முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளான இன்றைய தினத்தை (அக்டோபர் 15) ஐக்கிய நாடுகள் சபை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ளது என்பது இந்தியார் அனைவருக்கும் கிடைத்த பெருமை, குறிப்பாக தமிழர்களான நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் தமிழில் சிறந்த புலமைபெற்ற உலகம் போற்றும் இந்த தமிழனை உலக செம்மொழி மாநாட்டிற்க்கு அழக்கப்படவில்லை என்பது நாம் அறிந்த ஒன்றே.
நாடு போற்றும் தமிழனை, நாம் சுயநலத்திற்க்காக பயன்படுத்தும் மாநாட்டு மேடையில் ஏற்றி அவமானப்படுத்தக் கூடாது என்ற நல்ல என்னத்தால் கலைஞர் கருணாநிதி அதை செய்திருக்கலாம் என தோண்றுகிறது.
சரி அரசியல் மூதறிஞ்சர் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை ஐ.நா சபை எந்த நாளாக கொண்டாட நினைக்கும் என்பது உங்கள் கற்பனைக்கே!
தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் பிறந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் கல்வி கற்று நாட்டின் தலை சிறந்த அணுவியல் அறிஞராகவும், தொலைநோக்கு சிந்தனையாளராகவும் திகழும் அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக மிகச்சிறப்பாக பணியாற்றினார். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்களுக்கு முன்மாதிரி தலைவராக திகழும் அப்துல் காலம் உலகம் முழுவதும் இதுவரை 1 கோடி மாணவர்களை சந்தித்து உரையாற்றிவுள்ளார்.
மாணவர்கள் எதிர்காலத்தில் எப்படி வாழவேண்டும், நாட்டுக்கு எவ்வகையில் கடமையாற்ற வேண்டும் என்று தொடந்து திட்டங்களை வகுத்து, விளக்கம் கொடுத்து, எளிமையாக உரையாடி ஊக்கப்படுத்தி வரும் அப்துல் கலாம் போற்றப்படும் உலகத் தலைவர்கள் ஒருவராக திகழ்கிறார்.
இந்நிலையில் அவரின் பிறந்த நாளான அக்டோபர் 15 ஆம் தேதியை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ள ஐ.நா. சபை அதிகாரப்பூர்வமாக உலகம் முழுவதும் இந்த நாளை மாணவர் தினமாக கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அங்கீகாரம் இந்தியாவின் தலைவர் ஒருவருக்கு இதுவரை கிடைக்காத ஒரு சர்வதேச ஒரு சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Friday, October 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
மாமேதை அப்துல் கலாமிற்கு கிடைத்த அங்கீகாரம் நமக்கே பெருமை சேர்ப்பது போன்றது; தமிழர் ஒவ்வொருவருக்கும் கிடைத்த மரியாதை. மாமனிதர் படிப்படியாக ஏறுகிறார். அறிவியல் விஞ்ஞானியாயிருந்த அவர் நாட்டின் முதல் குடிமகனாய் உயர்ந்து; ஐ.நா வில் உரையாற்றி; ஐரோப்பிய பொருளாதாரக் குழுமத்தின் பொன்விழாவில் சிறப்புரை ஆற்றி தமிழுக்கு பெருமை சேர்த்து இன்று உலக மாணவர் தினமாக அவரது பிறந்த நாள் என்பது சொல்லில் அடங்கா பெருமை. நான் அவரிடம் கற்றுக் கொண்டதுதான் எவ்வளவு உயரப் பறந்தாலும் எளிமை என்பது. அவர் குடி அரசு தலைவராய் இருந்தபோது எனக்கு கடிதம் எழுதினார் என்பது எனது ஆயுளில் நான் மறக்கவொண்ணா சிகர நிகழ்ச்சி. வாழ்க எம்மான்.அவர்தான் மாணவர்க்கெல்லாம் முன்மாதிரி. அவரைப் பின்பற்றும் இந்திய மாணவர் சமுதாயம் பொன்மாதிரி. - கவிஞர்தணிகை.
நமது அறிவியல் மேதை அப்துல்கலாம் அவர்களின் உரையை நான் 2001-ம் ஆண்டு இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் கேட்டு பரவசம் அடைந்தேன். அது முதல் தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாடுகள் மற்றும் இ ந்திய விஞ்ஞானிகள் மாநாடுகளில் மாணவர்கள் மத்தியில் அவருடைய உரை ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை கன்கூடாய் உணர்ந்தவன். சர்வதேச மாணவர் தினமாக கொண்டாட வேண்டும் என்று சில ஆண்டுகளாக பாடுபட்ட என்னைப்போன்றவர்களுக்கு யுனெஸ்கோவின் அறிவிப்பு மாபெரும் மகிழ்ச்சியை மாணவர் சமுதாயத்திற்கு அளித்துள்ளது. நான் கூட 15 அக்டோபர் அன்று ஒரு கட்டுரையை எனது பிளாக்கில் போட்டுள்ளேன்.(http://jaivabaieswaran.blogspot.com)
Thanks for sharing this information. I would like to share ncvt mis result 2018.
Bihar ncvt mis iti result 2018
https://www.childeducationaltrust.com/