Pages

Banner 468

Subscribe
Saturday, October 24, 2009

கூகிளை இயக்குவதும் தமிழன் தான்!

0 comments
 


எப்போதுமே தேடுபொறியின் ராஜா கூகிள்தான், இனையத்தை தெறிந்தவர்கள் அத்தனைபேருக்குமே கூகிளையும் தெரியுமென்பதில் வியப்பில்லை ஆனால் ஆனான‌ப்பட்ட மைக்ரோ சாப்ட்க்கே தண்ணிகாட்டும் இந்த கூகிள் பில்லியன் கணக்கில் கல்லாகட்டும் ஓர் நிறுவனம், இதில் உள்ள ஒன்பது இயக்குகர்ளில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர் என்பது வியப்பாகத்தானிறுக்கிறது.

இதும‌ட்டும‌ல்ல‌ ச‌மிப‌த்தில் கூகில் நிறுவ‌ன‌ ப‌ங்குதார‌ர்க‌ள் (class A) ம‌த்தியில் ந‌ட‌த்திய‌ வாக்கெடுப்பில் இவ‌ர் அதிக‌ வாக்கு பெற்று ப‌ங்குதார‌ர்க‌ளின் ஏகோபித்த‌ நம்பிக்கைக்கு உரிய‌வ‌ர் என‌ தேர்வுசெய்ய‌ப்ப‌ட்டுள்ளார், இதில் விய‌ப்பெணண‌‌வென்றால் கூகிளின் நிறுவ‌ன‌ர்க‌ளான‌ எரிக் ம‌ற்றும் பேஜ் ஆகியோறை காட்டிலும் அதிக‌ வாக்கு பெற்றுள்ளார் இந்த‌ த‌மிழ‌ர்!

சென்னைய‌ச் சேர்ந்த‌ கே.ராம் சிரிராம்(53) கூகீள் தேடுபொறியின் சுமார் 3.4 மில்லிய‌ன் ப‌ங்குக‌ளை வைத்துள்ளார்(சுமார் 1 பில்லிய‌ன் டால‌ர்), இவ‌ர் த‌ன்னுடைய‌ ப‌ள்ளி ப‌டிப்பு சென்னையில் படித்தார் மேலும் இளம் அறிவிய‌லை சென்னை ப‌ல்க‌லையிலும் பின் எம்.பி.எ வை மெக்சிக‌ன் ப‌ல்க‌லையிலும் ப‌யின்ற‌வ‌ர் பின்பு ஜ‌ங்கிள், அமேசான் போன்ற‌ இனைய‌ த‌ள‌ங்க‌ளில் முக்கிய‌ ப‌த‌வியில் இருந்தார்.

90 வாக்கில் தேடுபொறியில் யாரும் முத‌லீடு செய்ய‌ ப‌ய‌ந்த கால‌க‌ட்ட‌த்தில் கூகிளில் முத்லீடு செய்து இன்று கூகிளின் இயக்குகளில் ஒருவராக‌ க‌ட‌ந்த ப‌ல ஆண்டுக‌ளாக‌ செய‌லாற்றி வ‌ருகிறார். மேலும் இவ‌ர் கூகிளின் ஆடிட்டிங் துறையின் தலைமையாகவும் செயலாற்றிவருகிறார், இவ‌ரின் ஒப்புத‌ல் இல்லாம‌ல் கூகிள் எந்த‌ விற்ப‌னையோ அல்ல‌து கைய‌க‌ப்ப‌டுத்துத‌லோ ந‌ட‌க்காது ஆக‌ கூகிளை ந‌ட‌த்துவ‌தில் இந்த த‌மிழ‌னின் ப‌ங்கு முக்கியமானது, ராமை வாழ்த்துவோம்! வாழ்க! வளர்க!!
Readmore...