நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகிறது, மக்களாட்சி நாடைபெறுகிறது மேலும் எண்ணற்ற அரசியல் சமூக மற்றும் பொருளாதார சீர்திறுத்தங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன,ஆனால்ஏழைகளின் துயர்தீர்க்க இவைஎதுவும்உதவுவாதாய் தெறியவில்லை.
கடந்த வெள்ளியன்று (29.05.2009)தின்டிவனத்தை அடுத்த செஞ்சி தாலுக்காவில் உள்ள தனியார் கல்குவாரியில் கொத்தடிமையாய் இருந்த சுமார் 26 மக்களை தின்டிவனம் கோட்டாச்சியர் மீட்டு அவர்களுக்கு தலா 1000 மறுவாழ்விற்க்காக வழங்கப்பட்டு சொந்த கிராமத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மே30ம் தேதி தினமணி நாள் இதழ் செய்திவிளியிட்டுள்ளது. ஆனால் அந்த தனியார் கல்குவாரி யாருடையது, அந்த முதலாலி மீது என்ன வழக்கு தொடரப்பட்டது போண்ற எந்த குறிப்பும் இல்லை.
இந்தியா ஒளிர்கிறது, தமிழகம் தழைக்கிறது என வர்த்தக விளம்பரம் செய்யும் அரசியல் வாதிகள் அடித்தட்டு மக்களின் பிறச்சனையை ஓர் பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை, தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் செங்கல் சூலை, பட்டாசு தொழிற்சாலை, தோட்ட வேலை, செராமிக் வேலை போண்ற பல்வேறு தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக உள்ளார்கள் என ஓர் ஆய்வரிக்கை தெறிவிக்கிறது. இந்த நாட்டு மக்களின் வரிப்பனத்தை ஆயிரம் ஆயிரம் கோடிகளாய் ஏய்து சகல வசதியோடு வளம்வரும் அரசியல் முதலாலிகள் ஏகபோகத்துடன் வாழ, குடும்ப செலவிற்காக தாம் கைநீட்டி வாங்கிய ஒருசில ஆயிரத்திற்க்காகவா ஓர் குடும்பம் வாழ்நாள் முழுதும் கொத்தடுமையாய் வாழ்வது?
ஏழைகளாய் பிறந்துவிட்டதை தவிர இவர்கள் செய்த பாவமென்ன? கனவிலும் தீங்குநினைக்காது, விதியை நினைத்து உயிர்வாழும் இந்த ஊமை மக்களின் துயர் வார்த்தைகளால் எழுத முடியாதவை. எல்லாவற்றிற்கும் ஓரே வழி கல்விதான் என்றாலும் கொத்தடிமைகளின் குழந்தகளும் அங்கேதான் அடிமையாய் வாழவேண்டும். உடல் மற்றும் மன ரீதியான தாக்குதலோடு பாலியல் வன்புணர்சிக்கும் ஆளாகும் இம்மக்களின் வாழ்வு ரோமபுரியில் அடிமைகளாய் இருந்த ஸ்பார்டகன்ஸ் வாழ்வை நினைவுபடுத்துகிறது, ஓர் போர்கைதிகளுக்கு நிகரான துன்பியல் படலத்தைக் சுமந்துள்ளது.
தம் சொந்த மண்ணிலேயே சுரண்டப்பட்டு அடிமைகளாய் வாழும் இந்த கொத்தடிமைகளின் நிலையும், ஈழத்தில் சிங்கள இன வெறியர்காளால் சிதறடிக்கப்பட்டு நாடிழந்து, வீடிழந்து வாழும் எம் தாய்வாழி மக்களின் நிலையும் ஏறக்குறைய ஓன்றே!
இலங்கை தமிழ்மக்களின் துயர்போக்க தமிழ்நாட்டில் தீக்குளிக்கிறார்கள், தீர்மானம் போடுகிறார்கள் மற்றும் ஊர்வலம், உண்ணா நிலை என அத்துனை வழியையும் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இதே தமிழ்நாட்டில் கொத்தடிமைகள், மனிதகழிவை மனிதனே சுத்தம்செய்வது, குழந்தை தொழிலாளர்கள் என மிக கொடுமையான சமூக பிரச்சனைகளுக்கு இந்த சேகுவேராக்கள் ஏன் செவிசாய்பதில்லை? அட உங்கள் சாதியையா நாங்கள் மறக்கச் சொல்லுகிறோம்? தமிழர்களாலேயே சிறைபிடிக்கப்பட்ட இந்த கொத்தடிமை தமிழ்களை குறைந்தபட்சம் மனிதகளாகவாது உங்கள் முதலாலிகள் வாழவிடக்கூடாதா?
கொத்தடிமைமுறை இலங்கையின் இன பிறச்சனைக்கு இனையானதென நான் இங்கு வாதம் செய்யவில்லை, ஆனால் தமிழகத்தில், தமிழர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்த கொத்தடிமை சமூகத்திற்க்கு ஏன் தமிழ் ஆர்வளர்களும் நடுநிலைவாதிகளும் குறள் கொடுப்பதில்லை?
