Pages

Banner 468

Subscribe
Wednesday, May 13, 2009

போலி மொழி இன‌ வாத‌ம்

0 comments
 

எல்லா தேர்தலிலும் புறக்கனிக்கப்படுவது தலித் மக்கள் மட்டுமே. வெறும் வாக்கு வ‌ங்கிக‌ளாக‌வே த‌லித்துக‌ளை அர‌சிய‌ல்வாதிக‌ள் பார்பதால் இம்மக்களின் விடுதலை வெறும் ஏட்டலவே உள்ளது, இதற்க்கு எண்ணற்ற காரணங்கள் இருந்தாலும், தலித மக்களின் சமூக விடுதலைக்கு பெரும் தடைக்கல்லாக‌ இருப்பது அரசியல் அதிகாரம் மட்டுமே.

தெற்க்காசிய பிராந்தியத்தில் எங்குமே இல்லாத சமூக‌ அமைப்பு இந்த நாட்டில் நிலைத்திருப்பதும், முதலாலித்துவ‌ அர‌சிய‌ல் புரோக்க‌ர்க‌ளால் இந்த‌ நாட்டின் ச‌ன‌நாய‌க‌ம் உயிர் இழ‌ந்த‌ பின்னும் தேர்தல் எனும் சடங்கு அரங்கேறுவதற்க்கும் நம் நாட்டின் அரசியலமைப்பே காரணம், இந்தகைய அரசியலமைப்பை வடிவமைத்த டாக்ட‌ர் அம்பேட்க‌ரும் அத‌ற்க்கு வாய்ப‌ளித்த‌ நேருவும் போற்றுதலுக்குறியவர்கள்.

சமூகத்தின் எல்லா நிலைக‌ளிலும் தீண்டாமையை நிலைநிறுத்த‌ விரும்பிய காந்தி போண்ற‌ ம‌த‌வாத‌ ச‌க்திக‌ளிட‌மிருந்து த‌லித் ம‌க்க‌ளை காப்பாற்ற‌ வ‌லிமையான‌ ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ள் தேவை என உண‌ர்ந்த‌ டாக்ட‌ர் அம்பேட்க‌ர் த‌ன்னுடைய மிக க‌டின‌ உழைப்பால் ஏற்ப‌டுத்திய‌ இச் ச‌ட்ட‌ங்க‌ளே இந்தியாவில் வாழும் ஒவ்வொரு த‌லித் ம‌க்களின் பாதுகாப்பு அர‌ன். துர‌திஷ்ட‌வ‌ச‌மாக‌ இன்று ச‌ட்ட‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌மும், அதிகார‌ வ‌ர்க‌த்திட‌மும் உள்ளதால் நீதிம‌ன்றத்தில் கூட‌ த‌லித் ம‌க்க‌ளுக்கு அனிதீ இழ‌க்க‌ப்ப‌டுகிற‌து.

தென்னிந்தியாவை விட கல்வி பொருளாதாரத்தில் பின் தங்கிய வட இந்திய தலித் மக்கள் தங்களுக்குள்ள அரசியல் அதிகாரத்தை மிக வலிமையாக பயன்படுத்தி வருகிறார்கள், குறிப்பாக உத்திரபிரதேசத்தில் தலைவர் கன்ஷிராம் ஏற்படுத்திய ப‌குசன் சமாஜ் கட்சி இன்று நான்காவது முறையாக ஆட்சியை கைப்பற்றி சகோதரி மாயவதி ஆட்சி அதிகாரம் செய்துவருகிறார், இதுமட்டுமலாமல் பிரதமர் பதவியே என் இறுதி லட்சியமென சபதமெடுத்து உழைத்தும் வருகிறார்.

ஆனால் தமிழகத்திலோ நிலமை தலைகீழ், ஓரு எம்.பி சீட்டிற்கே நாம் திராவிடக் கட்சிகளின் காலில் விழவேண்டியிருகிறதே ஏன்? காங்ரஸ் கட்சி துவங்கும் முன்பே தலித் அரசியல் பேசிய தமிழக‌ தலித் மக்கள் இனறு வரை ஒரு நிலையான அரசில் கட்சியை நடத்த முடியவில்லையே ஏன்?

