பெரும்பாலும் நம் பயனம் பெருந்தையே மையப்படுத்தி இருக்கிறது, ஓர் பத்து கிலோமீட்டருக்குள் செல்ல வேண்டுமானால் ஓரளவிற்க்கு வசதிபடைத்தவர்கள் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவார்கள் ஆணால் சாதாரன மக்களுக்கு அரசாங்க அல்லது தனியார் பேருந்து, மினிபஸ், ஷேர் ஆட்டோ இதைத்தவிர பெரும்பாலும் வேரு எதிலும் பயனிக்க வாய்ப்பு குறைவு, ரஜினி பாடியது போல பஸ்ஸை எதிபார்த்து பாதி வயசாச்சு என்பது உண்மைதான்.
இதுபோண்ற வாகனங்களில் பயனிப்பதென்பது மிக சாமார்த்தியமான செயல்தான், 6 பேர் பயனிக்க கூடிய ஓர் ஷேர் ஆன்டோவில் குறைந்தது பத்து பன்னிரண்டு பேரை ஒருவர்மேல் ஒருவராக அடுக்கி நகர்த்திக்கொண்டு செல்வார்கள், 15 நிமிடத்தில் நடந்து செல்லக்கூடிய தூரத்தை 30 நிமிடத்தில் கடந்து செல்லும் நமூர் ஷேர் ஆட்டோ, இதைவிட்டாலும் நமக்கு வேரு வழி இல்லை, சரி எல்லாவற்றையும் பொருத்துக்கொண்டு பயனித்தால் நம் இறங்கவேண்டிய இடத்தை அடைவதற்க்குள் பல்வேறு பிறச்சனைகளை சத்திக்க வேண்டிவரும், சில்லறை பாக்கி, சில நேரங்களில் பெண்கள் அருகிலோ அல்லது எதிரிலோ அமருவதால் ஏற்படும் பிறச்சனை இப்படி இடம் போய்சேர்வதற்க்குள் போதும் போதும் என்று ஆகிவிடும், இறக்கும் போது சட்டையெல்லாம் கசங்கி ஏதோ சண்டையில் அடிபட்டு வந்தவன் போல் காட்சியளிப்போம். இதில் முக்கியமான பிறச்சனை சில்லறை பாக்கி, இருகிற கூட்டத்தில் பர்சில் இருக்கும் பணத்தையோ சில்லறையோ எடுக்க கூட முடியாது, சரி இறங்கும் போது கொடுக்கலாம் என்றால் சில நேரங்களில் சில்லைறை இல்லாமல் பல நிமிடங்கள் அலைய வேண்டி வரும்.
அதுவும் இதுபோண்ற தனியார் பஸ்ஸோ ஆட்டோவோ இருந்தால் ஒரளவிற்க்கு சமளித்துவிடலாம், இதுவே அரசாங்க பஸ்ஸாக இருந்தால் மொய் எழுதிவிட்டுதான் போகவேண்டும், அரசாங்க பஸ்ஸின் நடத்துனர் பயனிகளை நாயைவிட கேவலமாக தான் நடத்துவார்கள், அவர்களுடைய சொந்தகாரர்களோ அல்லது கூட வேலைசெய்பவறோ இருந்தால் பேருந்து எங்குவேண்டுமானாலும் நிற்க்கும், யாரும் கேட்க முடியாது ஆனால் நம்மைப்போல சதாரன மக்கள் அவசரத்துக்கு ஓர் இடத்தில் நிருந்த சொண்ணால் நடத்துனர் ஓட்டுனரை கேட்க சொல்வார், ஓட்டுனர் நடத்துனரை கேட்க சொல்வார், இருவரிடமும் ஒப்பதல் பெருவதற்க்குள் நாம் இறங்கவேண்டியம் இடத்தை பேருந்து கடந்து சென்றிருக்கும்.
