Pages

Banner 468

Subscribe
Saturday, May 30, 2009

கொத்தடிமைகளாய் வாழும் த‌மிழ‌ர்க‌ள்

0 comments
 

நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகிறது, மக்களாட்சி நாடைபெறுகிறது மேலும் எண்ணற்ற அரசியல் சமூக மற்றும் பொருளாதார சீர்திறுத்தங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன,ஆனால்ஏழைகளின் துயர்தீர்க்க இவைஎதுவும்உதவுவாதாய் தெறியவில்லை.


கடந்த வெள்ளியன்று (29.05.2009)தின்டிவனத்தை அடுத்த செஞ்சி தாலுக்காவில் உள்ள தனியார் கல்குவாரியில் கொத்தடிமையாய் இருந்த சுமார் 26 மக்களை தின்டிவனம் கோட்டாச்சியர் மீட்டு அவர்களுக்கு தலா 1000 மறுவாழ்விற்க்காக வழங்கப்பட்டு சொந்த கிராமத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மே30ம் தேதி தினமணி நாள் இதழ் செய்திவிளியிட்டுள்ளது. ஆனால் அந்த தனியார் கல்குவாரி யாருடையது, அந்த முதலாலி மீது என்ன வழக்கு தொடரப்பட்டது போண்ற எந்த குறிப்பும் இல்லை.


இந்தியா ஒளிர்கிற‌து, த‌மிழ‌க‌ம் த‌ழைக்கிறது என‌ வ‌ர்த்த‌க‌ விள‌ம்ப‌ர‌ம் செய்யும் அர‌சிய‌ல் வாதிக‌ள் அடித்த‌ட்டு ம‌க்க‌ளின் பிற‌ச்ச‌னையை ஓர் பொருட்டாக‌வே எடுத்துக்கொள்வ‌தில்லை, த‌மிழ‌க‌த்தில் சுமார் ஒரு ல‌ட்ச‌த்திற்க்கும் மேற்ப‌ட்ட‌ குடும்ப‌ங்கள் செங்கல் சூலை, ப‌ட்டாசு தொழிற்சாலை, தோட்ட‌ வேலை, செராமிக் வேலை போண்ற‌ ப‌ல்வேறு தொழிற்சாலையில் கொத்த‌டிமைக‌ளாக‌ உள்ளார்க‌ள் என‌ ஓர் ஆய்வ‌ரிக்கை தெறிவிக்கிற‌து. இந்த‌ நாட்டு ம‌க்க‌ளின் வ‌ரிப்ப‌ன‌த்தை ஆயிர‌ம் ஆயிர‌ம் கோடிகளாய் ஏய்து ச‌க‌ல‌ வ‌ச‌தியோடு வ‌ளம்வரும் அரசியல் முதலாலிகள் ஏகபோகத்துடன் வாழ‌, குடும்ப‌ செல‌விற்காக‌ தாம் கைநீட்டி வாங்கிய‌ ஒருசில‌ ஆயிர‌த்திற்க்காக‌வா ஓர் குடும்ப‌ம் வாழ்நாள் முழுதும் கொத்த‌டுமையாய் வாழ்வ‌து?


ஏழைக‌ளாய் பிற‌ந்துவிட்ட‌தை த‌விர‌ இவ‌ர்க‌ள் செய்த‌ பாவ‌மென்ன‌? க‌ன‌விலும் தீங்குநினைக்காது, விதியை நினைத்து உயிர்வாழும் இந்த‌ ஊமை ம‌க்களின் துய‌ர் வார்த்தைக‌ளால் எழுத‌ முடியாதவை. எல்லாவ‌ற்றிற்கும் ஓரே வ‌ழி க‌ல்விதான் என்றாலும் கொத்த‌டிமைகளின் குழ‌ந்த‌க‌ளும் அங்கேதான் அடிமையாய் வாழ‌வேண்டும். உடல் ம‌ற்றும் ம‌ன‌ ரீதியான‌ தாக்குத‌லோடு பாலிய‌ல் வ‌ன்புண‌ர்சிக்கும் ஆளாகும் இம்ம‌க்க‌ளின் வாழ்வு ரோமபுரியில் அடிமைகளாய் இருந்த ஸ்பார்டகன்ஸ் வாழ்வை நினைவுபடுத்துகிறது, ஓர் போர்கைதிகளுக்கு நிகரான துன்பிய‌ல் ப‌ட‌ல‌த்தைக் சும‌ந்துள்ளது.