1970 வாக்கில் காங்கிர‌ஸில் இருந்து விலகி தனிகட்சி துவக்கிய ஐயா இளயபெருமாள் இரண்டு சட்டமன்ற தொகுதியை கைப்ப‌ற்றியும் கூட‌ நிலைத்து நிற்க்க‌ முடிய‌வில்லை. தென் த‌மிழ‌க‌த்தில் புதிய‌ த‌மிழ‌க‌த்தை துவ‌க்கிய‌ டாக்ட‌ர் கிருஷ்ண‌சாமிக்கும் இதே நிலை. வ‌ட‌ ப‌குதியை பொருத்த‌வ‌ரை விடுத‌லை சிறுத்தைக‌ள் கட்சி தற்போது இரண்டு சட்டமன்ற தொகுதியேடு உள்ளது. மேற்கூறிய‌ க‌ட்சிக‌ள் அனைத்தும் இதுநாள் வ‌ரை த‌னி சின்ன‌த்தைப் பெற‌முடிய‌வில்லை என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இக்க‌ட்சிக‌ளால் த‌லித் ம‌க்க‌ளின் 40 ச‌த‌ ஓட்டுக்க‌ளை கூட‌ பெற‌முடிய‌வில்லையே ஏன்?

சாதிய உட்பிரிவு, எண்ணற்ற குட்டி குட்டி கட்சிகள்/அமைப்புகள் ஆதலால் ஒன்றுசேர முடியவில்லை என சொண்ணால் உத்திரப்பிரதேசத்தில் எப்படி சாத்தியமானது? அட நாம் இங்கு ஆட்சி அமைக்க வேண்டாம் குறைந்தது தலித் வாக்குகளையாவது ஒன்றுசேர்களாமே! எது நம்மை தடுக்கிறது என சிந்திக்க வேண்டாமா?

தமிழகத்தில் உள்ள தலித் மக்களின் வளர்சியை பாதிப்பது நம்மில் படிந்துகிடக்கின்ற‌ பெரியாரிச மற்றும் மொழி இன வாத சிந்தனையே! த‌லித் ம‌க்களின் விடுத‌லையை உறுதி ப‌டுத்திய‌ டாக்ட‌ர் அம்பேட்க‌ர் புத்த‌ மத‌த்தில் இணையும் முன்பே த‌மிழ‌க‌ த‌லித்துக்க‌ள் இங்கு புத்த மத‌த்தையும் அதன் தத்துவத்தையும் போதிக்க துவங்கிவிட்டார்கள். ப‌ண்டித‌ர் அய்யோத்திதாச‌ரின் சிந்த‌னையை உள்வாங்கி ப‌குத்தறிவு ப‌ட்ட‌த்தை கூட்டிக் கொண்ட‌ பெரியாரை இங்கு த‌லித்துக்கள் எதிர்த்து கேள்வி கேட்ட‌தில்லை, இன்றுவ‌ரை அவ‌ரையே விடுத‌லையின் உறுவாக‌ பார்த்துவ‌ருகிறார்க‌ள். ஆனால் இந்திய‌ த‌லித் ம‌க்க‌ளின் விடுத‌லைக்கு பாடுப‌ட்ட‌ டாக்ட‌ர் அம்பேட்க‌ரையே வ‌ட‌நாட்ட‌வ‌ர் என்று க‌ருதும் சில‌ த‌லித் மொழி இன‌ வாதிக‌ள் தான் இங்கு த‌லித் விடுத‌லைக்கு பெறும் த‌டைக்கல்லாக‌ இருக்கிறார்க‌ள்.

