Pages

Banner 468

Subscribe
Monday, December 27, 2010

சில்லறை கேட்டால் ஏழரை: அரசு பேருந்தில் நடக்கும் அட்டூழியம்

6 comments
 
பெரும்பாலும் நம் பயனம் பெருந்தையே மையப்படுத்தி இருக்கிறது, ஓர் பத்து கிலோமீட்டருக்குள் செல்ல வேண்டுமானால் ஓரளவிற்க்கு வசதிபடைத்தவர்கள் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவார்கள் ஆணால் சாதாரன மக்களுக்கு அரசாங்க அல்லது தனியார் பேருந்து, மினிபஸ், ஷேர் ஆட்டோ இதைத்தவிர பெரும்பாலும் வேரு எதிலும் பயனிக்க வாய்ப்பு குறைவு, ரஜினி பாடியது போல பஸ்ஸை எதிபார்த்து பாதி வயசாச்சு என்பது உண்மைதான்.


இதுபோண்ற வாகனங்களில் பயனிப்பதென்பது மிக சாமார்த்தியமான செயல்தான், 6 பேர் பயனிக்க கூடிய ஓர் ஷேர் ஆன்டோவில் குறைந்தது பத்து பன்னிரண்டு பேரை ஒருவர்மேல் ஒருவராக அடுக்கி நகர்த்திக்கொண்டு செல்வார்கள், 15 நிமிடத்தில் நடந்து செல்லக்கூடிய தூரத்தை 30 நிமிடத்தில் கடந்து செல்லும் நமூர் ஷேர் ஆட்டோ, இதைவிட்டாலும் நமக்கு வேரு வழி இல்லை, சரி எல்லாவற்றையும் பொருத்துக்கொண்டு பயனித்தால் நம் இறங்கவேண்டிய இடத்தை அடைவதற்க்குள் பல்வேறு பிறச்சனைகளை சத்திக்க வேண்டிவரும், சில்லறை பாக்கி, சில நேரங்களில் பெண்கள் அருகிலோ அல்லது எதிரிலோ அமருவதால் ஏற்படும் பிறச்சனை இப்படி இடம் போய்சேர்வதற்க்குள் போதும் போதும் என்று ஆகிவிடும், இறக்கும் போது சட்டையெல்லாம் கசங்கி ஏதோ சண்டையில் அடிபட்டு வந்தவன் போல் காட்சியளிப்போம். இதில் முக்கியமான பிறச்சனை சில்லறை பாக்கி, இருகிற கூட்டத்தில் பர்சில் இருக்கும் பணத்தையோ சில்லறையோ எடுக்க கூட முடியாது, சரி இறங்கும் போது கொடுக்கலாம் என்றால் சில நேரங்களில் சில்லைறை இல்லாமல் பல நிமிடங்கள் அலைய வேண்டி வரும்.

அதுவும் இதுபோண்ற தனியார் பஸ்ஸோ ஆட்டோவோ இருந்தால் ஒரளவிற்க்கு சமளித்துவிடலாம், இதுவே அரசாங்க பஸ்ஸாக இருந்தால் மொய் எழுதிவிட்டுதான் போகவேண்டும், அரசாங்க பஸ்ஸின் நடத்துனர் பயனிகளை நாயைவிட கேவலமாக தான் நடத்துவார்கள், அவர்களுடைய சொந்தகாரர்களோ அல்லது கூட வேலைசெய்பவறோ இருந்தால் பேருந்து எங்குவேண்டுமானாலும் நிற்க்கும், யாரும் கேட்க முடியாது ஆனால் நம்மைப்போல சதாரன மக்கள் அவசரத்துக்கு ஓர் இடத்தில் நிருந்த சொண்ணால் நடத்துனர் ஓட்டுனரை கேட்க சொல்வார், ஓட்டுனர் நடத்துனரை கேட்க சொல்வார்,  இருவரிடமும் ஒப்பதல் பெருவதற்க்குள் நாம் இறங்கவேண்டியம் இடத்தை பேருந்து கடந்து சென்றிருக்கும்.


