Pages

Banner 468

Subscribe
Sunday, July 6, 2008

குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் என்பது தலித் இன அழிப்பை குறிவைத்திருக்கும் தொலைநோக்கு சதித்திட்டம்!

0 comments
 

மக்கள்தொகை அதிகம் ஆகியதால், அனைவற்றிற்கும் பற்றாக்குறை, பஞ்சம், பட்டினி, நோய், சுகாதாரமற்ற சூழ்நிலை போன்றவைகளை காரணம் காட்டி குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களை அரங்கேற்றி நடத்தி வருகிறார்கள். இதன் உண்மையான பின்புலம் என்னவாகும் இருக்கும்?

இந்த கேள்விக்கு பதில் தேட முயற்சிக்கும் முன், மேற்கூறிய பசி, பஞ்சம், பட்டினி... ஆகியவைகளை பற்றி கொஞ்சம் உற்று நோக்கி பார்க்க முயற்சிப்போம்.

பயம், பக்தி, கடவுள் போல் இந்த பஞ்சங்களும், பட்டினிகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கற்பனை சோடிப்புகளே. நாட்டின் அனைத்து வளங்களையும் ஒரு சிறுபான்மையினர் மட்டும் தங்கள் வசப்படுத்திவிட்டு, மற்றவர்களை ஏழ்மையில் வாழ வைத்துவந்தனர் என்பதே உண்மை. மக்களை சிறைபிடிக்க உருவாக்கப்பட்டதே இந்த பஞ்சங்களும், பட்டினிகளும். மாபெரும் திறந்தவெளி அடிமை மனிதக்கிடங்கே இம்மக்கள் கூட்டங்கள்.

உண்மையிலேயே பசி பஞ்சம் பட்டினி இருந்திருந்தால், பணக்காரர்கள், மிராசுதாரர்கள் எப்படி உருவாகி இருக்கமுடியும்? முறையான கூலிகளை, உணவு வகைகளை, இயற்கை வளங்களை கொடுக்காமல், ஒருசில ஆதிக்க கும்பல்கள் இந்து மத ஆசியுடம் அனைத்தையும் தம்வசம் அடக்கி மற்றவர்களை அழித்து வந்தனர். இதுதான் உண்மை.

இன்று இதே ஆதிக்க பொய்யர்கள், அடக்கப்பட்டு வந்த எளிய மக்களை சுத்தமாக பூண்டோடு அழிப்பதற்கு மிகுந்த தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கிய படுமோசமான இன அழிப்பு சதித்திட்டமே இதுபோன்ற குடும்ப கட்டுப்பட்டுத் திட்டங்கள். உலக வங்கிகள் போன்ற இன அழிப்பு சதிகார கும்பல்களுடன் கூட்டு சேர்ந்து உள்நாட்டு கையாலாகாத காட்டிக்கொடுத்த பரம்பரையில் வந்த எச்சிலைகள் நடத்தும் இன அழிப்பு திட்டமே இது. இவர்கள் சொல்லும் எதையும் நம்பக்கூடாது. எதையும் ஏற்றுக்கொள்ளவும் கூடாது. அனைத்தும் பொய்யைத்தவிர வேறொன்றும் இல்லை. பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகாண திறமையற்ற மடையர்களின் கூட்டம், அப்பிரச்சினைகளை வேரோடு அழித்து தடயமே இல்லாமல் ஆக்குவதற்கு சதிதிட்டம் தீட்டி வருகின்றனர்.

ஏழையை சுய அறிவும் ஆற்றலும் பெற்ற வசதி படைத்த மனிதர்களாக ஆக்கி ஏழ்மை இல்லாமல் ஆக்குவதற்கு பதில், ஏழைகளை சமுதாயத்திலிருந்து பூண்டோடு அழித்து சமுதாயத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள். இப்படி செய்து கிராமங்களை சேரிகளை அதன் மக்களோடு சேர்த்தே அழித்து அனைத்தையும் தம்வசமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இதுவும் உண்மை.