த‌ம் சொந்த‌ ம‌ண்ணிலேயே சுர‌ண்ட‌ப்ப‌ட்டு அடிமைக‌ளாய் வாழும் இந்த கொத்தடிமைகளின் நிலையும், ஈழ‌த்தில் சிங்க‌ள‌ இன‌ வெறிய‌ர்காளால் சித‌ற‌டிக்க‌ப்ப‌ட்டு நாடிழ‌ந்து, வீடிழ‌ந்து வாழும் எம் தாய்வாழி ம‌க்க‌ளின் நிலையும் ஏற‌க்குறைய‌ ஓன்றே!


இல‌ங்கை த‌மிழ்ம‌க்க‌ளின் துய‌ர்போக்க‌ த‌மிழ்நாட்டில் தீக்குளிக்கிறார்க‌ள், தீர்மான‌ம் போடுகிறார்க‌ள் ம‌ற்றும் ஊர்வ‌ல‌ம், உண்ணா நிலை என‌ அத்துனை வ‌ழியையும் ப‌ய‌ன்ப‌டுத்துகிறார்க‌ள் ஆனால் இதே த‌மிழ்நாட்டில் கொத்த‌டிமைக‌ள், ம‌னித‌க‌ழிவை ம‌னித‌னே சுத்த‌ம்செய்வ‌து, குழ‌ந்தை தொழிலாளர்க‌ள் என மிக கொடுமையான ச‌மூக‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்கு இந்த‌ சேகுவேராக்க‌ள் ஏன் செவிசாய்ப‌தில்லை? அட‌ உங்க‌ள் சாதியையா நாங்க‌ள் ம‌ற‌க்க‌ச் சொல்லுகிறோம்? தமிழ‌ர்க‌ளாலேயே சிறைபிடிக்க‌ப்ப‌ட்ட இந்த‌ கொத்தடிமை த‌மிழ்க‌ளை குறைந்த‌ப‌ட்ச‌ம் ம‌னித‌க‌ளாகவாது உங்க‌ள் முத‌லாலிக‌ள் வாழ‌விட‌க்கூடாதா?


கொத்தடிமைமுறை இல‌ங்கையின் இன‌ பிற‌ச்ச‌னைக்கு இனையான‌தென‌ நான் இங்கு வாத‌ம் செய்ய‌வில்லை, ஆனால் தமிழகத்தில், தமிழர்களால் சிறைபிடிக்க‌ப்ப‌ட்ட இந்த‌ கொத்தடிமை சமூகத்திற்க்கு ஏன் த‌மிழ் ஆர்வ‌ள‌ர்க‌ளும் ந‌டுநிலைவாதிக‌ளும் குற‌ள் கொடுப்ப‌தில்லை?


இவை வெறும் மேலோட்ட‌மான‌ கேள்விக‌ள்தான் ஆனால் இத‌ற்க்கான‌ ப‌தில்க‌ள் மிக‌ நூட்ப‌மானவை, மாபெறும் வ‌ஞ்ச‌க‌ வாறலாற்று பின்ன‌னி கொண்ட‌து. வ‌ட‌நாட்ட‌வ‌ர்க‌ள் த‌மிழ‌க‌த்தில் இந்தியை புகுத்திய‌ போது இங்கு திராவிட‌ இய‌க்க‌த்த‌வ‌ர்க‌ள் த‌ண்ட‌வாள‌த்தில் த‌லைவைத்து த‌மிழ‌க‌ம் முழுதும் போராட்ட‌ம் ப‌ல‌ ந‌ட‌த்தினார்கள், ஆனால் அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ள் இன்று ஆங்கில‌ வ‌ழி க‌ல்வியோடு இந்தியையும் ப‌யின்று க‌ணிப்பொறித் துறையில் காலாட்டிக் கொண்டு உள்நாட்டிலேயே டால‌ர் ச‌ம்பாதிக்கிறார்க‌ள்,


அந்தோ ப‌ரிதாப‌ம்! அவ‌ர்ளைவிட‌வும் அதிக‌ எண்ணிக்கையில் த‌டிய‌டிப்ப‌ட்டு, குன்ட‌டிப்பட்டு இந்தி எதிர்த்த‌ குலங்கள் இன்னும் கொத்த‌டிமையாக‌ வாழ்ந்துவ‌ருகிறார்க‌ள். இந்தி த‌மிழ்நாட்டை ஆண்டால் நிலமற்ற இங்குள்ள ஏழைகள் வடநாட்டிற்க்கு பிழைக்க சென்றுவிட்டால் தமிழக நில முத‌லாலிக‌ளுக்கு கொத்த‌டிமை செய்ய‌ தெலுங்க‌னா வ‌ருவான்? என‌ யோசித‌ இந்த‌ குள்ள‌ந‌ரி த‌ந்திர‌த்தால் இன்னும் இந்த‌ இழிநிலை தொட‌ர்கிற‌து.


