இருபத்தி ஒன்பதாவது ஒலிம்பிக் விளையாட்டை சீனா கோலாகலமாக துவக்கியது கண்டு உலகம் வாயடைத்து போயுள்ளது, ஒரு காலத்தில் குட்டி நாடான ஜப்பானால் கூட தாக்கப்பட்ட சீனா, இன்று சாதனை படைக்கிறது. சுமார் 58.5 பில்லியன் டாலர் செலவில் நடத்தப்படும் இன்நிகழ்ச்சி உலகம் மறக்கமுடியாத அளவிற்க்கு சீனா செயல்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு 11 சதவிகித வளர்ச்சியை கொண்ட சீனாவின் வளர்ச்சி அமெரிக்கவை மட்டுமல்ல உலகையே உலுக்கபோவது உண்மை.
204 நாடுகள் பங்குபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 110 கோடி மக்கள் உள்ள இந்தியாவிலிருந்து கலந்துகொள்பவர்கள் வெறும் 56 பேர் மட்டுமே, இது இந்த தேசத்திற்க்கு மட்டுமல்ல, ஆசிய கண்டத்திற்க்கே அவமானம். இது போண்ற அவமானங்கள் நம் நாட்டிற்க்கு புதிதல்ல! இருப்பினும் இதைப்பற்றியல்லாம் ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை, இவர்களுக்கு தேவையேல்லாம் பார்பனன் விளையாடும் கிரிக்கெட் விளையாட்டு மட்டுமே.
கையாலாகாத அரசியல் சட்டமும், ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரமும் நடைபெறும் இந்த நாடு ஆசியாவின் அவலம் என்பது உலகமறிந்த உண்மை.