Pages

Banner 468

Subscribe
Wednesday, April 1, 2009

சர்வதேச சுகாதார ஆண்டு-2008

1 comments
 

2.10.2008 அன்று தமிழ்ஓசை நாளித‌ழில் மையப்‌ப‌குதி க‌ட்டுரையாக‌ வெளிவ‌ந்த‌து., by abraham Lingan .

ற்காலம் முதல் இக்காலம் வரை மானுட வாழ்க்கையை எண்ணற்ற கண்டுபிடிப்புகள் மான்படையச் செய்திருக்கின்றன. நெருப்பு, சக்கரம் நீராவி எஞ்சின் என பட்டியல் நீள்கிறது. முன்னோர்களின் கண்டுபிடிப்புக்களை மூலதனமாக கொண்டு நாள் தோறும் புதிய தொழில் நுட்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. சுமார் 4500 ஆண்டு - களுக்கு முன்பே சுட்ட கற்களால் திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட கழிவறையை சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்தியதாக வரலாற்று அறிஞர்கள் கண்டறிந்த பின்பும் நம்மால் இதனை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை, கழிவறை பயன்படுத்துதல் என்பது திட்டமிடப்பட்ட நாகரீக வாழ்க்கையின் அடையாளம் மட்டுமல்ல இவை பகுத்தறிவின் குறியீடு.
I
உலகில் 41 சதவிகித மக்கள் சுகாதார வசதியின்றி வாழ்கிறார்கள், கழிவறை பயன்பாட்டை கனவில் கூட காண முடியாத அளவிற்கு முன் நாம் உலக நாடுகள் பொருளாதாரத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டன. பாதுகாப்பான குடிநீர், சுகாதாரமின்மை மற்றும் சுத்திகரிக்கப்படாத திடக் கழிவுகள் என நம்முடைய சுகாதாரப் பிரச்சனைகள் நீள்கிறது. நாளொன்றிற்க்கு சுமார் 4900 மனிதர்கள் சுகாதார சீர்கேட்டால் உயிரிழப்பதாக யூனிசெப் நிறுவனம் தெரிவிக்கின்றது இது ஒரு அணுகுண்டினால் ஏற்படும் அழிவிற்கு ஒப்பாகும். உலக சுகாதார நிறுவனத்தின் (றுர்ழு) அறிக்கையின் படி நாம் சுகாதாரத்திற்க்காக செலவிடும் ஒவ்வொரு டாலரும் குறைந்தது ஏழு டாலர் அளவிற்க்கு நமக்கு பொருளாதாரத்தை மிச்சப்படுத்து- வதாக கூறுகிறது. நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகைக் கொண்ட நம் நாட்டில் சுகாதாரத் திட்டங்கள் பாராட்டுமளவிற்க்கு இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, நாட்டின்; 33 சதவிகித மக்கள் மட்டுமே சுகாதார வசதி பெற்றுள்ளதாக மனித வள மேம்பாட்டு அறிக்கை கூறுகிறது.
I
இந்தியாவை பொறுத்தவரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே சுகாதாரத்தை பற்றி அக்கறையுடன் பேசப்பட்டது. ஏனெனில் காலரா, டயோரியா போன்ற நோய்கள் பீடித்து பிரிடிஷ் படைகள் உயிர்துரக்க நேரிட்டதை கருத்தில் கொண்டே லிட்டன் பிரபு (1876 - 80) ஆட்சிக் காலத்தில் முதல் சுகாதாரச் சட்டம் 1878-ல் கொண்டுவரப்பட்டது. வீட்டு கழிவறை, பொதுக் கழிப்பறை அமைப்பது பற்றி இச்சட்டம் வலியூறுத்தியது. இதுமட்டுமல்லாமல் கொல்கொத்தாவின் (அன்றைய தலை நகர்;) ஒவ்வொரு குடிசையிலும் கூட கழிவறைகள் கட்டப்பட வேண்டுமென கூறும் இச்சட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் இன்றும் கூட உணராமலிருப்பது மடமை.
I
1954ல் துவக்கப்பட்ட முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் மருத்துவ திட்டத்தின் கீழ் சுகாதார திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு 1985 - 90ல் ஏற்படுத்தப்பட்ட ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகள், மற்றும் அங்கன்வாடிகளில் சுகாதார வசதி ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது. மேலும் ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில் (1997-2002) 20 சதவிகித குடும்பங்களுக்கு கழிப்பிட வசதி செய்துதரப்பட வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
I
