Pages

Banner 468

Subscribe
Tuesday, June 14, 2011

நவீன ராமானுஜர்களும் தள்ளாடும் தலித் விடுதலையும்!!!

10 comments
 

அம்பேட்கரின் மத மாற்றம் தோற்று விட்டது, புத்த‌ மதம் சர்வ நிவாரணியல்ல, தலித் அரசியல் தலைவர்களை விமர்சிக்க‌ கூடாது, பௌத்தம் பேசும் தலித்துக்கள் வெளிநாட்டு பணவுதவியுடன் பேசுகிறார்கள், இந்து மதத்தில் இருந்துகொண்டே சாதியை ஒழிக்க வேண்டும் என்பது போன்ற பாசிச சிந்தனையோடு ஒரு சூத்திரனோ அல்லது பார்பனனோ பேசினால் சரி அவன் சாதி வெறியில் பேசுகிறான் நம் வேலையைப் பார்க்கலாம் என்று போய்விடலாம் ஆனால் இத்தனையையும் பேசுபவர் தலித் என்றால் என்ன சொல்வது! நண்பகளின் இது போன்ற கேள்விகளால் எனக்கு சவார்கர் மற்றும் ஈ.வெ.ரா. ஆகியோரின் ஞாபகம் தான் வந்து தொலைகிறது.

சவார்கரின் தத்துவப்படி இந்தியா இந்துக்களுடைய நாடு, இந்துகள் மனுதர்மத்தை ஏற்று வாழவேண்டும் என்றார்.  ஈ.வெ.ரா. வின் தத்துவமோ பார்பனனை வெளியேற்று, கடவுள் இல்லை என சொல், ஆனால் இந்துவாகவே வாழ் என்றார் ஆக இருவருடைய பாதைக‌ள்தான் வேறானதே தவிர‌,  இலக்கு இந்து மத்தை வலுபடுத்துகின்ற வேலைதான், அப்படி இந்து மதம் வலுப்பெற்றால் மனுதர்ம‌த்தை ஒழிக்க முடியுமா? மனுதர்மத்தை கடைபிடித்தால் சமத்துவம் நிலைக்குமா?  சமத்துவம் இல்லாத பகுத்தறிவு பலிக்குமா? ஆக ஊருக்கு உபதேசம் என்ற மனநிலையோடுதான் இன்று இந்தியாவில் உள்ள அனைத்து தலித் அல்லாத‌ முற்போக்கு சிந்தனையாளர்களும், கட்சிகளும், அமைப்புகளும், ஊடகங்களும் செயல்படுகிறது.

பார்பதர்க்கு இந்த மனநிலை பிற்போக்கு மற்றும் முற்போக்கு சிந்தனைவாதமாக தெறியும் ஆனால் இவைகள் டார்வினின் கோட்பாடான "வலிமையானதே வாழும் (survival of the fittest)" என்ற நோக்கோடு தாம் சார்ந்த சமூகத்தை பொருளாதார‌ ரீதியாக‌ வலுப்படுத்தவே இந்த பிற்போக்கு மற்றும் முற்போக்கு வாதம் பேசப்பட்டதே ஒழிய, இந்து மதத்தில் உள்ள சாதியை ஒழித்து ஓர் சமத்துவ சமூதாயத்தை உருவாக்க அல்ல. இதை உணர்ந்தே தான் அயோத்திதாஸ் சொன்னார் "நான் ஒரு பூர்வ பௌத்தன்" என்று, அம்பேட்கரோ "நான் இந்துவாக பிறந்தேன் ஆனால் இந்துவாக சாக மாட்டேன் (I was born as a Hindu but I will not die as a Hindu)" என்றார்.