பெரும்பாலும் எல்லோரும் பேருந்தில் ஏறிய பிறகுதான் நடத்துநன் டிக்கட் கொடுக்க ஆரம்பிப்பிப்பார், இரண்டொரு டிக்கெட் கிழிப்பதற்க்குள் சில்லைரை பிறச்சனைய் அரபித்து கத்தி கொள்ளைவிடுவார், எப்போழுது கேட்டாலும் சில்லைரை இருப்பதில்லை என்றே பதில் வரும், முன்பெல்லாம் 50 பைசாவை நாம் கேட்கவே முடியாது ஆனால் இப்பொழுது ஒரு ரூபாயைகூட கேட்டால், ஓரே வார்த்தை "போகும்போது வாங்கிகலாம் கத்தாதிங்க" என்ற பதில்தான் வரும், இந்த ஒரு ரூபாய்க்காக பல முறை நாம் கேட்க வெட்கப்பட்டுகொண்டு பலர் இறங்கி போய்விவார்கள், ஆக நடத்துனர் இப்படி நாளைக்கு சில நூறு கல்லா கட்டுவார் போலிறுக்கு.

இரண்டு நாளுக்கு முன்பு நெய்வேலி செல்வதற்க்காக கடலூரில் ஒர் அரசு பேருந்தில் ஏறினேன், பேருந்து முதுநகரை அடைந்த நிலையில் நடத்துனர் நான் அமர்ந்திருக்கும் இருக்கை பக்கம் வந்தார், நான் 100 ரூபாயை நீட்ட "என்ன இல்லாம் நூறு அய்நூறுன்னு கொடுத்தா எப்படி, என்கிட்ட சுத்தம்மா சில்லறையில்லை ரெண்டு ரெண்டு பேரா ஜாயின் பன்னிதான் விடுவேன்" என்றார், சரி என்று தலையசைத்தவுடன் சீட்டை கிழித்து கொடுத்தார், சில்லறையை கொடுக்க வேண்டும் என சீட்டின் பின்புறம் எழுதி கொடுங்கள் என்று கேட்டதற்க்கு "அதெல்லாம் தருவோம் சும்மா ஒக்காருங்க" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார், சரி பர்சில் எங்காவது அஞ்சோ பத்தோ மறைந்திருக்கிறதா என தோன்டி துலாவி பார்த்தும் ஒன்றும் அகப்படததால், அன்றையை நாளிதழில் மூழ்கிவிட்டேன்,

நெய்வேலி மந்தாரகுப்பம் பஸ் நிலையம் வந்ததும் ஏதோ ஓர் மறதியில் சில்லறை வாங்க வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் இறங்கி சற்று தொலைவில் உள்ள ஓர் ஸ்வீட் கடையில் திண்பன்டங்களை வாங்கிவிட்டு பர்சை எடுத்த போதுதான் தெறிந்தது சில்லறை வாங்க மறந்துவிட்டோம் என்று, அவசர அவசரமாக ஸ்வீட் வாங்கியதற்க்கு காசை கொடுத்துவிட்டு போருந்து நிலையத்திற்க்கு போனால், நான் வந்த அந்த வண்டி சில நிமிடங்களுக்கு முன்புதான் கடலூர் புறப்பட்டு போனதாக சொன்னார்கள், சரி மொய் எழுதியாச்சு என நினைத்துக்கொண்டு வந்த வேலையை முடித்துக்கொண்டு கடலூர் வந்துசேந்தேன்.

