மக்கள் பிறச்சனையை துச்சமென மதிக்கும் மன்மோகன் அரசின் பெட்ரோல் விலைஉயர்வை கண்டித்து ப.ஜ.கா மற்றும் இடதுசாரிகள் நடத்திய நாடுதழுவிய பந்த் இன்று புதுவையில் அமோக வெற்றி பெற்றது.
காலையில் இருந்தே கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை, தமிழக அரசு பேருந்துக்களை தவிர வேறுரெந்த தனியார் பஸ்களும் இயக்கப்ப்படவில்லை, கடலூரிலில் இருந்து புதுவைக்கு சென்னை வழிதடத்தில் செல்லும் அரசு பேருந்துமட்டுமே சென்றது அதுவும் ஒருசிலரோடு! ஷேர் ஆட்டோ, ஆட்டோ, வேன், டாக்சி போன்ற எந்த வாகனமும் இயங்கவில்லை ஒருசில இரு சக்கர வாகனத்தைத் தவிர.
ஒரு சில வியாபாரிகள் பெட்டிகடைகளை பாதி திறந்து பீடி சீகரெட் போண்றவற்றை விற்பனை செய்தார்கள், மெடிக்கல் மற்றும் சிறிய பால் பூத்துக்க்ளை தவிர வேறெந்த கடையும் திறக்கப்படவில்லை.
காலை 10.30 மணிய,ளவில் ஆற்பாட்டம் செய்த இடதுசாரி தோழர் மற்றும் தோழியர்களை போலிஸ் பேருந்தில் அடைத்து சிறைக்கு கொண்டுசென்றார்கள் காவலர்கள், பேருந்தில் செல்லும் போதும் மைய அரசிற்கெதிராக கோஷம் போட்டுக்கொன்டே சென்றார்கள்.
காங்ரஸ் ஆளும் புதுவையில் இந்த பந்தின் வெற்றி உண்மையில் எதிபாராத ஒன்றுதான் ஆனால் மக்கள் மத்திய அரசின் மேல் நம்பிக்கையிழந்துள்ளார்கள் என்பதை தான் இந்த வெற்றி நமக்கு உண்ர்ந்துகிறது.
Monday, July 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)