தலித் மக்களை பொருத்தவரையில் இந்து மதம் என்பது படு பாதாளத்தில் விழுந்து நொருங்கிய ஒர் பயனிகள் பேருந்தைப் போன்றது, பிழைத்துக்கொள்ள நினைப்பவர்கள் கையில் கிடைத்த கொடி கொம்பை பிடித்து அந்த பேருந்திலிருந்து வெளிவருவதே இப்போதைக்கு நிவாரணம், நீங்கள் பௌத்தத்தின் உதவியோடுதான் வெளியேரவேண்டும் என யாரும் கட்டாயப்படுத்தவில்லை, நீங்கள் எந்த மத‌த்திற்க்கு வேண்டுமானாலும் செல்லளாம், இல்லை இந்த பேருந்தை சீர் செய்து சாதி என்ற படுபாதாளத்திலிருந்து மீட்டு சமத்துவம் எனும் சமவெளியில் இயக்க முடியும் என்றால் முயற்சித்துப் பாருங்களேன் சகோதரா! இதையேத்தான் பார்பன குளத்தில் பிறந்த துறவி இராமானுஜர் பல நூற்றாண்டுகளுக்கு முன் முயற்சித்தார், அவர் ஆதி திராவிடர்களை "திரு குல‌ம்" என வர்ணித்து, தான் நரகத்திற்கு போனாலும் பரவாயில்லை, தாழ்த்தப்பட்ட மக்கள் சொர்க்கம் செல்லவேண்டும் என்று நினைத்து பல போராட்டங்களை செய்ததாக படித்திருக்கிறேன். இதுபோன்ற முயற்சிகளையும் வர‌வேற்கின்றோம்.

புத்த மதத்தில் பல‌ பிரிவுகள், பலநூறு உட்பிரிவுகள் உள்ளன, ஆனாலும் உலகின் மிக தொண்மையான மதம், மனிதனை மனிதனாக வாழ்விக்கும் மதமாக பௌத்தம் இன்றும் விளங்குகிறது. அதுபோல் உலகின் முதம் நிறுவனமாக்கப்பட்ட மதமும் பௌத்தமே, சில ஆண்டுகளுக்கு முன்பான உலகளாவிய‌ ஓர் கருத்துக்கணிப்பில் உலகின் மிகச்சிறந்த மதம் பௌத்தம் என அறிவிக்கப்பட்டது.

அதுபோல் புத்தம் சர்வ‌ நிவாரணியா அல்லது வலி நிவாரணியா என்பது அதை ஏற்றுக்கொண்டவர்களின் மனநிலையைப் பொருத்தது, ஆனாலும் பௌத்தத்திற்க்கு சர்வ‌ நிவாரணியாகவும், வலிநிவாரணியாகவும் இருக்க அனைத்து தகுதியும் உண்டென்பது அம்பேட்கர் வாதம். தலித் விடுதலைக்கு மத மாற்றம் ஓர் நல்ல வழி, இல்லை இல்லை தலித் விடுதலைக்கு மதமாற்றத்தை விடவும், புத்த மதத்தைவிடவும் சிறந்த வழி என்னிடம் உண்டென்று நீங்கள் சொன்னால் உங்கள் பின் அணிவகுக்க தாயார்! நமக்குத் தேவை சமநிகர் சமூக பொருளாதார வாய்ப்பு மட்டுமே! அதற்க்கு எந்த மதமோ அல்லது எந்த தத்துவமோ வாய்ப்பளித்தாளும் அதனைப் பின்பற்ற தலித் மக்கள் தயாராக உள்ளார்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பௌத்த தத்துவ‌த்தை உணர்த்து மதம் மாறிய அம்பேட்கரின் முயற்ச்சி தேக்கமடைந்ததற்க்கு தேர்தல் அரசியல் மட்டுமே காரணம், தலித் மக்களை வைத்து பிழைப்பு நடத்த தலித் அரசியல் வாதிகள் என்று ஓரு கூட்டம் இந்தியா முழுவது அலைந்து கொண்டிருக்கிறது, அவர்களை மத்திய மாநில கட்சிகள் தங்களின் ஏவலாளிகளாக மாற்றி தலித் விடுதலையை தலித் மக்கள் மூலமாகவே பின்னோக்கி தள்ளுகிறர்கள். பல ஆயிரம் கோடிகள் புறளும் அரசியல் சந்தையில் விலைபோக தலித் அரசியல் தலைவர்கள் பல சித்து வேலைகளை செய்து தங்களை நிலைநாட்ட வேண்டியிருக்கிறது, அதன் விளைவாகத்தான் தமிழகத்தில் பௌத்தத்திற்க்கான பாதை குறுகி, மொழி அரசியலுக்கான பாதை அகண்டு, இன்று ஈழ தமிழர்களுக்காக தீக்குளித்தலில் போய் முடிந்திருக்கிறது.