மறுநாள் ஞாயிற்று கிழமை கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக டிக்கெட் முன்பதிவு செய்யும் அலுவலகத்திற்க்கு சென்று டிக்கெட்டை காண்பித்து இழந்த பணத்தை எப்படி வாங்குவது, அந்த நடத்துநர் யார் என கேட்க, அங்கிருந்த ஓர் செக்கர் என்னை பணிமனைக்கு சென்று கேட்கும்படி சொன்னார், மேலும் நடத்துனர்களை வெகுவாக குறைகூறிய அவர் சீட்டில் எதுவும் எழுதவில்லை ஆதலால் பணம் கிடைப்பது கஷ்ட்டம் என கூறியதும் அங்கிறுந்து நகர்ந்தேன், பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகில் உள்ள பணிமனைக்கு சென்று  காவலாளியிடம் விசாரிக்க அவர் ஓர் அறையை காட்டி அங்கு சென்று கேளுங்கள் என்றார், பின்பு அந்த அலுவளர்களிடம் முறையிட, முதலில் எதிற்மறையாக பதில் சொன்னார்கள், நான் இந்த சீட்டை வைத்து எழுத்துமூலம் புகார் அளிப்பேன் என்று சொன்னதும், என்னிடமிருந்த பயன சீட்டை வாங்கி அதில் உள்ள பஸ் நம்பரை வைத்து நடத்துனர் பெயரை கண்டறிந்து அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஒருவழியாக ஓர் 15 நிமிடம் கழித்தபின்பு என்னிடம் 87.50 ஐ கொடுத்தார்கள்.

எண்களால் எழத முடியாத அளவிற்க்கு பால லட்சம் கோடிரூபாய் ஊழல் நடைபெரும் இந்த நாட்டில், பொது ஜனங்களுக்கு அரசு எந்த திட்டத்தையும் முழுமையாகவும் சிறப்பாகவும் நடைமுறைப்படுத்துவதில்லை. இலவசம் அது இது என விளம்பர படுத்துவதோடு சரி, அரசு விளம்பரம் இல்லையேல் பிழைப்பு நடத்த முடியாது என்பதால் ஊடகங்களும் ஜால்லாராவாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை, அரசு ஊழியர்கள் அமைப்புகள், யூனியன் என பல சங்கங்கள் வைத்துக் கொண்டு பெரும்பாலானவர்கள் வாங்கும் சம்பளத்திற்க்கு வேலை செய்வதில்லை, தினமும் ஏதாவது போராட்டம் ஊர்வலம் என கழித்துவிட்டு மாத கடைசியில் அதுவும் 28ம் தேதியே சம்பள‌ம், இப்படியே போனால் நாடு எப்படி உருபடும், சீனாகாரன் ஏன் சீண்டமாட்டான் பாக்கிஸ்தான்காரன் ஏன் பாயமாட்டான்.


அறிவாளி என்று சொல்லி ஆட்சி செய்பவர்கள் மக்களை முட்டாளாக நினைக்கிறார்கள், என்ன செய்வது எப்போதோ படிதத ஓர் அன்னிய நாட்டு பழமொழி நினைவுக்கு வந்து தொலைகிறது " உன்னை ஒருவர் ஒருமுறை ஏமாற்றினால் அவன் மானங்கெட்டவன், அவனிடமே நீ மறுபடியும் ஏமாந்தால் நீ மானங்கெட்டவன்" இப்படி மக்களை தொடர்ந்து மானங்கெட்டவர்களாக ஆக்கும் அரசியல்வாதிகளிடமிருந்தும் ஆட்சியாளர்களிடமிருந்தும் ஏழைகளுக்கு எப்போது விடுதலை?
Readmore...
Saturday, November 13, 2010

நோபல் பரிசு பெற்ற பெண் அரசியல் தலைவரான ஆங் சான் சூகி விடுதலை!!

3 comments
 
நோபல் பரிசு பெற்ற பெண் அரசியல் தலைவரான மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி இன்று விடுதலை செய்யப்ப்பட்டார். மியான்மர் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயகத்துக்காகப் போராடிய ஜனநாயக தேசிய லீக் கட்சி (என்.எல்.டி.) தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலிலும், சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.


மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்களுக்கு, பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வந்தன. மேலும், அங்கு தேர்தல் நடத்தி ஜனநாயக ஆட்சி அமைக்க வேண்டும் என உலக நாடுகள் அந்நாட்டு இராணுவ அரசை வற்புறுத்தி வந்தன.


இந்நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யங்கூனில் உள்ள அவரது கட்சி அலுவலகத்துக்கு தொண்டர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
Readmore...
Tuesday, November 2, 2010

யார் பக்கிகள்?

