Pages

Banner 468

Subscribe
Tuesday, July 29, 2008

உள் ஒதுக்கீடு ஒரு பார்வை

0 comments
 

ஆண்டான்டுகாலமாய் அடிமைப்படித்தப்பட்ட மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்தும் நோக்கோடு சுதந்திர இந்தியாவில் இடஒதுக்கீட்டை டாக்டர் அம்பேட்கள் அவர்கள் அரும்பாடுபட்டு கொண்டுவந்தார். இதனை பொருக்கமுடியாத மேல்தட்டுக் கூட்டங்கள் பல்வேறு வகையிலும் இடையூறு செய்துவறுகிறது என்பது நாம் அறிந்ததே, கல்வில் அதிக மதிப்பென் பெற்ற தாழ்த்தப்பட்ட சமுக மணவனையும் இடஒதுக்கீட்டில் சேர்த்து அந்த இடத்தில் ஒரு சாதி இந்துவை தினிப்பதே அதிகார வர்கத்தின் வாடிக்கை, இதை கேட்க படித்த, இடஒதுக்கீட்டினால் அரசுபணியிலமர்ந்த பெரும்பான்மையான தலித்துக்கள் கண்டுகொள்வதில்லை, ஏனென்றால் தங்களுடைய வேலை போய்விடும் என்ற ஒன்றை வார்த்தையைத் தவிர வேறொறையும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இது இப்படி இருக்க ஆளும் கூட்டங்கள் இந்த இடஒதுக்கீட்டு அமைப்பையே தகர்த்துவிடும் பணியை நம் கண்முன்னறே செய்து வருகின்றார்கள், இவர்கள் தற்போது எடுத்திருக்கும் ஆயுதம் "உள் ஒதுக்கீடு" என்பதாகும். இந்த உள் ஒதுக்கீடுட்டை ப‌ற்றி க‌வ‌ன‌மாக‌ நாம் பார்ப்ப‌து மிக‌ அவ‌சியம்.


இந்த‌ உள் ஒதுக்கீட்டை முத‌லில் ச‌ட்ட‌மாக‌ கொண்டுவ‌ந்த‌தே ஆந்திர‌பிர‌தேச அர‌சுதான், இம் மாநில‌த்தில் உள்ள‌ த‌லித் ம‌க்க‌ளை எ,பி,சி ம‌ற்றும் டி என நான்கு குழுவாக‌ பிரித்து, க‌ல்வி ம‌ற்றும் அர‌சு வேலைக‌ளில் இந்த உள் இட‌ஒதுக்கீட்டை ந‌டைமுறைப்படுத்த‌ ஓர் குழு அமைத்து, அத‌ன் ப‌ரிந்துரையின் அடிப்ப‌டையில் உள் ஒதுக்கீட்டை ந‌டைமுறைப் ப‌டுத்த‌ ச‌ட்ட‌ம் இய‌ற்றிய‌து. இத‌னை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொட‌ர‌ப்ப‌ட்ட‌ வ‌ழ‌க்கை விசாரித்த நீதிப‌தி.திரு.என்.ச‌ந்தோஷ் ஹேக்டே த‌ல‌மையிலான‌ ஐந்து நீதிப‌திக‌ள் அட‌ங்கிய குழு ந‌வ‌ம்ப‌ர் 5,2004ம் ஆண்டு த‌ன‌து தீர்ப்பை வ‌ழ‌ங்கிய‌து. அதில் "வ‌கைப்பாட்டு ப‌ட்டிய‌லில் உள்ள‌ ம‌க்க‌ளை ஒரே குழுவாக‌த்தான் பார்க்க‌ வேண்டுமே த‌விர‌, இக் குழுவை இர‌ண்டு அல்ல‌து இர‌ண்டிற்க்கும் மேற்ப‌ட்ட‌ குழுக்க‌ளாக‌ பிரிக்க‌ கூடாது" என‌ தெள்ள‌த் தெளிவாக‌ கூறியிருக்கிறார்க‌ள். மேலும் இச் சட்டத்தை கொண்டுவந்த ஆந்திர‌பிர‌தேச அரசை எச்சரித்ததுடன் "இதுபோண்ற செயல் சட்டத்திற்க்கு முன் அனைவரும் சமம் என்ற இந்திய குடியுரிமைச் ச‌ட்ட‌ம் ஆர்டிகிள் _14 லை (Equality before law -Article 14) மீறும் செயல்" என ஆந்திர‌பிர‌தேச‌ அர‌சை மிக‌க் க‌டுமையாக‌ சாடியுள்ள‌த்து குறிப்பிட‌த்த‌க்க‌து.


ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாதா தமிழக அரசு,ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதையாக, உள் ஒதுக்கீடு என்ற போர்வையில் தலித் மக்களுக்குள் வன்முறையை தூண்டும் வகையில் இந்த உள் ஒதுக்கீடு ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளது, தலித் மக்களுக்கான சுமார் ஒன்றறை லட்சம் பணியிடங்கள் நிறப்பப் படாமலிறுக்கும் இந்த நிலையில் இதுபோண்ற ஒர் நாடகத்தை கூசாமல் அரங்கேற்ற இந்த அரசுக்கு வெக்கமில்லையா? இவற்றையேல்லாம் பார்த்துக்கொடு ஓட்டுக் கட்சிகள் வேண்டுமானால் சும்மா இருக்கலாம் ஆனால் சமூக அக்கறை கொண்ட எவறும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது திண்ணம். உள் ஒதுக்கீட்டை முற்றிலும் நிராகறிப்பது நமது நோக்கமல்ல, அருந்ததியர் சமூகம் உட்பட அனைத்து சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைத்தான் நாம் விரும்புகிறோம், ஆனால் இது உள் ஒதுக்கீட்டால் மட்டும் சாத்தியமாகாது என்பதை நாம் உணர வேண்டும். நிரப்பவேண்டிய பணியிடங்களை நிரப்புவதன்மூலமே இம்மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் என்பது நிதர்சன உண்மை.

Leave a Reply