ஓட்டு அரசியல் என வந்துவிட்டால் தலித் அரசியல் வாதிகள் தலித் விடுதலையை மையமாக கொண்டு அரசியல் நடத்த இயலாது, அதனால் தான் இயக்கமாக இருக்கும் போது அவர்கள் பேசிய வீரவசனம் ஓட்டு கட்சியாக மாறிய பின்பு குறைந்துவிடுவது தவிற்க்க முடியாதது. எல்லா அரசியல் வாதிகளைப் போலவே தலித் அரசியல் வாதிகளும் அதிகாரத்தைக் கைப்பற்ற பல வழிகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது, ஆக தலித் அரசியல் வாதிகளின் நோக்கம் அதிகாரம்தானே தவிர விடுதலையல்ல.

எனவெ இத்தகய‌ எதார்த்த நிலையை நாம் உணர்ந்த பின்பு,  விடுதலையை நோக்கி பயனிக்கும் உணர்வை ஏற்படுத்தும் அமைப்புகளை கட்டமைக்கும் பொருப்பு ஏனைய தலித் இயக்கம், அமைப்புகள் மற்றும் அறிவு ஜீவிகளின் கடமை, மேலும் இது போண்ற அமைப்புகளை நிறுவ தலித் கட்சிகளும் மறைமுகமாக ஆதறவும் தரவேண்டும், மாறாக இங்கு உள்ள தலித் அரசியல் தலைவர்கள் யாரும் மாற்று இயக்கத்தை கட்டமைத்துவிடக்கூடாது, தங்களை இல்லாமல் யாரும் எந்தவித போராட்டத்தையும் நடத்தக்கூடாது என்பதில் கவனமாக, மிக குறுகிய மனப்பான்மையோட்டு வெந்தபுண்ணில் வேலைப்பாச்சும் வேலையை செய்துவருகிறார்கள்.

ஆக அதிகாரத்தை நோக்கி பயனிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் ஏனைய விடுதலைக்கான வழியான மதமாற்றம், சிறிய தலித் அமைப்புகளின் வளர்ச்சி, தலித் சிந்தனையாளர்களை ஒருங்கினைப்பு, தலித் இளைஞர்களுக்கான அரசியல் கல்வி, நில மீட்பு, தீண்டாமை ஒழிப்பு போராட்டம் போண்ற எல்லா விடுதலைக்கான வழியை மறித்துக்கொண்டு ஓர் ஆக்டோபஸ் போல் செயல்படும் தலித் அரசியல் தலைவர்களை விமர்ச்சனம் செய்யாமல் யாரும் மெச்ச முடியாது. .

தலித் விடுதலையைப் நோக்கி போகவேண்டுமானால் தலித் மக்கள் முதலில் கம்யூனிஸ, திராவிட மற்றும் தலித் கட்சிகளிடமிருந்து கருத்தியல் ரீதியான விடுதலையடைவது மிக‌ முக்கியம் அதுவும் குறிப்பாக தமிழகம் போண்ற மாநிலத்தில் இந்தி எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, தமிழ் தேசம், மற்றும் திராவிடம் போண்ற பல படுகுழிகளில் இருந்து வெளியேவரமல் தலித் விடுதலையைப் பற்றி பேசுவது, மேலும் மதமாற்றம் மாற்றம் தராது என்பது போன்ற வாதங்கள் எல்லாம் சவார்கர் மற்றும் ஈ.வெ.ரா.க்களின் சிந்தனையை வலுப்படுத்த வழிவகுக்குமே தவிர தலித் விடுதலைக்கு வழிவகுக்காது.

Readmore...