இருமொழிக்கொள்கை கொண்ட‌ த‌மிழ் நாட்டில் அர‌சு ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளின் ஆங்கில‌ அறிவை வ‌ள‌ர்க்க‌ எந்த‌ அர‌சும் திட்ட‌ம் வ‌குக்க‌ வில்லை, ஏனென்றால் சேரியில் இருப்ப‌வ‌னுக்கு ஆங்கில‌ம் தெறிந்துவிட்டால் மாடியில் இருப்ப‌வ‌னுக்க‌ல்லவா பிர‌ச்ச‌னை என‌ மிக‌ தீர்க்க‌மாக எண்ணி , சேரியில் வாழ்ப‌வ‌னுக்கு எல்லா வழியையும் மூடிம‌றைத்து, மொட்டையடித்து ப‌ட்டை நாம‌த்தையால்ல‌வா சாத்தினார்க‌ள் இந்த‌ நாத்திக‌ சிகாம‌ணிக‌ள்!


கொத்த‌டிமைக‌ள், ம‌னித‌க‌ழிவை ம‌னித‌னே சுத்த‌ம்செய்வ‌து, குழ‌ந்தை தொழிலாள‌ர்க‌ள், சாதிய‌ ம‌ற்றும் பாலிய‌ல் வ‌ன்முறைக‌ள் என‌ த‌மிழ‌க‌த்தில் த‌லைவிரித்தாடும் இந்த‌ அடிமைக‌ள் நிலையை இங்கு வாழும் ச‌க‌ அடிமைக‌ளே க‌ண்டுகொள்ளாத‌ நிலை நீடிக்கிற‌து. வெறும் நோயில்லாம‌ல் வாழ்வ‌து ம‌ட்டுமே ஆரோக்கிய‌மான‌ வாழ்வு இல்லை, ஒரு ம‌னித‌ன் உட‌ல் ரீதியாக‌வும், ம‌ன‌ ரீதியாக‌வும் ஆரோக்கிய‌மாக‌ வாழ்வ‌தே ந‌ல்வாழ்வு என‌ உல‌க‌ சுகாதார‌ நிறுவ‌ன‌ம்(WHO) கூறுகிற‌து. ஆக‌ ஒட்டுமொத்தத்தில் ந‌ம்மில் 80 ச‌த‌ ம‌க்க‌ள் இந்த‌ நாட்டில் ந‌ல்வாழ்வு வாழ‌வில்லை என்ப‌து தெளிவு. அடித்த‌ட்டு ம‌க்க‌ளின் பிர‌ச்ச‌னைகளை முன்னிறுத்த‌ இங்கு அமைப்புக‌ள் இல்லாத‌தும், இதுபோண்ற‌ த‌னிம‌னித‌ குற‌ள்க‌ள் த‌க‌ர்ந்துவிடுகிற‌து.


ச‌ம‌த‌ர்ம‌ ச‌ட்ட‌ம் எழுத‌ இனி அம்பேட்க‌ர் பிற‌க்க‌ப்போவ‌தில்லை, க‌றுப்ப‌னும் வெள்ளைய‌னும் க‌ல‌ந்துவாழ‌ க‌ன‌வுக‌ண்ட‌ லூத‌ர் கிங்கும் வ‌ர‌ப்போவ‌தில்லை என‌ சிங்குக‌ள் நினைத்த‌தால்தான் இன்று ப‌ஞ்சாப்பில் இர‌த்த ஆறு ஓடுகிற‌து, ஆஸ்திரியாவில் தேள்க‌டிக்க‌ அமிர்த‌ர‌சில் நெடியேறுகிற‌துதென்றால் அது ப‌ஞ்சாபில் உள்ள‌ தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் த‌ன்மான‌த்தைய‌ல்ல‌வா ப‌றைசாற்றுகிற‌து? ஆனால் இதெல்லாம் ஏதோ அடுத்த‌ க‌ண்ட‌த்தில் ந‌டைபெறுவ‌தாக‌ எண்ணிக்கொண்டிறுந்தால் நாம் விடுத‌லையை வெல்வ‌த‌ற்க்கும் த‌குதியான‌வ‌ர்க‌ளில்லை, விடுத‌லை என்ற‌ வார்த்தையை சொல்வ‌த‌ற்க்கும் த‌குதியான‌வ‌ர்க‌ளில்லை!


