"பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போடப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு, தடுப்பூசி இலவசம்' என, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி அறிவித்தார், ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிஃப்ளு மற்றும் ரெலேன்சா ஆகிய இரண்டு எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப் படுகின்றன, இவை அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனையிலும் கிடைக்கும் என்று அறிவித்தார்கள்.
சரி, ஓர் தடுப்பூசி போட்டுக் கொள்ளளாமே என்று கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு சென்றேன், அங்கு தனி பிரிவு அமைத்து ஓர் கந்து வட்டி காரன்போல் வசூல் நடத்துகிறார்கள். பெயர் மற்றும் முகவரியை குறித்துக்கொண்ட அவர்கள் ரூ.235 பனம் கேட்டார்கள், பின்பு ஓர் ஊசியைப் போட்டு ஜந்துநிடமாக சில்லரைக்கு அலையவிட்டார்கள்.
ரூ.235க்கு நான் ரசீது கேட்க, அதெல்லாம் கிடையாது அப்படி கொடுக்க அரசு எங்களுக்கு உத்தரவிடவில்லை என்றார்கள், ஓர் குண்டூசி வாங்கினால் கூட அதற்க்கு பில் தரவேண்டிய நிலையில், என்னிடம் 235ஜ வாங்கிக்கொண்டு பில் இல்லை என்று சர்வ சார்வசாதாரனமாக சொல்கிறார்கள் இந்த பொருப்புள்ள அரசு பணியாளர்கள்.
மருத்துவ மனையில் பணியாற்றும் ஓர் நன்பரை சந்திக்கையில், அரசு பொது மருத்துவமனையில் நடக்கும் அவலத்தை விவறித்தார், 20 லட்சம் மதிப்புள்ள சலவை எந்திரம் வந்து 4 மாதமாகியும் இன்னும் அது பொருத்தப்படவில்லை, பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அனுமதியில்லாமல் விடுப்பு எடுத்துக்கொள்வது என பலவற்றை வருதத்துடன் பகிற்ந்துகொண்டார்.
ஓரு ரூபாய் அரிசி, இலவச கலர்டிவி என பல்வேறு இலவசங்களை வழங்கும் இந்த அரசு ஏன் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை இலவசமாக வழங்க மறுக்கிறது, முதல்வர் விரைவில் இலவச தடுப்பூசி போடப்படும் என தெறிவித்து 50 நாட்கள் ஆகியும் கூட இன்றுவரை ஏன் அது நடைமுறைப் படுத்தவில்லை என்பது முதல்வருக்கே வெளிச்சம்.
இவற்றை கேட்க யாரும் முன்வராதது, மக்கள் மக்களாட்சியில் நம்பிக்கை இழந்துவிட்டதை காட்டுகிறது. கேட்க வேண்டிய எதிர் கட்சிகள் ஆர்பாட்ட அரசியலோடு ஓய்ந்து போகின்றன, ஆட்சியை வழிநடத்துவதில் எதிர் கட்சியின் பங்கே மிக அவசியமானது என்பதை மக்களும் புறிந்துகொள்ளவில்லை, மற்ற கட்சிகளும் புறிந்துகொள்ளவில்லை.
Readmore...