Pages

Banner 468

Subscribe
Tuesday, July 29, 2008

உள் ஒதுக்கீடு ஒரு பார்வை

0 comments
 

ஆண்டான்டுகாலமாய் அடிமைப்படித்தப்பட்ட மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்தும் நோக்கோடு சுதந்திர இந்தியாவில் இடஒதுக்கீட்டை டாக்டர் அம்பேட்கள் அவர்கள் அரும்பாடுபட்டு கொண்டுவந்தார். இதனை பொருக்கமுடியாத மேல்தட்டுக் கூட்டங்கள் பல்வேறு வகையிலும் இடையூறு செய்துவறுகிறது என்பது நாம் அறிந்ததே, கல்வில் அதிக மதிப்பென் பெற்ற தாழ்த்தப்பட்ட சமுக மணவனையும் இடஒதுக்கீட்டில் சேர்த்து அந்த இடத்தில் ஒரு சாதி இந்துவை தினிப்பதே அதிகார வர்கத்தின் வாடிக்கை, இதை கேட்க படித்த, இடஒதுக்கீட்டினால் அரசுபணியிலமர்ந்த பெரும்பான்மையான தலித்துக்கள் கண்டுகொள்வதில்லை, ஏனென்றால் தங்களுடைய வேலை போய்விடும் என்ற ஒன்றை வார்த்தையைத் தவிர வேறொறையும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இது இப்படி இருக்க ஆளும் கூட்டங்கள் இந்த இடஒதுக்கீட்டு அமைப்பையே தகர்த்துவிடும் பணியை நம் கண்முன்னறே செய்து வருகின்றார்கள், இவர்கள் தற்போது எடுத்திருக்கும் ஆயுதம் "உள் ஒதுக்கீடு" என்பதாகும். இந்த உள் ஒதுக்கீடுட்டை ப‌ற்றி க‌வ‌ன‌மாக‌ நாம் பார்ப்ப‌து மிக‌ அவ‌சியம்.


இந்த‌ உள் ஒதுக்கீட்டை முத‌லில் ச‌ட்ட‌மாக‌ கொண்டுவ‌ந்த‌தே ஆந்திர‌பிர‌தேச அர‌சுதான், இம் மாநில‌த்தில் உள்ள‌ த‌லித் ம‌க்க‌ளை எ,பி,சி ம‌ற்றும் டி என நான்கு குழுவாக‌ பிரித்து, க‌ல்வி ம‌ற்றும் அர‌சு வேலைக‌ளில் இந்த உள் இட‌ஒதுக்கீட்டை ந‌டைமுறைப்படுத்த‌ ஓர் குழு அமைத்து, அத‌ன் ப‌ரிந்துரையின் அடிப்ப‌டையில் உள் ஒதுக்கீட்டை ந‌டைமுறைப் ப‌டுத்த‌ ச‌ட்ட‌ம் இய‌ற்றிய‌து. இத‌னை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொட‌ர‌ப்ப‌ட்ட‌ வ‌ழ‌க்கை விசாரித்த நீதிப‌தி.திரு.என்.ச‌ந்தோஷ் ஹேக்டே த‌ல‌மையிலான‌ ஐந்து நீதிப‌திக‌ள் அட‌ங்கிய குழு ந‌வ‌ம்ப‌ர் 5,2004ம் ஆண்டு த‌ன‌து தீர்ப்பை வ‌ழ‌ங்கிய‌து. அதில் "வ‌கைப்பாட்டு ப‌ட்டிய‌லில் உள்ள‌ ம‌க்க‌ளை ஒரே குழுவாக‌த்தான் பார்க்க‌ வேண்டுமே த‌விர‌, இக் குழுவை இர‌ண்டு அல்ல‌து இர‌ண்டிற்க்கும் மேற்ப‌ட்ட‌ குழுக்க‌ளாக‌ பிரிக்க‌ கூடாது" என‌ தெள்ள‌த் தெளிவாக‌ கூறியிருக்கிறார்க‌ள். மேலும் இச் சட்டத்தை கொண்டுவந்த ஆந்திர‌பிர‌தேச அரசை எச்சரித்ததுடன் "இதுபோண்ற செயல் சட்டத்திற்க்கு முன் அனைவரும் சமம் என்ற இந்திய குடியுரிமைச் ச‌ட்ட‌ம் ஆர்டிகிள் _14 லை (Equality before law -Article 14) மீறும் செயல்" என ஆந்திர‌பிர‌தேச‌ அர‌சை மிக‌க் க‌டுமையாக‌ சாடியுள்ள‌த்து குறிப்பிட‌த்த‌க்க‌து.


ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாதா தமிழக அரசு,ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதையாக, உள் ஒதுக்கீடு என்ற போர்வையில் தலித் மக்களுக்குள் வன்முறையை தூண்டும் வகையில் இந்த உள் ஒதுக்கீடு ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளது, தலித் மக்களுக்கான சுமார் ஒன்றறை லட்சம் பணியிடங்கள் நிறப்பப் படாமலிறுக்கும் இந்த நிலையில் இதுபோண்ற ஒர் நாடகத்தை கூசாமல் அரங்கேற்ற இந்த அரசுக்கு வெக்கமில்லையா? இவற்றையேல்லாம் பார்த்துக்கொடு ஓட்டுக் கட்சிகள் வேண்டுமானால் சும்மா இருக்கலாம் ஆனால் சமூக அக்கறை கொண்ட எவறும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது திண்ணம். உள் ஒதுக்கீட்டை முற்றிலும் நிராகறிப்பது நமது நோக்கமல்ல, அருந்ததியர் சமூகம் உட்பட அனைத்து சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைத்தான் நாம் விரும்புகிறோம், ஆனால் இது உள் ஒதுக்கீட்டால் மட்டும் சாத்தியமாகாது என்பதை நாம் உணர வேண்டும். நிரப்பவேண்டிய பணியிடங்களை நிரப்புவதன்மூலமே இம்மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் என்பது நிதர்சன உண்மை.

Readmore...
Monday, July 14, 2008

நாடகம்

0 comments
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்மோகன் அரசு அமெரிக்க உடனான அனு ஒப்பந்தில் கையொப்பமிட துடித்துக்கொண்டிருக்கிறது என்பது உலகமறிந்தது,உண்மையிலேயே இடதுசாரிகள் இந்த் நாட்டின் மீது அக்கறை கொண்டிருந்தால் நாகரிகமாக குறைந்தது ஓர் ஆண்டுக்கு முன்னறே ஆதரவை விலக்கிக் கொண்டிருக்க வேண்டும் ஆனால் மன்மோகன் சிங் துர‌த்தியத‌னால் தான் போவோம் என்று அடம்பிடிக்க சந்தடிசாக்கில் முலாயம் காங்ரஸோடு கைகோர்த்து புதுக்குடித்தனம் நடத்த வழிவகுத்துவிட்டபின்னர் தான் ஆதரவை திருப்ப பெற்றிருக்கிறார்கள் என்பது நகரிக அரசில் இல்லை என்பது இடதுசாரிகளுக்கு தெறியாத என்ன? இருப்பினும் என்ன செய்வது தாங்கள் ஆளும் மூன்று மாநில மக்களை திருப்திப்படுத்த வேண்டியது அவசியமல்லவா? இந்த அனு ஒப்பந்தத்திற்க்கு கடந்த இரண்டு ஆண்டுகளாய் எதிர்ப்பு என்ற பெயரில் தாங்கள் அளித்துவந்தது ஆதரவே என தற்போதுதான் பொதுமக்களுக்கு தெறியும் என இடதுசாரிகள் நினைக்க கூடும், இதற்க்கும் எதிற்வரும் தேர்தல் பதில் சொல்லும். முழுக்க பார்ப‌ன‌ர்க‌ளால் ந‌ட‌த்த‌ப்படும் இட‌துசாரி க‌ட்சிக‌ளின் உண்மை முக‌த்தை ம‌க்க‌ள் ம‌ற‌க்க‌ மாட்டார்க‌ள். சீனா உடனான நமது உறவை இந்த ஒப்பநதம் மந்தப்படுத்தும் எனபது உண்மையே இருப்பினும் மன்மோகன் சிங் அவர்களின் சீரிய முயற்சியால் இன்னும் சில நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதி, கடந்த 2006 மார்ச் 2ம் தேதி இந்தியா அமெரிக்க‌ உட‌னான‌ இந்த‌ ஒப்பந்த‌தில் கையெழுதிடுவ‌தாக‌ ஒப்புக்கொண்ட‌து என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.
Readmore...
Sunday, July 6, 2008

குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் என்பது தலித் இன அழிப்பை குறிவைத்திருக்கும் தொலைநோக்கு சதித்திட்டம்!