தின‌க்கூலியை உய‌ர்த்திக் கேட்டதிற்க்கு 50 த‌லித் ம‌க்க‌ளை கூன்டோடு தீயிட்ட‌ இந்த‌ தமிழ் நாட்டில் த‌லித் விடுதலைகாக‌ பாடுப‌டாம‌ல் மொழி இன‌ வாதம் பேசுகின்ற‌ த‌லித் கூட்ட‌ம்தான் எரிகிற‌ சாதிய‌ தீயில் உண்மையிலேயே எண்ணையை ஊற்றுப‌வ‌ர்க‌ள்.

வாய்கிழிய‌ த‌னிஈழ‌ம் பேசிய‌ சீமான் இன்று செய‌ல‌லிதாவிட‌ம் த‌னி ஈழ‌ம் பெற்றுதாறுங்க‌ள் தாயே என‌ மண்டியிடுகிறார், காங்ர‌ஸ் கூட்டணியை எதிர்த்து பிர‌ச்சார‌ம் செய்கிறார், க‌ட‌ந்த‌ ஐந்தான்டுகால‌ம் த‌லித் விடுத‌லையை ஒதுக்கிவைத்துவிட்டு த‌னி ஈழ‌த்திற்க்காக‌ போராடி வ‌ரும் திருமாவை ஆத‌ரித்து ஏன் பிர‌ச்சார‌ம் செய்யவில்லை? இதே இந்த சீமான் கடந்த தேர்தலில் பா.ம.க வை ஆதரித்து பிர‌ச்சார‌ம் செய்தார் என்பதை நிணைவில் கொள்ளவேண்டும்.

முற்போக்கு சிந்தணைவாதி, பெரியாரிசம் என சொல்லிக்கொண்டு இவர்கள் தலித்துக்கள் காலைமட்டுமே வாருகிறார்கள் என்பாதை ஏன் த‌லித் மொழி இன‌ வாதிக‌ள் உண‌ர்வதில்லை? இந்த‌ சீமான் ஓர் உதாரண‌மே, இதுபோல் எண்ண‌ற்ற‌ சீமான்க‌ளும், பார‌தி ராசாக்க‌ளும் ப‌ல்வேறு வேட‌ங்க‌ளில் த‌லித் இன‌ ஒழிப்பை மைய‌ப்ப‌டுத்தி மொழி இன‌ வாதிக‌ள் என்ற‌ பெய‌ரில் இய‌ங்கி கொண்டிருக்கிறார்கள். தின்னிய‌த்தில் ம‌ல‌ம் தினித்த‌து இவ‌ர்க‌ளின் சாகோதர‌ர்கள் தான் என்ப‌தை ம‌ற‌ந்துவிட‌க்கூடாது.

கார்ல் மார்க்ஸின் பொதுவுட‌மை த‌த்துவ‌ம் இந்த‌ ம‌ண்ணிற்கேற்ற‌த‌ல்ல‌ என‌ விம‌ர்சித்து, த‌லித் ம‌க்க‌ளின் விடுத‌லையை ம‌ட்டுமே மைய‌ப்ப‌டுத்தி போராடிய‌ டாக்ட‌ர் அம்பேட்க‌ரின் எழுத்துக்க‌ளை உள்வாங்காத‌ எவ‌ரும் மொழி இன‌ வாத‌ சிந்த‌னையில் இருந்து விடுப‌ட‌ சாத்திய‌மில்லை. த‌லித் என்ற‌ முக‌த்தில் த‌மிழ‌ன் என்ற‌ முக‌மூடியயை அணிந்தால் முன்னேறிவிடாலாம் என்ற‌ எண்ண‌ம் சிறுபிள்ளைத்த‌ன‌மான‌து,கடைசி மனிதனின் விடுதலைக்காக‌ போராடாவேண்டிய‌வர்க‌ள் ஏசி காரைக‌ண்ட‌தும் முனைம‌ழுங்கி போவ‌து இய‌ல்பே! ஆனால் விடுத‌லை வேட்கை இருப்ப‌வ‌ர்களால் ம‌ட்டுமே தொடர்ந்து விடுத‌லைக்காக‌ பாடுப‌ட‌முடியும் என்பதே உல‌க‌ விடுத‌லை இய‌க்க‌ வர‌‌லாறு உணர்த்தும் பாடம்.
Readmore...