உடன்பிறப்பே! தந்தை பெரியாரால் ஈர்க்கப்பட்டு அறிஞர் அண்ணாவால் வளர்க்கப்பட்டு, உடன்பிறப்புகளால் நான் அரசியலுக்கும் பதவிக்கும் வந்தவன் நான் என்பதை நீங்கள் அறியாதவர்கள் அல்ல. தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் நான் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வருகிறேன் என்பதை உலகறியும். 650 கோடி ரூபாய் செலவில் நாம் நட்டத்திய செம்மொழி மாநாட்டை உலகம் மறந்துவிடுமா? இல்லை 100 நாட்களில் 4 தொலைக்காட்சி அலைவரிசைகளை கலைஞர் தொலைக்காட்சிக்காக துவங்கியதை மக்கள்சாதனை என்று சொல்லகூடாதா? இந்த வயதிலும் மிக கடுமையாக நான் உழைக்கிறேன் என்றால் அதை சில விஷமிகளும், திராவிட பன்பாட்டு எதிரிகளும் தவறாக பேசுகிறார்கள்,பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஷாருக் கான் போன்ற நடிகர்கள் மராட்டிய முதல் மந்திரியை பார்பதற்க்கு கூட அனுமதி மறுக்கப்படுகிற வேலையில் தமிழக முதல்வர் அலுவலக கதவு சின்னதிரை மற்றும் வெள்ளிதிரை கலைஞர்களுக்காக எப்போழுதுமே திறந்தே இருக்கிறது என்பதை கலையுலகம் நன்கறியும். எத்தனை சலுகைகள், எத்தனை எத்தனை பாராட்டு விழாக்கள்! இப்படி நடிகர்கள் மற்றும் நடிகைகள் புடைசூழ இருப்பதையே நான் பெருமையாக நினைக்கிறேன். சின்னதிரை கலைஞர்களுக்கு தனி நலவாரியம், சின்ன மற்றும் வெள்ளிதிரை நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் போன்றோர்களுக்கு 75 ஆயிரம் இலவச வீடு திட்டம் என இந்த அரசின் சாதனைப்பட்டியல் நீள்கிறது. இப்படி மக்களின் வரிபணத்தை வாரி வழங்குவதால் தான் அவர்கள் பாராட்டு விழா என்ற பெயரில் நல்ல குத்தாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள், இதை ஏதோ நான் மட்டும்தான் கண்டுகளிப்பதுபோல சில பத்திரிக்கைகள் எழுதுகின்றன, அதே குத்தாட்டத்தை நமது கலைஞர் தொலக்காட்சியில் பல்வேறு வர்த்தக விளப்பரங்களுக்கிடையில் ஒளிபரப்பு செய்யவில்லையா, அல்லது அதை தமிழக மக்கள் தி.மு.க அரசு கொடுத்த இலவச டி.வியில் பார்க்கவில்லையா, ஏதோ இதுபோண்ற குத்தாட்டங்கள் பாராட்டுவிழாக்கள் என்ற பெயரில் நடத்துவதை ஒருசிலர் குறை கூறினாலும் அது மக்களுக்காவே என்பதை என்போண்ற திராவிட சிந்தனை உள்ளோர்கள் புரிந்துள்ளார்கள்.
ஏதோ இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளில் நான் மட்டும்தான் சின்ன திரைக்கும் வெள்ளிதிரைக்கும் அதிக நேரம் செலவிடுவதாக சிலர் நினைக்கிறார்கள்,அவர்கள் நினைத்திவிட்டு போகட்டும்,தமிழில் வெளிவரும் எல்லா திரைப்படத்தையும் நமது அமைச்சர் பெருமக்களோடு திரையரங்கிற்க்கே சென்று நான் பார்கிறேனே ஏன்? திராவிட இயக்கத்தை வளர்த்ததே கலையும் இலக்கியமும் தான் என்பதை அறிஞர் அண்ணா போண்றோர் எத்தனையோ மேடையில் பேசியிருக்கிறார்கள் என்பதை நீ நினைவில்கொள்ளவேண்டும்.
இன்று நேற்றல்ல கடந்த 60 ஆண்டுகளாக எனக்கு தமிழ் திரைஉலகோடு தொடர்புன்டு, என்னையும் இயக்கத்தையும் வளர்த்த தமிழ் திரைஉலகை சிறப்பாக வளர்க்க என்குடும்பத்தார்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை நன்கறிவீர்கள், முரசொலி மாறனால் ஏற்படுத்தப்பட்ட சன் குழுமம் இன்று 22 தொலைக்காட்சி அலைவரிசையோடு தென் இந்தியா முழுவதும் கலைசேவை செய்துவருகிறது, மாறன் சகோதரர்களால் ஏற்பட்ட மனகசப்பால் உதயமான நமது கலைஞர் தொலைக்காட்சி தற்போது 5 அலைவரிசையோடு தமிழக மக்களுக்கு அல்லும் பகலுமாக சேவை செய்துவருகிறது, அது மட்டுமா இன்று தமிழில் எடுக்ப்படும் பெரும்பான்மையான திரைப்படத்தை தயாரிப்பவர்களும், நடிப்பவர்களும் என் பேரன்களான உதயநிதியும், துறை தயாநிதியும் போண்றோர்கள்தான், இப்படி இந்த வெள்ளி மற்றும் சின்னதிரையை நாங்கள் ஆக்கிரமித்துள்ளதை கண்டு பொருக்கமுடியாத சிலர் அரசிற்க்கு எதிராக பேசுகிறார்கள், எமது நல்லாட்சிக்கு கலங்கம் ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயல்கின்றன.
பேசுபவர் பேசட்டும் ஏசுபவர் ஏசட்டும், இந்த தள்ளாத வயதில் குத்தாட்டத்தை கண்டுகளிப்பதை நிருத்தமுடியாது, அதுவும் நமிதா போன்றோர் ஆடும் ஆட்டம் என் மனதையும் தொடும்படியாக அமைந்துள்ளது,கண்டுகளிப்பது குத்தாட்டமானாலும், கலைவளர்ப்பது நாமல்லவா! பலன் பெறுவது கலைஞர்கள் ஆனாலும் பயனடைவது தமிழக மக்கள் அல்லவா!! ஆகையால் உடன்பிறப்பே உன் தலைவனுக்கு பாராட்டு விழா என்றால் பறந்துவா, நீ கழக அரசு கொடுத்த இலவச டி.வியில் பார்ப்பதைவிட நேரில் பார்க்க வேண்டும் என்பதே என்விருப்பம். வாழ்க தமிழ்! வளர்க திராவிடம்!!
(கற்பனை ஆனாலும் உண்மை)
Friday, September 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)