Pages

Banner 468

Subscribe
Sunday, January 31, 2010

கோவையில் தீண்டாமைக்கு துணைபோன பெரியாரும், பிள்ளையாரும்

0 comments
 










நாகரிக வாழ்விற்கு நான்கு சுவர்கள் அவசியம், ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களை பிரித்து வைப்பதற்க்கு தீண்டாமை சுவர்கள்கள் அவசியமா?

உத்திரபுரத்தை அடுத்து தற்போது கோவையிலும் தீண்டாமை சுவர் எழுப்பி தலித் மக்களை நடமாட விடாமல் கடந்த 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள‌தை தற்போது தற்காலிகமாக உடைத்தெறிந்திருக்கிறது அரசு.

கோவை 10வது வார்டில் உள்ள பெரியார் நகரில் 58 தலித் குடும்பங்கள் வசிக்கின்றன, இவர்கள் கலணிக்கு அடுத்துள்ள பிரதான காமராஜர் சாலைக்கு செல்ல முடியாவன்னம், காலணியையும் காமராஜர் சாலையும் இனைக்கும் ஜீவா சாலையின் குறுக்கே 30 அடி நீலத்தில் சாதி இந்துக்களால் 1990ல் கட்டப்பட்டதுதான் இந்த பெரியார் நகர் தீண்டாமை சுவர்.

பெரியார் நகரில் வசிக்கும் தலித் குடும்பங்ககுக்கு 1989ல் அரசு வீட்டுமனை கொடுத்தது, இன் நகர் துவங்கும் இடத்தில் பெரும்பாலும் சாதி இந்துக்கள்தான் வசித்துவருகிறார்கள், ஆகையால் 1990ல் காலணி துவங்கும் இடத்தை மறைக்கும் விதமாக ஜீவா சாலையின் குறுக்கே ஓர் வினாயகர் சிலையை வைத்து சிறிய குடிசை எழுப்பினார்கள், பின் அதன் பின்புறம் 30 அடி நீலத்திற்க்கு சுவர் எழுப்பிவிட்டார்கள், ஆக சாதி இந்துக்கள் தெருவில் இருந்து பார்த்தால் காலணி தெரியது, அதே வேலையில் காலணி மக்களும் ஜீவா சாலையை கடந்து காமராஜர் சாலையை அடைய முடியாது, என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவிற்கினங்க, மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு அத்துமீரலை உறுதிசெய்தபின், தீண்டாமை தடுப்பு சுவரை பெக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்க முற்படும் போது அப்பகுதி ஆதிக்க சாதி பெண்கள் தீண்டாமை தடுப்பு சுவரை இடிக்க விடாமல் தடுக்க முயற்சித்ததால் பலத்த காவல் பாதுகாப்போடு அச் சுவர் தற்காலிகமாக இடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்லாது இந்த தேசம் முழுக்க இது போண்ற எண்ணற்ற தீண்டாமை தடுப்பு சுவர்கள் தலித் மக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒடுக்கிகொண்டிறுப்பது காலம் காலமாக நடந்துவரும் தொல்குடி மக்களுக்கு எதிரான நிகழ்வுதான்.

உத்திரபுரத்தில் கட்டப்பட்ட தீண்டாமை தடுப்பு சுவருக்கும், கோவை பெரியார் நகரிலுள்ள தீண்டாமை தடுப்பு சுவருக்கும் பெரிய வித்தியாசமில்லை, இரண்டின் நோக்கமும் தலித் மக்களை தங்களுடைய வசிப்பிடத்திலிருந்து பிரிக்கவேண்டும், மேலும் அவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்த வேண்டும் என்ற மிக கீழ்தரமான, கேவலமான எண்ண‌த்தோடு எழுப்பப்பட்டதே தவிர வேறோன்றும் காரண‌மில்லை.

ஓர் மாந‌கரிலேயே இப்படி தீண்டாமை தடுப்பு சுவரை எழுப்பி தங்களுடைய ஆதிக்கத்தை சாதி இந்துக்களால் நிலை நாட்ட முடிகிறதென்றால் உத்திரபுரத்தின் ஏன் நிகழாது? வெரும் தீண்டாமை தடுப்பு சுவர் மட்டும் கட்டினால் பிறச்சனை ஏற்படும் என்பதற்க்காக, மிக நூதனமாக காலணி துவங்கும் ஜீவா சாலையின் குறுகே ஓர் பிள்ளையார் கோயில் கட்டி அதன் பின் புறம் தீண்டாமை தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது, இப்படி மிக திறமையாக தீண்டாமையை கடைபிடிக்கும் இவர்களுக்கு ஏன் ஜனாதிபதி விருது வழங்கி கெளரவிக்க கூடாது?

நாட்டில் மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் ஆதிக்க சாதி மக்கள் ஏழைமக்களை மீன்டும் மீன்டும் சுரன்டி கொழுத்து வருகிறார்கள் என்பதற்கு மேற் கண்ட இரண்டு தீண்டாமை தடுப்பு சுவர்களும் சாட்சி.

மனுதர்மத்தால் பெரும்பான்மையான் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்க்காகவே, பெரியார் கடவுள் எதிப்பு இயக்கம் நடத்தினார், ஆனால் அவரின் பெயரில் நகர் அமைத்து, அவர் உடைத்தெரிந்த அதே வினாயகர் சிலையை வைத்தே மனுதர்மத்தை நிலைநாட்டும் இவர்களுக்காகத்தான் பெரியார் கடவுள் எதிப்பு இயக்கத்தையே நடத்தினார் என்பதை இவர்கள் அறிய முற்படதது மிக துரதிஷ்ட்டவசமானது.

ஓர் மனிதனின் சுதந்திரத்தைப் பரிக்கும் யாருக்கும் சுதந்திரத்தைப் பற்றி பேச உரிமையேயில்லை, ஆதிக்க சாதிகள் பார்பனனிடமிருந்து விடுபட்டது போல், இன்று தலித் மக்கள் ஆதிக்க சாதிகளிடமிருந்து விடுபட முயற்சிக்கும் போது எண்ண‌ற்ற தீன்டாமை சுவர்கள் எழப்பப்படுவது வளர்சிக்கு வழிவகுக்காது. நிலங்களையும், வளங்களையும் பகிர்ந்தலிக்காமல் கழகங்கள் மிக கவனமாக, திட்டமிட்டே தலித் மக்களை ஒடுக்கிவருவது இந்த மண்ணின் பெருமையை குலைக்கும் முயற்சி.

இதுபோண்ற கழகங்களின் மலட்டு தத்துவங்களால் கைகள் கட்டப்பட்ட சில தமிழக தலித் மக்கள்/தலைவர்களால் தான் இந்த மண்ணில் இன்னும் தீண்டாமை தடுப்பு சுவர் நிலைத்து நிற்கிறது, இல்லையேல் என்றாவது ஒருநாள் பெர்லின் சுவர்போல் இடித்து நோறுக்கப்படுவது தீண்டாமை தடுப்பு சுவர் மட்டுமல்ல சாதி இந்துக்களின் ஆதிக்க மனப்பான்மையும்தான்.

News source: http://www.hindu.com/2010/01/31/stories/2010013157880100.htm
Readmore...