குறிப்பாக 1999-ல் துவக்கப்பட்ட முழு சுகாதார திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது சுமார் 12000 கோடி நிதியில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் உலகின் மிகப் பெரிய சுகாதார திட்டமாகும். 1993ம் ஆண்டு இந்திய சுகாதார சட்டப்படி திறந்த வெளியில் மலம் கழித்தல் மற்றும் மனித கழிவுகளை மனிதனை அள்ளுதல் போன்றவை தடை செய்யப்பட்டன. ஆனால் இந்தியாவில் சுமார் 2 லட்சம் டன் மனித கழிவுகள் நாள்தோறும் திறந்த வெளியில் வெளியேற்றபடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
I
இப்படி ஏற்படுத்தப்பட்ட பல சட்டங்களும் திட்டங்களும் முழமையான விளைவை ஏற்படுத்தவில்லை எனினும் ஓரளவேனும் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதற்கு நாம் அனைவரும் பதில் சொல்ல கடமைபட்டவர்கள். ஏனெனில் சுகாதார திட்டங்களின் பின்னடைவிற்கு நமது பிற்போக்கான சில சமூக கலாச்சார சிந்தனையும் ஒரு காரணம்தான் என்பதை நாம் மறுக்க இயலாது. 2001 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக கிராமங்களில் 14.36 சதவிகித வீடுகளிலும், நகர்புறங்களில் 64.33 சதவிகித வீடுகளில் மட்டுமே கழிவறை வசதி பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
I
உலகளவில் சுகாதாரமின்மையால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை கருத்தில் கொண்டே ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதியில் 2008 -ம் ஆண்டை சர்வதேச சுகாதார ஆண்டாக அறிவித்தது. ஐ.நா வின் பொருளாதாரம் மற்றும் சமூக அலுவல் துறை உலகின் நீர் வளம் மற்றும் சுகாதாரத்திற்க்காக பணியாற்றும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பின்வரும் 8 நோக்கங்களை மையப்படுத்தி பணியினை துவக்கியிருக்கிறது.சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.அரசு, ஐ.நா-வின் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து உரிய திட்டத்தை செயல்முறைபடுத்துதல்.தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சுகாதார சட்டங்களை வலுப்படுத்தி புதிய திட்டங்களை நடைமுறைபடுத்துதல். சமூக பங்கேற்புடன் கூடிய பாரம்பரிய மற்றும் நீடித்து நிலைக்ககூடிய சுகாதார வசதிகளை ஊக்குவித்தல்.தேசிய அளவில் சுகாதார திட்டத்திற்க்கான நிதியை அதிகரித்தல்.கழிவுநிறை சுத்திகரித்து மறு பயன்பாட்டிற்கு வழிசெய்தல் மற்றும் ஆயிரமாவது ஆண்டு இலக்கை அடையும் வகையில் இத்துறை சார்ந்த மனித வள மேம்பாட்டு பயிற்சியளித்தல்.தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார திட்டத்தின் சமூக கலாச்சார மற்றும் தொழில் நுட்ப விளைவுகளை ஆராய்தல். சுற்று சூழல் மற்றும் இயற்கை வளங்களை காத்தல்.சுகாதாரம் குறித்த ஆதார பூர்வமான அறிவை மேம்படுத்தி இத்துறையின் முதலீட்டினை உயர்த்துதல் போன்றவையாகும்.
I
ஐக்கிய நாடுகள் சபையின் அறைக்கூவலை ஏற்று சுகாதார திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும். நிதி பற்றாக்குறை, நிர்வாக பிரச்சனை, மக்களின் பங்களிப்பின்மை,திறமையற்ற நிர்வாகம் மற்றும் போதிய விழிப்புணர்வு இன்மை போன்ற எந்த காரணத்தையும் சொல்லாமல் கனினி மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளின் வளர்ச்சியை போல் தனிநபர் சுகாதாரத்தையும் உறுதிபடுத்த வேண்டியது அரசின் கடமை. இல்லையேல் இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் கூட இந்தியாவில் அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்காது எனக் கூறிய உலக சுகாதார நிறுவனத்தின் (றுர்ழு) கூற்று உண்மையாகிவிடும் என்பதில் ஐயமில்லை.
Readmore...