க‌ண்முன்னே ந‌ட‌க்கும் இதுபோண்ற‌ அடிப்ப‌டை ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளை க‌ண்டும் காணாம‌ல் இருப்ப‌தென்ப‌து பாதிக்க‌ப்ப‌டும் இம் ம‌க்க‌ளை வெறுப்ப‌த‌ற்க்கு ச‌மமான‌த‌ல்ல‌வா?
Readmore...
Wednesday, May 13, 2009

போலி மொழி இன‌ வாத‌ம்

0 comments
 

எல்லா தேர்தலிலும் புறக்கனிக்கப்படுவது தலித் மக்கள் மட்டுமே. வெறும் வாக்கு வ‌ங்கிக‌ளாக‌வே த‌லித்துக‌ளை அர‌சிய‌ல்வாதிக‌ள் பார்பதால் இம்மக்களின் விடுதலை வெறும் ஏட்டலவே உள்ளது, இதற்க்கு எண்ணற்ற காரணங்கள் இருந்தாலும், தலித மக்களின் சமூக விடுதலைக்கு பெரும் தடைக்கல்லாக‌ இருப்பது அரசியல் அதிகாரம் மட்டுமே.

தெற்க்காசிய பிராந்தியத்தில் எங்குமே இல்லாத சமூக‌ அமைப்பு இந்த நாட்டில் நிலைத்திருப்பதும், முதலாலித்துவ‌ அர‌சிய‌ல் புரோக்க‌ர்க‌ளால் இந்த‌ நாட்டின் ச‌ன‌நாய‌க‌ம் உயிர் இழ‌ந்த‌ பின்னும் தேர்தல் எனும் சடங்கு அரங்கேறுவதற்க்கும் நம் நாட்டின் அரசியலமைப்பே காரணம், இந்தகைய அரசியலமைப்பை வடிவமைத்த டாக்ட‌ர் அம்பேட்க‌ரும் அத‌ற்க்கு வாய்ப‌ளித்த‌ நேருவும் போற்றுதலுக்குறியவர்கள்.

சமூகத்தின் எல்லா நிலைக‌ளிலும் தீண்டாமையை நிலைநிறுத்த‌ விரும்பிய காந்தி போண்ற‌ ம‌த‌வாத‌ ச‌க்திக‌ளிட‌மிருந்து த‌லித் ம‌க்க‌ளை காப்பாற்ற‌ வ‌லிமையான‌ ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ள் தேவை என உண‌ர்ந்த‌ டாக்ட‌ர் அம்பேட்க‌ர் த‌ன்னுடைய மிக க‌டின‌ உழைப்பால் ஏற்ப‌டுத்திய‌ இச் ச‌ட்ட‌ங்க‌ளே இந்தியாவில் வாழும் ஒவ்வொரு த‌லித் ம‌க்களின் பாதுகாப்பு அர‌ன். துர‌திஷ்ட‌வ‌ச‌மாக‌ இன்று ச‌ட்ட‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌மும், அதிகார‌ வ‌ர்க‌த்திட‌மும் உள்ளதால் நீதிம‌ன்றத்தில் கூட‌ த‌லித் ம‌க்க‌ளுக்கு அனிதீ இழ‌க்க‌ப்ப‌டுகிற‌து.

தென்னிந்தியாவை விட கல்வி பொருளாதாரத்தில் பின் தங்கிய வட இந்திய தலித் மக்கள் தங்களுக்குள்ள அரசியல் அதிகாரத்தை மிக வலிமையாக பயன்படுத்தி வருகிறார்கள், குறிப்பாக உத்திரபிரதேசத்தில் தலைவர் கன்ஷிராம் ஏற்படுத்திய ப‌குசன் சமாஜ் கட்சி இன்று நான்காவது முறையாக ஆட்சியை கைப்பற்றி சகோதரி மாயவதி ஆட்சி அதிகாரம் செய்துவருகிறார், இதுமட்டுமலாமல் பிரதமர் பதவியே என் இறுதி லட்சியமென சபதமெடுத்து உழைத்தும் வருகிறார்.

