27.3.09 அன்று தமிழ்ஓசை நாளிதழில் மையப்பகுதி கட்டுரையாக வெளிவந்தது., by abraham Lingan
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு” என்ற வள்ளுவரின் வாக்கு ஒரு நாட்டின் சூழியல் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாது அந் நாட்டு மக்களின் வாழ்வியல் பாதுகாப்பிற்கும் இன்றியமையாதது. இயற்கை வளநகளை நம்பியே பெரும்பான்மையான மக்கள் வாழ்கை நடத்தும் நம் நாட்டில் ஒருபுறம் விவசாயத்திற்க்காக நதிநீரை சிறைபிடிக்க அணைகள் அமைப்பதும் இறுபுறம் விளைநிலநகளை கூறுபோட்டு மணைகள் அமைப்பது என முன்னுக்குப்பின் முறனாக செல்லும் வளர்சிப்பாயால் குறுகிப்போனது நடைபாதையும், நதிபாதைகளும் மட்டுமல்ல மனிதனின் மனமும் குனமும் தான்.இயற்கையை தாம் விரும் -பியவாறு மாற்றியமைக்கும் மனிதனுக்கு அது கற்றுத்தரும் பாடமே இயற்கைச் சீற்றங்களாகும்.
நவீன அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பங்களின் உதவியால் வளர்ந்த நாடுகள் இயற்கைச் சீற்றங்களினால் ஏற்படும் உயிர் மற்றும் பொருள் இழப்பை வெகுவாக குறைத்து விடுகின்றன. ஆனால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் நிலமைதான் மிகவும் பரிதாபமானது. இயற்கை சீற்றங்கள் மனித சக்திக்கு அப்பார்பட்டவை என்றாலும் நம்முடைய தொலைநோக்கு பார்வையின்மைஅந்; இது போன்ற நிகழ்விற்கு ஓர் காரணமாகிவிடுகிறது இதுமட்டும்மல்லாமல். மக்கள் கைப்பெருக்கம் மற்றும் நகர் மயமாதல் 2.வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் ஏழ்மை 3.சுற்றுப்புரசூழல் சீர்கேடு 4.அரசின் முறையற்ற செயல்பாடு போன்ற பல்வேறு காரணங்கள் பேரழிவினை அதிகப்படுத்துகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. சமீபத்தில் வெளியான உலக வங்கியின் அறிக்கையின் படி அறுபது சதவிகித ஆசிய மற்றும் ஐம்பது சதவிகித ஆப்பிரிக்க மக்கள் மிகவும் ஆபத்தான பேரிடர் நிகழக்கூடிய இடங்களில் வசிப்பதாக தெறிவிக்கின்றது. இப்பகுதியில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிகழ்ந்த பேரழிவுகளை கணக்கிட்டால் உலக வங்கியின் இக்கூற்றின் உண்மை புலப்படும்.
1994 முதல் 2003ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் உலகில் நிகழ்ந்த சுமார் 6185 பேரழிவுகளில் 947 தென்னாசியாவிலும், பசுபிக் மற்றும் கிழக்காசியாவில் சுமார் பேரழிவுகளும் நிகழ்ந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உலகில் கடந்த ஆண்டு (2008) மட்டும் நிகழந்த 321 பேரழிவுகளில் 235,816 மக்கள் உயிரிழந்துள்ளார்கள், மேலும் 181 பில்யன் டாலர் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இது கடந்த 2000 முதல் 2007ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயிர் இழப்பு மூன்று மடங்காகவும், பொருளாதார இழப்பு இரண்டு மடங்காகவும் உயர்ந்திருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் குறைப்புக்கான சர்வதேச அமைப்பு (மசஐநஈத)1 கூறுகிறது.
இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல, நாட்டின் 60 சதவிகித நிலப்பறப்பு நில நடுக்கத்தாலும், 40 மில்யன் ஹெக்டேர் விவசாய நிலம் வெள்ளத்தாலும், சுமார் 8000 கிலோமீட்டர் ங்டள்ஓள்;ள் கடற்கறை ஞ்ஊத்ல் புயலாலும் மற்றும் 68 சதவிகித பகுதி வரட்சியாலும் பாதிக்கப்படக் கூடியவை என இந்திய அரசு கூறுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் மட்டும் இந்தியா சுமார் 300க்கும் மேற்பட்ட பேரழிவுகளை சந்தித்துள்ளது. 1990 முதல் 2007ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் 198 முறை வெள்ளத்தாலும், 141 முறை புயலாலும், 11 முறை கடும் வறட்சியாலும், 41 முறை மிதமிஞ்சிய வெப்பத்தாலும் நம் நாடு பாதிப்படைந்துள்ளது. இதனால் சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துபோனார்கள். மேலும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் 1990 முதல் 2005 வரையிலான கால கட்டத்தில் நடந்த் ஏழு மிகப்பொரிய நிலநடுக்கத்தில் 25 ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் உலகையே துயரத்தில் ஆழ்த்திய ஆழிப் பேரலையில் சிக்கி இழந்தோர் பத்தாயிரத்திற்கும் அதிகம்.
இது போன்று உலகில் நிகழும் பல்வேறு இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை 1990 முதல் 1999 வரையிலான காலகட்டத்தை சர்வதேச இயற்கை பேரிடர் குறைக்கும் பத்து ஆண்டுகள் என அறிவித்து பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மூலம் பேரிடர் குறித்து உலகநாடுகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக 2005ல் ஜப்பானிலுள்ள ’யூகோ நகரில் நடைபெற்ற உலக பேரிடர் குறைப்பு மாநாட்டில் 2005 முதல் 2015ம் ஆண்டிற்கான செயல் திட்டத்தை வடிவமைத்தது, இதனை இந்தியா உட்பட சுமார் 168க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கையொப்பமிட்டிருக்கின்றன ஹி யூகோ செயல்திட்டம் என இச் செயல்திட்டம் பின்வரும் ஐந்து முக்கிய நோக்கத்தை வயுறுத்துகிறது. 1.சிறந்தநிறுவன கட்டமைப்பினை ஏற்படுத்தி தேசிய மற்றும் கிராமப்புற அளவில் பேரிடர் இன்னல் குறைப்பினை நடைமுறைப்படுத்துதல் 2.பேரிடர் நிகழ்வுகளை கண்டறிந்து அதன் தாக்கத்தினை அளவிட்டு தொடர்ந்து அப்பகுதியை கண்காணித்தல் மற்றும் தகுந்த முன்னெச்சரிக்கை (உஹழ்ப்ஹ் ரஹழ்ய்ண்ய்ஞ்) கருவிகளை நிறுவி அதனை தொடர்ந்து செயல்படுத்துதல். 3.கல்வி, ஆராய்ச்சி மற்றும் பொது அறிவினை பயன்படுத்தி ஒர் பாதுகாப்பான கலாச்சாரத்தை உருவாக்குவதன் மூலம் எல்லா நிலைகளிலும் பேரிடர் இன்னல் குறைப்பு செய்தல். 4.பேரிடரால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியின் இழப்பைக் குறைக்க நடவடிக்கை எடுத்தல், மற்றும் 5.பேரிடர் தடுப்பு செயல்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூகத்தின் எல்லா நிலைகளிலும் இது குறித்த தாக்கத்தினை ஏற்படுத்துதல் என இச் செயல் திட்டம் நீன்ட கால வளர்ச்சியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை மத்திய உள்துறை அமைச்சகமே இயற்கைப் பேரழிவிற்க்கான தலைமைப் பொருப்பாளராகும் மேலும் வரட்சி, மழை வெள்ளம் போன்றவற்றை விவசாயத்துறைக் கவனித்துக் கொள்கிறது. அனைத்து பேரிடர் மேலான்மை திட்டங்களை அந்த மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்தே செயல்படுத்துகின்றன, எனினும் ஏதாவது பேரழிவு நிகழந்தால் சம்பந்தப்பட்ட மாநில அரசின் உடனடி பாதுகாப்பு மற்றம் நிவாரணம் வழங்க வேண்டும். பேரிடர் காலங்களில் மாநில அரசு கிழ்கண்ட முக்கிய பணியினை செய்தல் வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்துகின்றது. 1.பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக வேறொரு இடத்திற்கு அழைத்து செல்லுதல் 2.நிவாரண மையம் அமைத்தல். 3.அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல் 4.சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் 5.சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த வசதிகளை செய்து கொடுத்தல் போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென பேரிடர் மேலாண்மைச் சட்டம் 20053 கூறுகிறது.
