மலை,காடு,புற்புதறுகள் நிறைந்த ஜார்கன்ட் மாநிலத்தின் வரைபடம் ஓர் கசங்கிய காகிதம்போல் சுறுங்கி கிடக்கிறது, சிறிய மாநிலமானாலும் தேசிய அளவில் பெரும் எதிற்பார்போடு தேர்தல் நடந்தது, எப்பொதும் போல காங்ரஸ் கனியை பறித்துவிட துடித்தது, ஆனால் அந்த கரடுமுரடான காடுகளைப் போல அந்த மன்னின் மைந்தன் சிபுசோரன் ப.ஜ.க துனையுடன் அரியனையேறிவிட்டர், இதில் ஆத்திரமடைந்த காங்கிரஸ் இஷ்டத்திற்க்கு ப.ஜ.கவை திட்டி தீர்த்துவிட்டது, இருப்பினும் தன் நிலையில் எந்தவித மாற்றமுமின்றி சிபுசோரன் ஆட்சியமைக்க ப.ஜ.க உதவியாது ஓர் அறிய நிகழ்வுதான்.ஜார்கன்டின் முன்னால் முதல்வர் மதுகொடா நாலாயிம் கோடி ஊழலில் சிக்கி சின்னாபின்னமாகிய செய்தி முடிவதற்க்குள், மற்றொரு குற்றவளி முதல்வராயிருக்கிறார்.
சிபுசோரன் போலிஸ், வழக்கு, சிறை என எல்லாவற்றையும் பார்த்தவர், பல வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில் முதல்வரான சோரன் இனி வழக்குகளின் போக்கையே மாற்றிவிடுவார் என்பதில் சந்தேகமே இல்லை, வழக்கம்போல் அதிகார சாட்டையால் சனநாயகத்தை வாட்டியெடுத்துவிடுவார்.
கொலை செய்தவனைக்காட்டிலும் ஊழல்செய்தவனுக்கு சீனாவில் உடனடி தன்டனை கொடுத்து மரணத்தை முத்தமிட வைத்துவிடுகிறார்கள், ஆனால் இந்தியாவில் விசானை கமிஷன் வைத்தே காலத்தைக் கடதிவிடுகிறார்கள், இதனால் ஊழல் பெருச்சாலிகளின் மடியிலேயே நாடு இருக்கிறது.
கற்பனைக்கெட்டாத வகையில் ஊழல்செய்து பணத்தில் மிதக்கும் ஊழல் பெருச்சாலிகளுக்கு இந்த மக்கள் ஓட்டுபோட வெட்கப்படுவதே இல்லை, சில லட்சம் ஊதியம் பெரும் எம்.பி பதவிக்கு பல ஆயிரம் கோடி செலவிடுவது சனநாயகத்தை காக்க அல்ல, சிலறின் சொத்துக்களை காக்க மட்டும் என்பதை மக்கள் ஏன் மறந்துவிடுகிறார்கள்?
Subscribe to email feed