பெரும்பாலும் எல்லோரும் பேருந்தில் ஏறிய பிறகுதான் நடத்துநன் டிக்கட் கொடுக்க ஆரம்பிப்பிப்பார், இரண்டொரு டிக்கெட் கிழிப்பதற்க்குள் சில்லைரை பிறச்சனைய் அரபித்து கத்தி கொள்ளைவிடுவார், எப்போழுது கேட்டாலும் சில்லைரை இருப்பதில்லை என்றே பதில் வரும், முன்பெல்லாம் 50 பைசாவை நாம் கேட்கவே முடியாது ஆனால் இப்பொழுது ஒரு ரூபாயைகூட கேட்டால், ஓரே வார்த்தை "போகும்போது வாங்கிகலாம் கத்தாதிங்க" என்ற பதில்தான் வரும், இந்த ஒரு ரூபாய்க்காக பல முறை நாம் கேட்க வெட்கப்பட்டுகொண்டு பலர் இறங்கி போய்விவார்கள், ஆக நடத்துனர் இப்படி நாளைக்கு சில நூறு கல்லா கட்டுவார் போலிறுக்கு.
இரண்டு நாளுக்கு முன்பு நெய்வேலி செல்வதற்க்காக கடலூரில் ஒர் அரசு பேருந்தில் ஏறினேன், பேருந்து முதுநகரை அடைந்த நிலையில் நடத்துனர் நான் அமர்ந்திருக்கும் இருக்கை பக்கம் வந்தார், நான் 100 ரூபாயை நீட்ட "என்ன இல்லாம் நூறு அய்நூறுன்னு கொடுத்தா எப்படி, என்கிட்ட சுத்தம்மா சில்லறையில்லை ரெண்டு ரெண்டு பேரா ஜாயின் பன்னிதான் விடுவேன்" என்றார், சரி என்று தலையசைத்தவுடன் சீட்டை கிழித்து கொடுத்தார், சில்லறையை கொடுக்க வேண்டும் என சீட்டின் பின்புறம் எழுதி கொடுங்கள் என்று கேட்டதற்க்கு "அதெல்லாம் தருவோம் சும்மா ஒக்காருங்க" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார், சரி பர்சில் எங்காவது அஞ்சோ பத்தோ மறைந்திருக்கிறதா என தோன்டி துலாவி பார்த்தும் ஒன்றும் அகப்படததால், அன்றையை நாளிதழில் மூழ்கிவிட்டேன்,
நெய்வேலி மந்தாரகுப்பம் பஸ் நிலையம் வந்ததும் ஏதோ ஓர் மறதியில் சில்லறை வாங்க வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் இறங்கி சற்று தொலைவில் உள்ள ஓர் ஸ்வீட் கடையில் திண்பன்டங்களை வாங்கிவிட்டு பர்சை எடுத்த போதுதான் தெறிந்தது சில்லறை வாங்க மறந்துவிட்டோம் என்று, அவசர அவசரமாக ஸ்வீட் வாங்கியதற்க்கு காசை கொடுத்துவிட்டு போருந்து நிலையத்திற்க்கு போனால், நான் வந்த அந்த வண்டி சில நிமிடங்களுக்கு முன்புதான் கடலூர் புறப்பட்டு போனதாக சொன்னார்கள், சரி மொய் எழுதியாச்சு என நினைத்துக்கொண்டு வந்த வேலையை முடித்துக்கொண்டு கடலூர் வந்துசேந்தேன்.