ஆனால் தமிழகத்திலோ நிலமை தலைகீழ், ஓரு எம்.பி சீட்டிற்கே நாம் திராவிடக் கட்சிகளின் காலில் விழவேண்டியிருகிறதே ஏன்? காங்ரஸ் கட்சி துவங்கும் முன்பே தலித் அரசியல் பேசிய தமிழக‌ தலித் மக்கள் இனறு வரை ஒரு நிலையான அரசில் கட்சியை நடத்த முடியவில்லையே ஏன்?

1970 வாக்கில் காங்கிர‌ஸில் இருந்து விலகி தனிகட்சி துவக்கிய ஐயா இளயபெருமாள் இரண்டு சட்டமன்ற தொகுதியை கைப்ப‌ற்றியும் கூட‌ நிலைத்து நிற்க்க‌ முடிய‌வில்லை. தென் த‌மிழ‌க‌த்தில் புதிய‌ த‌மிழ‌க‌த்தை துவ‌க்கிய‌ டாக்ட‌ர் கிருஷ்ண‌சாமிக்கும் இதே நிலை. வ‌ட‌ ப‌குதியை பொருத்த‌வ‌ரை விடுத‌லை சிறுத்தைக‌ள் கட்சி தற்போது இரண்டு சட்டமன்ற தொகுதியேடு உள்ளது. மேற்கூறிய‌ க‌ட்சிக‌ள் அனைத்தும் இதுநாள் வ‌ரை த‌னி சின்ன‌த்தைப் பெற‌முடிய‌வில்லை என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இக்க‌ட்சிக‌ளால் த‌லித் ம‌க்க‌ளின் 40 ச‌த‌ ஓட்டுக்க‌ளை கூட‌ பெற‌முடிய‌வில்லையே ஏன்?

சாதிய உட்பிரிவு, எண்ணற்ற குட்டி குட்டி கட்சிகள்/அமைப்புகள் ஆதலால் ஒன்றுசேர முடியவில்லை என சொண்ணால் உத்திரப்பிரதேசத்தில் எப்படி சாத்தியமானது? அட நாம் இங்கு ஆட்சி அமைக்க வேண்டாம் குறைந்தது தலித் வாக்குகளையாவது ஒன்றுசேர்களாமே! எது நம்மை தடுக்கிறது என சிந்திக்க வேண்டாமா?

தமிழகத்தில் உள்ள தலித் மக்களின் வளர்சியை பாதிப்பது நம்மில் படிந்துகிடக்கின்ற‌ பெரியாரிச மற்றும் மொழி இன வாத சிந்தனையே! த‌லித் ம‌க்களின் விடுத‌லையை உறுதி ப‌டுத்திய‌ டாக்ட‌ர் அம்பேட்க‌ர் புத்த‌ மத‌த்தில் இணையும் முன்பே த‌மிழ‌க‌ த‌லித்துக்க‌ள் இங்கு புத்த மத‌த்தையும் அதன் தத்துவத்தையும் போதிக்க துவங்கிவிட்டார்கள். ப‌ண்டித‌ர் அய்யோத்திதாச‌ரின் சிந்த‌னையை உள்வாங்கி ப‌குத்தறிவு ப‌ட்ட‌த்தை கூட்டிக் கொண்ட‌ பெரியாரை இங்கு த‌லித்துக்கள் எதிர்த்து கேள்வி கேட்ட‌தில்லை, இன்றுவ‌ரை அவ‌ரையே விடுத‌லையின் உறுவாக‌ பார்த்துவ‌ருகிறார்க‌ள். ஆனால் இந்திய‌ த‌லித் ம‌க்க‌ளின் விடுத‌லைக்கு பாடுப‌ட்ட‌ டாக்ட‌ர் அம்பேட்க‌ரையே வ‌ட‌நாட்ட‌வ‌ர் என்று க‌ருதும் சில‌ த‌லித் மொழி இன‌ வாதிக‌ள் தான் இங்கு த‌லித் விடுத‌லைக்கு பெறும் த‌டைக்கல்லாக‌ இருக்கிறார்க‌ள்.