மண்ணின் மைந்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை கொடுக்க தெரியாத மடையர்கள், ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்த கொடுப்பாவி முதலாளிகள், மதம் சாதி என்கிற பெயரில் திகில் பயம் உண்டாக்கி அடிமையாக்கி வைத்திருந்த மதவெறி பேய்கள், வளங்கள் அனைத்தையும் தம் வசமே தக்கவைத்துக்கொண்டு அனுபவித்து வந்த சுயநல சோத்துப் பிண்டங்கள் இப்போது ஏழைகளை, குறிப்பாக தலித்துக்களை சமுதாயத்திலிருந்து அடியோடு அழிப்பதற்காக உருவாக்கிய திட்டம்தான் இதுபோன்ற குடும்ப கட்டுப்பாட்டு சதித் திட்டங்கள்.

குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டஙகளினால் பாதிக்கப்பட இருப்பது குறிப்பாக தலித் இன மக்களே. பணக்காரன் எத்தனை குழந்தைகள் பெற்றாலும் அவை அத்தனையையும் நல்லபடியாக கரை சேர்த்துவிடுவான். ஏழைகளோ, ஐந்தாறு பெற்றால், அதில் ஒன்றிரண்டே ஓரளவு நல்ல நிலைக்கு வரமுடியும். இதனால், தலித்துக்கள், மற்றும் இதர வகை பரம ஏழைகள் அனைவரும் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும். இல்லை என்றால், இன்னும் சில தலைமுறை இடைவெளிக்கு பிறகு, தலித் இன மக்கள் சமுதாயத்தில் இருந்து அடியோடு அழிக்கப்பட்டு இருப்பார்கள். மேலும் தலித்துக்கள் குழந்தைகள் பெறுவதை குறைத்துக் கொண்டால், காலப்போக்கில் இவர்களது மக்கள் தொகையும் வெகுவாக குறைந்து இதனால் ஓட்டுச் சக்திகளும் குறைந்து பிரதிநிதித்வம் இழந்து, பலமிழந்து மேலும் மேலும் சமுதாயத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டு அழிக்கப்படுவர்.

பெரும்பான்மை பிரதிநிதித்வம் உள்ள அரசியல்வாதிகள் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு, வசதிகள் எப்போதும் கிடைக்கும் அப்படி இப்படி என்று கதைவிட்டுக்கொண்டே இருபார்கள். அதை ஒருகாலும் நம்பவே கூடாது. நமது பாதுகாப்பிற்கும், வசதிகளுக்கும் நாம்தான் வழி தேடிக் கொள்ளவேண்டும். உண்மை மனதுடன் தம்மக்களை நேசிக்கும் ஒரு தலைவன் தம்மக்கள் அதிகம் பேறு பெறுவதைத்தான் பெரிதும் போற்றுவான். ஆனால், இங்கோ எல்லாம் தலை கீழாக நடக்கிறது. இதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய சதித்திட்டம் உங்களுக்கு வெளிச்சம்.

தலித்துக்கள் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டும். மேலும் மேலும் அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்டெ இருக்கவேண்டும். இன அழிப்பு சதிகார கும்பல்களின் திட்டங்களை முறியடிக்கவேண்டும். தத்தமது சமூகங்களை அழிந்துபோகவிடாமல் காக்கவேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகிறது. அனாவசியமாக கற்பத்தடை வழிகளை கையாளவும் கூடாது. வீணான கரு கலைப்புகளும் கூடாது. கரு கலைப்பு என்பது இயற்கைக்கு மாறான செயல். பொய்யர்களின் புரட்டுகளுக்கு மயங்கிவிடாதீர்கள். உங்கள் கை விரல்களை கொண்டு உங்கள் கண்களையே குத்திக்கொள்ள வைக்கும் பயங்கர இன அழிப்பு சதித் திட்டமே இது. இந்து மத அயோக்கியர்கள் அந்நிய சக்திகளுடன், பன்னாடை பரதேசிகளுடன் கூட்டு சேர்ந்து மண்ணின் மைந்தர்களின் அழிவிற்கு வகைசெய்யும் துராகச் செயல்தான் இது. இது ஒரு அமைதிமுறை இன அழிப்பு சதித்திட்டமே!

நீங்கள் விருப்பப்படும் அளவிற்கு குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்பது உங்களுடைய அடிப்படை மனித உரிமை. இதில் எந்த மடையனுக்கும், மடைச்சிக்கும் தலையிட உரிமையே கிடையாது!

தேவை இப்போதே விழிப்புணர்வு.

நன்றி: http://naalainamathae.blogspot.com

Leave a Reply