மறுநாள் ஞாயிற்று கிழமை கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக டிக்கெட் முன்பதிவு செய்யும் அலுவலகத்திற்க்கு சென்று டிக்கெட்டை காண்பித்து இழந்த பணத்தை எப்படி வாங்குவது, அந்த நடத்துநர் யார் என கேட்க, அங்கிருந்த ஓர் செக்கர் என்னை பணிமனைக்கு சென்று கேட்கும்படி சொன்னார், மேலும் நடத்துனர்களை வெகுவாக குறைகூறிய அவர் சீட்டில் எதுவும் எழுதவில்லை ஆதலால் பணம் கிடைப்பது கஷ்ட்டம் என கூறியதும் அங்கிறுந்து நகர்ந்தேன், பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகில் உள்ள பணிமனைக்கு சென்று காவலாளியிடம் விசாரிக்க அவர் ஓர் அறையை காட்டி அங்கு சென்று கேளுங்கள் என்றார், பின்பு அந்த அலுவளர்களிடம் முறையிட, முதலில் எதிற்மறையாக பதில் சொன்னார்கள், நான் இந்த சீட்டை வைத்து எழுத்துமூலம் புகார் அளிப்பேன் என்று சொன்னதும், என்னிடமிருந்த பயன சீட்டை வாங்கி அதில் உள்ள பஸ் நம்பரை வைத்து நடத்துனர் பெயரை கண்டறிந்து அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஒருவழியாக ஓர் 15 நிமிடம் கழித்தபின்பு என்னிடம் 87.50 ஐ கொடுத்தார்கள்.
எண்களால் எழத முடியாத அளவிற்க்கு பால லட்சம் கோடிரூபாய் ஊழல் நடைபெரும் இந்த நாட்டில், பொது ஜனங்களுக்கு அரசு எந்த திட்டத்தையும் முழுமையாகவும் சிறப்பாகவும் நடைமுறைப்படுத்துவதில்லை. இலவசம் அது இது என விளம்பர படுத்துவதோடு சரி, அரசு விளம்பரம் இல்லையேல் பிழைப்பு நடத்த முடியாது என்பதால் ஊடகங்களும் ஜால்லாராவாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை, அரசு ஊழியர்கள் அமைப்புகள், யூனியன் என பல சங்கங்கள் வைத்துக் கொண்டு பெரும்பாலானவர்கள் வாங்கும் சம்பளத்திற்க்கு வேலை செய்வதில்லை, தினமும் ஏதாவது போராட்டம் ஊர்வலம் என கழித்துவிட்டு மாத கடைசியில் அதுவும் 28ம் தேதியே சம்பளம், இப்படியே போனால் நாடு எப்படி உருபடும், சீனாகாரன் ஏன் சீண்டமாட்டான் பாக்கிஸ்தான்காரன் ஏன் பாயமாட்டான்.
அறிவாளி என்று சொல்லி ஆட்சி செய்பவர்கள் மக்களை முட்டாளாக நினைக்கிறார்கள், என்ன செய்வது எப்போதோ படிதத ஓர் அன்னிய நாட்டு பழமொழி நினைவுக்கு வந்து தொலைகிறது " உன்னை ஒருவர் ஒருமுறை ஏமாற்றினால் அவன் மானங்கெட்டவன், அவனிடமே நீ மறுபடியும் ஏமாந்தால் நீ மானங்கெட்டவன்" இப்படி மக்களை தொடர்ந்து மானங்கெட்டவர்களாக ஆக்கும் அரசியல்வாதிகளிடமிருந்தும் ஆட்சியாளர்களிடமிருந்தும் ஏழைகளுக்கு எப்போது விடுதலை?
Monday, December 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
A good and reasonable posting.
Thanks for sharing.
your efforts are quoteworthy.
This is really very good, usefull and needed post, last thursday on SunTV i saw the movie Tamizhan, the same story happend in one scene. People should ask even if it is 5paise, or should go to court to let them get punished. other wise, we will loose. i like this post.
உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...
கடலூர் பதிவரா நீங்க? சந்தோஷம்,நல்லாயிருக்குங்க அப்ரஹாம், வாழ்த்துக்கள்! எல்லோரும் தெரிந்துகொண்டு, உங்களைப்போலவே நடத்துனர் இம்சைகளை தட்டிகேட்டால் அவர்களுக்கு ஒரு பயம், பயணிகளும் பயன்பெறுவார்கள். இப்படி நிறைய விழிப்புணர்வு பதிவுகளை எழுதுங்க. பகிர்வுக்கு நன்றி!
பத்மஹரி,
http://padmahari.wordpress.com
Excellent Job! The writing is outstanding. Thanks for sharing this content.
Haryana iti result 2018 ncvt