போபர்ஸ் பீரங்கி மற்றும் ஸ்பெக்ரம் ஆகியவற்றுக்கு சற்றும் குறைவில்லாமல் தற்போது காமன்வெல்த் போட்டி ஊழல் சோனியா தயவில் சிறப்பாக நடந்துவருகிறது. மேற்கூறிய அனைத்து முறைகேடுகளும் காங்ரஸ் ஆட்சியின் தான் நடந்தது என்பது கவணிக்கத்தக்கது.
காமன்வெல்த் போட்டி வரலாற்றிலேயே அதிக செலவு செய்தது இந்தியாதான். முதலில் 617.5 கோடி என்றார்கள், அப்புறம் 1895.3 கோடி அப்புறம் 7000 கோடி என்றார்கள். இப்போதைய நிலவரப்படி 65500 கோடி செலவாகுமாம். காமன்வெல்த் போட்டி 2014 ல் நடத்தப்போகும் ஸ்காட்லான்ட் திட்டமிட்டுள்ளது மொத்தமே 3749 கோடிகள்.
காமன்வெல்த் ஏற்பாடு முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதில் தொடர்புடைவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். போட்டி முடிந்த பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய பிரதமர் அமைச்சரவை குழுவை நியமித்துள்ளார் என்று மட்டும் கூறிவிட்டு காங்ரஸ் தலைவர் சோனியா காந்தி முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படுவது நாகரீகமற்ற அரசியல்.
மணிஷங்கர் ஐயர் பெரிய அளவில் துவக்கிய இந்த பிறச்சனை பாராளுமன்ற இருஅவைகளையும் சில நாட்கள் முடக்கியதேடு தற்போது முடங்கி கிடக்கிறது, அதுமட்டுமல்லாமல் காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்குத் தொடர்பு உள்ளது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சாமியும் கூறியுள்ளார். இதில் ஒரு பெரும் தொகை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு லண்டனில் வைத்து செலுத்தப்பட்டது.லண்டனில் உள்ள போது ராகுல்காந்தி ரவுல் வின்சி என்ற பெயரில் வலம் வந்துள்ளார். மாதம் ஒரு முறையாவது லண்டனுக்கு விஜயம் செய்யும் ராகுல் காந்திக்கு இந்திய ஹைகமிஷனர் அலுவலகத்தைச் சார்ந்த ஒருவர் எடுபிடியாக செயல்பட்டு வருகிறார் என சுப்ரமணியன் சாமி விவரிக்கிறார்.
30 ரூபாயிக்கு வாங்கவேண்டிய கொசு விரட்டியை 90 ரூபாயிக்கு வாடகை எடுத்துள்ளார்கள், 30 ஆயிரம் ரூபாயில் சொந்தமாகவே நல்ல கணினி வாங்கமுடியும் போது இவர்கள் 90 ஆயிரம் கொடுத்து கணினியை வாடகை எடுத்துள்ளார்கள், இதுமட்டுமல்லாமல் சாலை, மைதானம், கழிவறை போண்ற எல்லா நிலையிலும் கொல்லையோ கொல்லை, ஆனால் அவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படாத பிரதமர் அனுவிபத்து மசோதாவை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தார்.
இன் நிலையில் டெல்லியில் பெய்துவரும் கடும் மழையால் பெரும்பாலான வேலைகள் தடைப்பட்டுள்ளதாக செய்திகள் தெறிவிக்கின்றன. ஒலிம்பிக்கில் சீனா சாதித்ததுபோல், காமன்வெல்த் போட்டியில் இந்தியா சோபிக்குமா என்பது சோனியாவுக்குதான் வெளிச்சாம்.
Friday, September 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)




Subscribe to email feed






Thanks for sharing this information; it is the really nice post. Also, find the Railway Recruitment Board information like exam date, admit card, result etc through the below link.
rrb alp exam date 2018