1 comments
 
பக்கிகளைப் பற்றி சில நண்பர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள், பக்கி என்ற வார்த்தை ஓர் வசவுச் சொல்லாக நிலைத்துவிட்டது வருந்தத்தக்கது. பக்கி குஜராத் மாநிலத்தில் உள்ள ஓர் விளிம்புநிலை சமுகத்தின் பெயர், இந்த சமூகம் ஓர் உன்னதமான சிறப்பு பெற்ற ஓர் சமூகம், அதாவது அந்த காலத்தில் கால்நடைச் செல்வங்களை திருடுபவர்களின் பாதசுவட்டினை வைத்து திருடிய நாபர்களை கண்டறியும் ஒர் மதிநுட்பம் மிகுந்த கலையை பல காலமாக‌ செய்து வந்தவர்கள்தான் இந்த‌ பக்கிகள். திருடர்களின் பாத சுவடுகள் எதுவரைச் செல்கிறதே அதுவரைச் சென்று, அதே பாதஅடையாளம் உள்ளவர்களை கண்டறிந்து இழந்த பொருளை மீட்கும் பொருப்பு பக்கிகளுடையது, சில நேரங்களில் பலநாட்கள் கூட அவர்கள் காடு மெடுகள் என காலம் பார்க்காமல் நடக்க வேண்டியிருக்கும்.




தார்சாலைகள் மற்றும் செருப்பின் பயன்பாடு அற்ற அந்த நாளில் பாதசுவடுகளை கொண்டு திருடர்களை கண்டரியும் ஓர் நுண் அறிவு பெற்றவர்கள் பக்கிகள் தாங்கள் கண்ட ஓர் பாதசுவட்டை பல ஆண்டுகள் கூட நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என நான் எங்கோ எதிலோ படித்திருக்கிறேன், ஆனால் காலஓட்டத்தின் பக்கிகளின் பாரம்பறிய அறிவு சமூகத்திற்க்கு தேவைப்படாமல் போய்விட்டது. இதனால் அலைந்து திறிபவர்களை இங்கு பக்கிகள் என அழைப்பது சில இடங்களில் நடைமுறையில் உள்ளது. பக்கிகளைப் பற்றி மேலும் தெறிந்தால் நண்பர்கள் பகிர்ந்துகொள்ளவும்.
Readmore...
Wednesday, October 20, 2010

கலர் டி.வி மற்றும் பன்றி காய்ச்ல் இங்கு இலவசம்:

2 comments
 
"பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போடப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு, தடுப்பூசி இலவசம்' என, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி அறிவித்தார், ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


தமிஃப்ளு மற்றும் ரெலேன்சா ஆகிய இரண்டு எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப் படுகின்றன, இவை அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனையிலும் கிடைக்கும் என்று அறிவித்தார்கள்.

சரி, ஓர் தடுப்பூசி போட்டுக் கொள்ளளாமே என்று கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு சென்றேன், அங்கு தனி பிரிவு அமைத்து  ஓர் கந்து வட்டி காரன்போல் வசூல் நடத்துகிறார்கள். பெயர் மற்றும் முகவரியை குறித்துக்கொண்ட அவர்கள் ரூ.235 பனம் கேட்டார்கள், பின்பு ஓர் ஊசியைப் போட்டு ஜந்துநிடமாக சில்லரைக்கு அலையவிட்டார்கள்.

ரூ.235க்கு நான் ரசீது கேட்க, அதெல்லாம் கிடையாது அப்படி கொடுக்க அரசு எங்களுக்கு உத்தரவிடவில்லை என்றார்கள், ஓர் குண்டூசி வாங்கினால் கூட அதற்க்கு பில் தரவேண்டிய  நிலையில், என்னிடம் 235ஜ வாங்கிக்கொண்டு பில் இல்லை என்று சர்வ சார்வசாதாரனமாக சொல்கிறார்கள் இந்த பொருப்புள்ள அரசு பணியாளர்கள்.


