திட்டங்களை வகுத்து, விளக்கம் கொடுத்து, எளிமையாக உரையாடி ஊக்கப்படுத்தி வரும் அப்துல் கலாம் போற்றப்படும் உலகத் தலைவர்கள் ஒருவராக திகழ்கிறார்.

இந்நிலையில் அவரின் பிறந்த நாளான அக்டோபர் 15 ஆம் தேதியை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ள ஐ.நா. சபை அதிகாரப்பூர்வமாக உலகம் முழுவதும் இந்த நாளை மாணவர் தினமாக கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அங்கீகாரம் இந்தியாவின் தலைவர் ஒருவருக்கு இதுவரை கிடைக்காத ஒரு சர்வதேச ஒரு சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore...