
மனுதர்மத்தின் வழியில் இந்திய நிலப்பரப்பை ஆட்சிசெய்த பல்வேறு அரசர்களையும் பிரபுக்களையும் மிரட்டி, விரட்டி இந்த தேசத்திற்கு இந்தியா என்று வடிவம் தந்த ஆங்கிலேயர்களே இந்து மதத்தின் வர்ணாசிரமப் பிரிவுகளைக் கண்டு சற்று விலகியே நின்றார்கள். மதம் என்ற பெயரில் மனித வளத்தைக் கூறுபோட்ட இந்திய சாதி, மதவாதிகள், நீக்ரோக்களை அடிமைப்படுத்தி ஒரு மிருகத்தை விடவும் கேவலமாக நடத்திய தென் அமெரிக்க பருத்தி விவசாயிகளுக்கு...