0 comments
 

மக்கள்தொகை அதிகம் ஆகியதால், அனைவற்றிற்கும் பற்றாக்குறை, பஞ்சம், பட்டினி, நோய், சுகாதாரமற்ற சூழ்நிலை போன்றவைகளை காரணம் காட்டி குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களை அரங்கேற்றி நடத்தி வருகிறார்கள். இதன் உண்மையான பின்புலம் என்னவாகும் இருக்கும்?

இந்த கேள்விக்கு பதில் தேட முயற்சிக்கும் முன், மேற்கூறிய பசி, பஞ்சம், பட்டினி... ஆகியவைகளை பற்றி கொஞ்சம் உற்று நோக்கி பார்க்க முயற்சிப்போம்.

பயம், பக்தி, கடவுள் போல் இந்த பஞ்சங்களும், பட்டினிகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கற்பனை சோடிப்புகளே. நாட்டின் அனைத்து வளங்களையும் ஒரு சிறுபான்மையினர் மட்டும் தங்கள் வசப்படுத்திவிட்டு, மற்றவர்களை ஏழ்மையில் வாழ வைத்துவந்தனர் என்பதே உண்மை. மக்களை சிறைபிடிக்க உருவாக்கப்பட்டதே இந்த பஞ்சங்களும், பட்டினிகளும். மாபெரும் திறந்தவெளி அடிமை மனிதக்கிடங்கே இம்மக்கள் கூட்டங்கள்.

உண்மையிலேயே பசி பஞ்சம் பட்டினி இருந்திருந்தால், பணக்காரர்கள், மிராசுதாரர்கள் எப்படி உருவாகி இருக்கமுடியும்? முறையான கூலிகளை, உணவு வகைகளை, இயற்கை வளங்களை கொடுக்காமல், ஒருசில ஆதிக்க கும்பல்கள் இந்து மத ஆசியுடம் அனைத்தையும் தம்வசம் அடக்கி மற்றவர்களை அழித்து வந்தனர். இதுதான் உண்மை.

இன்று இதே ஆதிக்க பொய்யர்கள், அடக்கப்பட்டு வந்த எளிய மக்களை சுத்தமாக பூண்டோடு அழிப்பதற்கு மிகுந்த தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கிய படுமோசமான இன அழிப்பு சதித்திட்டமே இதுபோன்ற குடும்ப கட்டுப்பட்டுத் திட்டங்கள். உலக வங்கிகள் போன்ற இன அழிப்பு சதிகார கும்பல்களுடன் கூட்டு சேர்ந்து உள்நாட்டு கையாலாகாத காட்டிக்கொடுத்த பரம்பரையில் வந்த எச்சிலைகள் நடத்தும் இன அழிப்பு திட்டமே இது. இவர்கள் சொல்லும் எதையும் நம்பக்கூடாது. எதையும் ஏற்றுக்கொள்ளவும் கூடாது. அனைத்தும் பொய்யைத்தவிர வேறொன்றும் இல்லை. பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகாண திறமையற்ற மடையர்களின் கூட்டம், அப்பிரச்சினைகளை வேரோடு அழித்து தடயமே இல்லாமல் ஆக்குவதற்கு சதிதிட்டம் தீட்டி வருகின்றனர்.

ஏழையை சுய அறிவும் ஆற்றலும் பெற்ற வசதி படைத்த மனிதர்களாக ஆக்கி ஏழ்மை இல்லாமல் ஆக்குவதற்கு பதில், ஏழைகளை சமுதாயத்திலிருந்து பூண்டோடு அழித்து சமுதாயத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள். இப்படி செய்து கிராமங்களை சேரிகளை அதன் மக்களோடு சேர்த்தே அழித்து அனைத்தையும் தம்வசமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இதுவும் உண்மை.