பேரிடர் மேளாண்மைத் திட்டத்தை இந்திய அரசு பல்வேறு உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது, பேரிடர் காலங்களில் பரஸ்பர உதவி மற்றும் ஒருங்கிணைப்பிற்கு சுவீடன் மற்றும் ரஷ்ய ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தமிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் பேரிடர் உதவி மற்றும் ஒறுங்கிணைப்பு (மசஈஅஇ) குழுவில் உறுப்பினராகவும். மேலும் ஆசிய பேரிடர் குறைப்பு மையம் (அஈதஇ) க்கு நிதி உதவியும் அளித்து உதவுகிறது. மேலும் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து எல்லா நிலைகளிலும் செயல்பட்டு வருகிறது.
பல்வேறு வகையில் மத்திய அரசு பேரிடருக்கான நிதியை மாநில அரசுக்கு அளித்து உதவுகிறது. அவற்றுள் பேரிடர் நிவாரண நிதி (இதஊ)யில் 75 சதவிகிதம் மத்திய அரசும் 25 சதவிகிதம் மாநில அரசும் ம்ள்ல்ச்;ச்ல்ஜ்ஒ. மேலும் தேசிய பேரிடர் உதவி நிதி (சஇஇஊ) என்ஞ்ஒ பேரிடர் நிகழ்ந்த இடத்தை மத்திய அரசின் உயர்மட்ட குழு பார்வையிட்டு சேதத்தை மதிப்பிட்டு மத்திய அரசுக்கு நிவாரணத் தொகையை பரிந்துறை செய்வதன் அடிப்படையில் இந்த நிதி மாநில அரசுக்கு வழங்கப்படுகிறது.
இப்படி மத்திய மாநில அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு அதிகறித்துக் கொண்டேதான் போகிறது. குறிப்பாக பேரிடர் காலங்க- ளில் பெண்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றார்கள். இதனை கருத்தில் கொண்டே மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மைக் கல்வியை சேர்க்க நடவடிக்கை எடுத்துவருகிறது.
பல்வேறு பள்ளி கல்வி அமைப்புகளைக் கொண்ட இந்தியாவில் சுமார் 1,124,0334 பள்ளிகள் உள்ளதாகவும் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒருபங்கு பள்ளி மாணவர்கள்ளாகும்,ஆகையால் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை கல்வியை அளிப்பதன் மூலம் எதிர்வரும் காலங்களில் பேரழிவின் தாக்கத்தை கட்டுப்படுத்த உதவுவதோடு, பேரழிவு குறித்த விழிப்புணர்வு குழந்தைகளின் மூலம் பெற்றோர்களுக்கும் சென்றடைய வாய்ப்பிருக்கிறது. இதன் முதற்படியாக மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் (இஆநஉ) பேரிடர் மேலாண்மைக் கல்வி சேர்க்கப்பட்டு கற்பிக்கப்பட்டும் வருகிறது. இதனைக் தொடர்ந்து தமிழ்நாடு, ஒரிசா, மஹராஷ்ட்ரா, பிகார், குஜராத், மேற்குவங்கம் மற்றும் ஜார்கன்ட் போன்ற மாநிலங்களும் பேரிடர் மேலாண்மைக் கல்வியை நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
ஆண்டுதோறும் தெற்காசிய பிரபந்தியத்தின் உள்நாட்டு உற்பத்தி (எஈட)யில் இரண்டு முதல் ஆறு சதம் வரை பேரழிவுகளால் பாதிப்படைகிறதென்றும், இதே நிலை நீடித்தால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அடுத்த ஆண்டில் (2010) சுமார் 13 சதம் வரை பாதிக்கப்படுமென ஆக்ஸ்பாம் (ஞஷ்ச்ஹம்)நிறுவனம் தெரிவிக்கின்றது. தெற்காசியாவில் நிகழும் பெரும்பான்மையான இயற்கை பேரழிவுகள் பருவ நிலை மாற்றத்தினால் (இப்ண்ம்ஹற்ங் இட்ஹய்ஞ்ங்) நிகழ்கின்றன, இதற்கு வளர்ந்த நாடுகளும் பொறுப்பாகும். பெருகிவரும் சுற்றுப்புற சுழல் சீர்கேடுகளால் கூடிக் கொண்டே போகும் வெப்பநிலை சுமார் இரண்டு ஹெல்சியஸ் அளவிற்கு உயர்ந்தாலும் கூட கடற் கறையோரங்களில் வெள்ளப்பெருக்கு, நிலத்தடிநீரில் கடல்நீர் உட்புகுதல் போன்ற பிரச்சனைகள் பெருகிவிடும் அகையால் கரியமில வாயுவை அளவிற்கு அதிகம் வெளியிடும், அமெரிக்கா போண்ற வளர்ந்த நாடுகளை கட்டுப்படுத்த தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பைச்(சார்க்) சார்ந்த நாடுகள் ஐநா சபையிடம் முறையிட வேண்டும்.
