Pages

Banner 468

Subscribe
Tuesday, June 24, 2008

உண்மை சுடும்

0 comments
 
பல்வேறு புதுமைகளை மேல்தட்டு கூட்டம் ஏற்று, அதற்கேற்றவாறு தங்களை வடிவமைத்துக்கொண்டு சுரண்டி செல்கிறது ஒருபுறம், மறுபுறமோ வறண்ட நிலத்தில் வணப்பை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். வாழ்க்கையெனும் கடலில் காகிதக் கப்பலில்தான் நாம் பயனப்படுகிறோம் என நம் சமூக மக்களுக்கு புரியாமல் இருப்பதற்க்கு என்ன காரணம்?

வீடும், நிலமும், காடும், கறையுமற்று எத்தனை காலம்தான் வாழ்வை நடத்துவது என நாம் ஏன் எண்ண மறுக்கிறோம்? கழனி இல்லாததால்தான் கஞ்சிக்கில்லை, வறுமையால் தான் நமக்கு வாய்ப்புகளில்லை என முடிவாகி தொடருகின்ற இந்த சாதியெனும் நோய்க்கு மருந்து கொடுக்க நம்மில் எவறும் வைத்தியரில்லையா? அல்ல நமக்கு வைத்தியரிடம் செல்ல வழிதான் தெறியவில்லையா? நாகரிக வளர்ச்சியால் முதிற்சியடைந்த மனிதனுக்கு நாவும் நோவும் நீண்டுகொண்டே போகிறது என பேசாமல் விட்டுவிட்டோமா? இல்லை இலக்கன பிழைபோல் இதுஒரு இனப்பிழை என எண்ணுகிறோமா? அல்லது குருட்டு விழிகளுக்குள் குடியிருக்கும் இருட்டைப்போல் இது நிரந்திரமானது என தீர்மானித்துவிட்டோமா?


இராயிரம் ஆண்டுகளுக்கு முன், மதியை மற‌ந்து விதியின் வழியில் வாழ்ந்துகொண்டிருந்த மானுட கூட்டத்தின் மடமையை போக்க காட்டை நோக்கி நடந்தான் கெளதமன். ஐந்து பேருன்மையையும், எட்டு நல்வழிகளையும், ஆசையை ஒழிக்க அறுமருந்தென கூறினான். நிலையானது என்ற வார்த்தை மட்டுமே நிலையானது என்றதால் சிலையானான் என்றும் நிலையானான்.

மானுட வாழ்க்கையின் மகத்துவம் பற்றி போதிச்சத்துவன் போதித்தவழியில் தம்குல மக்களாம் ஆதி தமிழர்கள் எனும் போதித்தமிழர்களை பெளத்தம் ஏற்க அரும்பாடு பட்டான் ஐயன் அய்யோத்திதாச பண்டிதன்.

பண்டிதர் போதித்த பழந்தமிழர் சிந்தனையை,சூழ்ச்சி வகுத்து சுருட்டிக்கொண்டது கூட்டம், உடல் உழைக்காமல் சுரண்டிய பணத்தால் பதிப்பித்து தன் புகழ் வயிற்றை நிறப்பிக்கொண்டது. இன்று சாயம் வெளுத்ததால் குகைக்குள் ஒளிந்திந்த குள்ள நரி கூட்டங்கள் சிறுத்தயை பார்த்து பகுத்தறிவு ஓலமிடுகிறது.


கடந்துபோன நூற்றாண்டில் உளிகள்பட்டு கற்கள் சிலையாகிக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு கல் மீது பட்ட உளி மட்டும் கல்லானது, கல்லோ உளியானதால் எமக்கு ஒளியானது என்றும் நிலையானது. தனது கூறிய உளியால் ஆரிய மூக்கறுக்க அரண்டுபோன வானரக்கூட்டம் சூழ்ச்சி வகுத்து, சூத்திரமும் கோத்திறத்தை கையிலேந்தி சாதி பிச்சைக் கேட்டது, சமையமும் எமதே என்றது. நச்சுப் பாம்பின் வலையில் சிக்கிய எலியான எமது வாழ்க்கை, இனியும் இந்த சிறையிலிருப்பதில்லை என எண்ணியதால் 1956ம் ஆண்டு , அக்டோபர் மாதம் 14ம் தேதி நாகபுரியில் பெளத்தம் உயித்தெழுந்தது.


நமது நிலங்களையும் வளங்களையும் அபகறித்துக் கொண்டவர்கள் இன்று இனத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இம் மண்ணின் மைந்தர்களாகிய நாம் மொழியரசியல் பேசிய சதிகார‌ர்கள் எறிந்த பகுத்தறிவு கல்பட்டு வீழ்ந்தோம், பெளத்தம் மட்டுமே நமதென மற‌ந்தோம்.


Leave a Reply