தின‌க்கூலியை உய‌ர்த்திக் கேட்டதிற்க்கு 50 த‌லித் ம‌க்க‌ளை கூன்டோடு தீயிட்ட‌ இந்த‌ தமிழ் நாட்டில் த‌லித் விடுதலைகாக‌ பாடுப‌டாம‌ல் மொழி இன‌ வாதம் பேசுகின்ற‌ த‌லித் கூட்ட‌ம்தான் எரிகிற‌ சாதிய‌ தீயில் உண்மையிலேயே எண்ணையை ஊற்றுப‌வ‌ர்க‌ள்.

வாய்கிழிய‌ த‌னிஈழ‌ம் பேசிய‌ சீமான் இன்று செய‌ல‌லிதாவிட‌ம் த‌னி ஈழ‌ம் பெற்றுதாறுங்க‌ள் தாயே என‌ மண்டியிடுகிறார், காங்ர‌ஸ் கூட்டணியை எதிர்த்து பிர‌ச்சார‌ம் செய்கிறார், க‌ட‌ந்த‌ ஐந்தான்டுகால‌ம் த‌லித் விடுத‌லையை ஒதுக்கிவைத்துவிட்டு த‌னி ஈழ‌த்திற்க்காக‌ போராடி வ‌ரும் திருமாவை ஆத‌ரித்து ஏன் பிர‌ச்சார‌ம் செய்யவில்லை? இதே இந்த சீமான் கடந்த தேர்தலில் பா.ம.க வை ஆதரித்து பிர‌ச்சார‌ம் செய்தார் என்பதை நிணைவில் கொள்ளவேண்டும்.

முற்போக்கு சிந்தணைவாதி, பெரியாரிசம் என சொல்லிக்கொண்டு இவர்கள் தலித்துக்கள் காலைமட்டுமே வாருகிறார்கள் என்பாதை ஏன் த‌லித் மொழி இன‌ வாதிக‌ள் உண‌ர்வதில்லை? இந்த‌ சீமான் ஓர் உதாரண‌மே, இதுபோல் எண்ண‌ற்ற‌ சீமான்க‌ளும், பார‌தி ராசாக்க‌ளும் ப‌ல்வேறு வேட‌ங்க‌ளில் த‌லித் இன‌ ஒழிப்பை மைய‌ப்ப‌டுத்தி மொழி இன‌ வாதிக‌ள் என்ற‌ பெய‌ரில் இய‌ங்கி கொண்டிருக்கிறார்கள். தின்னிய‌த்தில் ம‌ல‌ம் தினித்த‌து இவ‌ர்க‌ளின் சாகோதர‌ர்கள் தான் என்ப‌தை ம‌ற‌ந்துவிட‌க்கூடாது.

கார்ல் மார்க்ஸின் பொதுவுட‌மை த‌த்துவ‌ம் இந்த‌ ம‌ண்ணிற்கேற்ற‌த‌ல்ல‌ என‌ விம‌ர்சித்து, த‌லித் ம‌க்க‌ளின் விடுத‌லையை ம‌ட்டுமே மைய‌ப்ப‌டுத்தி போராடிய‌ டாக்ட‌ர் அம்பேட்க‌ரின் எழுத்துக்க‌ளை உள்வாங்காத‌ எவ‌ரும் மொழி இன‌ வாத‌ சிந்த‌னையில் இருந்து விடுப‌ட‌ சாத்திய‌மில்லை. த‌லித் என்ற‌ முக‌த்தில் த‌மிழ‌ன் என்ற‌ முக‌மூடியயை அணிந்தால் முன்னேறிவிடாலாம் என்ற‌ எண்ண‌ம் சிறுபிள்ளைத்த‌ன‌மான‌து,கடைசி மனிதனின் விடுதலைக்காக‌ போராடாவேண்டிய‌வர்க‌ள் ஏசி காரைக‌ண்ட‌தும் முனைம‌ழுங்கி போவ‌து இய‌ல்பே! ஆனால் விடுத‌லை வேட்கை இருப்ப‌வ‌ர்களால் ம‌ட்டுமே தொடர்ந்து விடுத‌லைக்காக‌ பாடுப‌ட‌முடியும் என்பதே உல‌க‌ விடுத‌லை இய‌க்க‌ வர‌‌லாறு உணர்த்தும் பாடம்.
Readmore...