உலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அது இந்தியாவை தொடுவதற்க்குள் அந்த மற்றம் பல்வேறு புதிய பரினாமங்களை கண்டுவிடும். வெள்ளையர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நீராவி இரயில் தற்போது மின்சாரத்தாலும், டீசலாலும் இயக்கப்படுகிறதென்பதைத் தவிர நமது ரயில்வேதுறையில் வேறேந்த பெரிய மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை.
2009இல் அன்றைய ரயில்வேதுறை அமைச்சர் லாலூ பிரசாத் ஜப்பான் சென்று புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார், அது போலவே இந்தியாவிலும் விரைவில் புல்லட் ரயில் இயக்கப்படும் என மக்கள் ஆவலோடு எதிற்பார்த்தார்கள் ஆனால் மீண்டும் அத்துறை மமதாவிடம் சென்றதால் புல்லட் ரயிலைப்பற்றி முற்றிலும் மறந்துவிட்டார்.
ஏற்கனவே புணே-மும்பை-ஆமதாபாத் இடையே 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலை இயக்குவது தொடர்பான ஆய்வை ரயில்வே அமைச்சகம் நடத்தி வந்தது, புணேவிலிருந்து ஆமதாபாத்துக்கு 533 கிலோ மீட்டர் தூரமாகும். இந்த தூரத்தை கடக்க 10 மணி நேரமாகிறது. எனவே புணே-மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரயிலை இயக்குவதற்கான வாய்ப்பு உண்டு, சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ரூ.15 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்தொகையை மகாராஷ்டிர மாநில அரசும், ரயில்வே அமைச்சகமும் இணைந்து வழங்கியது.
மேலும் புல்லட் ரயிலை இயக்குவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பத்தைத் தருவதாக சமீபத்தில் இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் யுகியோ ஹடோயமா தெரிவித்தார். ஜப்பான் நாட்டிடமிருந்து புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை வாங்கும் திட்டம் இந்தியாவிடம் தற்போது இல்லை.
பின்பு தில்லி-பாட்னா-தில்லி-சண்டீகர்-அமிர்தசரஸ், ஹவ்ரா-ஹால்டியா, ஹைதராபாத்-தோரங்கல், விஜயவாடா-சென்னை, சென்னை-பெங்களூர்-கோவை-எர்ணாகுளம் ஆகிய வழித்தடங்களிலும் புல்லட் ரயிலை இயக்குவது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் என ரயிவே தெறிவித்தது.
இன்னிலையில் சீனா 2009ம் ஆண்டே புல்லட் அறிமுகம் செய்தது, அதுமட்டுமல்லாமல் 2015க்குள் சுமார் 8000 கிமி தொலைவுள்ள புல்லட் ரயில் பாதையை கட்டமைக்க சுமார் 8 லட்சம் கோடி ஒதுக்கியிள்ளது, இந்த நிதி சுமார் இந்திய பட்ஜெட்டில் 80 சதவிகிதம் ஆகும், ஆனால் இந்தியாவோ புல்லட் ரயிலைப்பற்றி கவலைப்படவில்லை என்பது நாட்டிற்க்கு பெரும் பின்னடைவு என பொதுமக்கள் கருதுகிறார்கள்.