ஆண்டுதோறும் வெள்ளம் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் என வழங்குவதைத் தவிர்த்து பிரச்சனைக்குள்ளாகும் பகுதிக்கு ஏற்றார்போல் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். இதுபோலவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்வதன் மூலமே இழப்பை ஓரளவேனும் ஈடுசெய்ய முடியும். எல்லை தாண்டிய தீவிரவாதம், விபத்து மற்றும் உள்நாட்டு பிரச்சனை போன்றவற்றினால் ஏற்படும் உயிரழப்பை விட இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் உயிர் மற்றும் பொருள் இழப்பு பலமடங்கு அதிகம் என்பதை கருத்தில் கொண்டு இராணுவம் மற்றும் காவல் துறையைச் சார்ந்த அனைத்து பிறிவினறுக்கும் பல்வேறு இயற்கைப் பேரழிவின்போது மீட்பு பணி செய்ய உரிய பயிற்சி மற்றும் அதற்குறிய நவீன வசதிகளை ஏற்படுத்துவதன்மூலம் பெரும் உயிரிழப்பை குறைக்க முடியும். மேலும் பல்லாயிரக்கணக்கான கோடிரூபாய் செலவிடப்படும் இத்துறைக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த மத்திய மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மக்கள் பநகேற்புடன் கூடிய செயல் திட்டங்களை வகுப்பதோடு பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் என்.எஸ்.எஸ் போன்ற பல்வேறு தன்னாற்வ தொண்டு அமைப்புகளுக்கும் ஆசிரியர்களும் பேரிடர் மேலாண்மை பயிற்சியை தீவிரமாய் பயிற்றுவிக்க வேண்டும்.
எல்லாவற்றிக்கும் மேலாக தேர்தல் வருகின்ற போதெல்லாம் கைவிரல் மை வைக்க காத்துக்கிடக்கின்ற கடைகோடி மக்களின் குறைந்தபட்ட சமூக பாதுகாப்பினை (ஙண்ய்ண்ம்ன்ம் நர்ஸ்ரீண்ஹப் நங்ஸ்ரீன்ழ்ண்ற்ஹ்) உறுதிப்படுத்தினால் தான் நிவாரணத்திற்காக சாலையில் அமரும் கூட்டத்தையும் கிடைத்த நிவாரணத் தொகையை பெறச் செல்லுகையில் நெரிசல் சிக்கி இறந்து போவோரின் எண்ணிக்கையும் குறைக்க முடியும். இல்லையேல் ஆட்சிக் கட்டிலும், அதிகார நாற்களிகலும் கூட ஜனனாயகம் என்ற நில நடுக்கத்தால் கவிழ்ந்து போவதற்கு வாய்பிருக்கிறது.
References:
1.PRESS RELEASE on 22 January 2009, United Nations International Strategy for Disaster Reduction (UNISDR).
2.Report on Implementation Of The Hyogo Framework for Action: Asia, 25 May 2007, UNISDR.
3.Disaster Management Act 2005, Ministry of Law and Justice, December, 2005. 4.Disaster Education in India –A Status report, March 2008, Sustainable Environment and Ecological Development Society, New Delhi.
5.Rethinking Disasters, Oxfam International 2008.