மண்ணின் மைந்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை கொடுக்க தெரியாத மடையர்கள், ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்த கொடுப்பாவி முதலாளிகள், மதம் சாதி என்கிற பெயரில் திகில் பயம் உண்டாக்கி அடிமையாக்கி வைத்திருந்த மதவெறி பேய்கள், வளங்கள் அனைத்தையும் தம் வசமே தக்கவைத்துக்கொண்டு அனுபவித்து வந்த சுயநல சோத்துப் பிண்டங்கள் இப்போது ஏழைகளை, குறிப்பாக தலித்துக்களை சமுதாயத்திலிருந்து அடியோடு அழிப்பதற்காக உருவாக்கிய திட்டம்தான் இதுபோன்ற குடும்ப கட்டுப்பாட்டு சதித் திட்டங்கள்.

குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டஙகளினால் பாதிக்கப்பட இருப்பது குறிப்பாக தலித் இன மக்களே. பணக்காரன் எத்தனை குழந்தைகள் பெற்றாலும் அவை அத்தனையையும் நல்லபடியாக கரை சேர்த்துவிடுவான். ஏழைகளோ, ஐந்தாறு பெற்றால், அதில் ஒன்றிரண்டே ஓரளவு நல்ல நிலைக்கு வரமுடியும். இதனால், தலித்துக்கள், மற்றும் இதர வகை பரம ஏழைகள் அனைவரும் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும். இல்லை என்றால், இன்னும் சில தலைமுறை இடைவெளிக்கு பிறகு, தலித் இன மக்கள் சமுதாயத்தில் இருந்து அடியோடு அழிக்கப்பட்டு இருப்பார்கள். மேலும் தலித்துக்கள் குழந்தைகள் பெறுவதை குறைத்துக் கொண்டால், காலப்போக்கில் இவர்களது மக்கள் தொகையும் வெகுவாக குறைந்து இதனால் ஓட்டுச் சக்திகளும் குறைந்து பிரதிநிதித்வம் இழந்து, பலமிழந்து மேலும் மேலும் சமுதாயத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டு அழிக்கப்படுவர்.

பெரும்பான்மை பிரதிநிதித்வம் உள்ள அரசியல்வாதிகள் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு, வசதிகள் எப்போதும் கிடைக்கும் அப்படி இப்படி என்று கதைவிட்டுக்கொண்டே இருபார்கள். அதை ஒருகாலும் நம்பவே கூடாது. நமது பாதுகாப்பிற்கும், வசதிகளுக்கும் நாம்தான் வழி தேடிக் கொள்ளவேண்டும். உண்மை மனதுடன் தம்மக்களை நேசிக்கும் ஒரு தலைவன் தம்மக்கள் அதிகம் பேறு பெறுவதைத்தான் பெரிதும் போற்றுவான். ஆனால், இங்கோ எல்லாம் தலை கீழாக நடக்கிறது. இதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய சதித்திட்டம் உங்களுக்கு வெளிச்சம்.

தலித்துக்கள் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டும். மேலும் மேலும் அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்டெ இருக்கவேண்டும். இன அழிப்பு சதிகார கும்பல்களின் திட்டங்களை முறியடிக்கவேண்டும். தத்தமது சமூகங்களை அழிந்துபோகவிடாமல் காக்கவேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகிறது. அனாவசியமாக கற்பத்தடை வழிகளை கையாளவும் கூடாது. வீணான கரு கலைப்புகளும் கூடாது. கரு கலைப்பு என்பது இயற்கைக்கு மாறான செயல். பொய்யர்களின் புரட்டுகளுக்கு மயங்கிவிடாதீர்கள். உங்கள் கை விரல்களை கொண்டு உங்கள் கண்களையே குத்திக்கொள்ள வைக்கும் பயங்கர இன அழிப்பு சதித் திட்டமே இது. இந்து மத அயோக்கியர்கள் அந்நிய சக்திகளுடன், பன்னாடை பரதேசிகளுடன் கூட்டு சேர்ந்து மண்ணின் மைந்தர்களின் அழிவிற்கு வகைசெய்யும் துராகச் செயல்தான் இது. இது ஒரு அமைதிமுறை இன அழிப்பு சதித்திட்டமே!

நீங்கள் விருப்பப்படும் அளவிற்கு குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்பது உங்களுடைய அடிப்படை மனித உரிமை. இதில் எந்த மடையனுக்கும், மடைச்சிக்கும் தலையிட உரிமையே கிடையாது!

தேவை இப்போதே விழிப்புணர்வு.

நன்றி: http://naalainamathae.blogspot.com
Readmore...