இவை வெறும் மேலோட்டமான கேள்விகள்தான் ஆனால் இதற்க்கான பதில்கள் மிக நூட்பமானவை, மாபெறும் வஞ்சக வாறலாற்று பின்னனி கொண்டது. வடநாட்டவர்கள் தமிழகத்தில் இந்தியை புகுத்திய போது இங்கு திராவிட இயக்கத்தவர்கள் தண்டவாளத்தில் தலைவைத்து தமிழகம் முழுதும் போராட்டம் பல நடத்தினார்கள், ஆனால் அவர்களின் பிள்ளைகள் இன்று ஆங்கில வழி கல்வியோடு இந்தியையும் பயின்று கணிப்பொறித் துறையில் காலாட்டிக் கொண்டு உள்நாட்டிலேயே டாலர் சம்பாதிக்கிறார்கள்,
அந்தோ பரிதாபம்! அவர்ளைவிடவும் அதிக எண்ணிக்கையில் தடியடிப்பட்டு, குன்டடிப்பட்டு இந்தி எதிர்த்த குலங்கள் இன்னும் கொத்தடிமையாக வாழ்ந்துவருகிறார்கள். இந்தி தமிழ்நாட்டை ஆண்டால் நிலமற்ற இங்குள்ள ஏழைகள் வடநாட்டிற்க்கு பிழைக்க சென்றுவிட்டால் தமிழக நில முதலாலிகளுக்கு கொத்தடிமை செய்ய தெலுங்கனா வருவான்? என யோசித இந்த குள்ளநரி தந்திரத்தால் இன்னும் இந்த இழிநிலை தொடர்கிறது.
இருமொழிக்கொள்கை கொண்ட தமிழ் நாட்டில் அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்க எந்த அரசும் திட்டம் வகுக்க வில்லை, ஏனென்றால் சேரியில் இருப்பவனுக்கு ஆங்கிலம் தெறிந்துவிட்டால் மாடியில் இருப்பவனுக்கல்லவா பிரச்சனை என மிக தீர்க்கமாக எண்ணி , சேரியில் வாழ்பவனுக்கு எல்லா வழியையும் மூடிமறைத்து, மொட்டையடித்து பட்டை நாமத்தையால்லவா சாத்தினார்கள் இந்த நாத்திக சிகாமணிகள்!
கொத்தடிமைகள், மனிதகழிவை மனிதனே சுத்தம்செய்வது, குழந்தை தொழிலாளர்கள், சாதிய மற்றும் பாலியல் வன்முறைகள் என தமிழகத்தில் தலைவிரித்தாடும் இந்த அடிமைகள் நிலையை இங்கு வாழும் சக அடிமைகளே கண்டுகொள்ளாத நிலை நீடிக்கிறது. வெறும் நோயில்லாமல் வாழ்வது மட்டுமே ஆரோக்கியமான வாழ்வு இல்லை, ஒரு மனிதன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வாழ்வதே நல்வாழ்வு என உலக சுகாதார நிறுவனம்(WHO) கூறுகிறது. ஆக ஒட்டுமொத்தத்தில் நம்மில் 80 சத மக்கள் இந்த நாட்டில் நல்வாழ்வு வாழவில்லை என்பது தெளிவு. அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்த இங்கு அமைப்புகள் இல்லாததும், இதுபோண்ற தனிமனித குறள்கள் தகர்ந்துவிடுகிறது.
சமதர்ம சட்டம் எழுத இனி அம்பேட்கர் பிறக்கப்போவதில்லை, கறுப்பனும் வெள்ளையனும் கலந்துவாழ கனவுகண்ட லூதர் கிங்கும் வரப்போவதில்லை என சிங்குகள் நினைத்ததால்தான் இன்று பஞ்சாப்பில் இரத்த ஆறு ஓடுகிறது, ஆஸ்திரியாவில் தேள்கடிக்க அமிர்தரசில் நெடியேறுகிறதுதென்றால் அது பஞ்சாபில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் தன்மானத்தையல்லவா பறைசாற்றுகிறது? ஆனால் இதெல்லாம் ஏதோ அடுத்த கண்டத்தில் நடைபெறுவதாக எண்ணிக்கொண்டிறுந்தால் நாம் விடுதலையை வெல்வதற்க்கும் தகுதியானவர்களில்லை, விடுதலை என்ற வார்த்தையை சொல்வதற்க்கும் தகுதியானவர்களில்லை!
கண்முன்னே நடக்கும் இதுபோண்ற அடிப்படை மனித உரிமை மீறல்களை கண்டும் காணாமல் இருப்பதென்பது பாதிக்கப்படும் இம் மக்களை வெறுப்பதற்க்கு சமமானதல்லவா?