மருத்துவ மனையில் பணியாற்றும் ஓர் நன்பரை சந்திக்கையில், அரசு பொது மருத்துவமனையில் நடக்கும் அவலத்தை விவறித்தார், 20 லட்சம் மதிப்புள்ள‌ சலவை எந்திரம் வந்து 4 மாதமாகியும் இன்னும் அது பொருத்தப்படவில்லை, பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அனுமதியில்லாமல் விடுப்பு எடுத்துக்கொள்வது என பலவற்றை வருதத்துடன் பகிற்ந்துகொண்டார்.

ஓரு ரூபாய் அரிசி, இலவச கலர்டிவி என பல்வேறு இலவசங்களை வழங்கும் இந்த அரசு ஏன் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை இலவசமாக வழங்க மறுக்கிறது, முதல்வர் விரைவில் இலவச தடுப்பூசி போடப்படும் என தெறிவித்து 50 நாட்கள் ஆகியும் கூட இன்றுவரை ஏன் அது நடைமுறைப் படுத்த‌வில்லை என்பது முதல்வருக்கே வெளிச்சம்.

இவற்றை கேட்க யாரும் முன்வராதது, மக்கள் மக்களாட்சியில் நம்பிக்கை இழந்துவிட்டதை காட்டுகிறது. கேட்க வேண்டிய எதிர் கட்சிகள் ஆர்பாட்ட அரசியலோடு ஓய்ந்து போகின்றன, ஆட்சியை வழிநடத்துவதில் எதிர் கட்சியின் பங்கே மிக அவசியமானது என்பதை மக்களும் புறிந்துகொள்ளவில்லை, மற்ற கட்சிகளும் புறிந்துகொள்ளவில்லை.
Readmore...
Friday, October 15, 2010

அறிஞர் அப்துல் கலாமும், கலைஞர் கருணாநிதியும்

4 comments
 
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளான இன்றைய தினத்தை (அக்டோபர் 15) ஐக்கிய நாடுகள் சபை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ளது என்பது இந்தியார் அனைவருக்கும் கிடைத்த பெருமை, குறிப்பாக தமிழர்களான நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் தமிழில் சிறந்த புலமைபெற்ற உலகம் போற்றும் இந்த தமிழனை உலக செம்மொழி மாநாட்டிற்க்கு அழக்கப்படவில்லை என்பது நாம் அறிந்த ஒன்றே.


நாடு போற்றும் தமிழனை, நாம் சுயநலத்திற்க்காக பயன்படுத்தும் மாநாட்டு மேடையில் ஏற்றி அவமானப்படுத்தக் கூடாது என்ற நல்ல என்னத்தால் கலைஞர் கருணாநிதி அதை செய்திருக்கலாம் என தோண்றுகிறது.

சரி அரசியல் மூதறிஞ்சர் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை ஐ.நா சபை எந்த நாளாக கொண்டாட நினைக்கும் என்பது உங்கள் கற்பனைக்கே!

தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் பிறந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் கல்வி கற்று நாட்டின் தலை சிறந்த அணுவியல் அறிஞராகவும், தொலைநோக்கு சிந்தனையாளராகவும் திகழும் அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக மிகச்சிறப்பாக பணியாற்றினார். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்களுக்கு முன்மாதிரி தலைவராக திகழும் அப்துல் காலம் உலகம் முழுவதும் இதுவரை 1 கோடி மாணவர்களை சந்தித்து உரையாற்றிவுள்ளார்.


மாணவர்கள் எதிர்காலத்தில் எப்படி வாழவேண்டும், நாட்டுக்கு எவ்வகையில் கடமையாற்ற வேண்டும் என்று தொடந்து திட்டங்களை வகுத்து, விளக்கம் கொடுத்து, எளிமையாக உரையாடி ஊக்கப்படுத்தி வரும் அப்துல் கலாம் போற்றப்படும் உலகத் தலைவர்கள் ஒருவராக திகழ்கிறார்.

இந்நிலையில் அவரின் பிறந்த நாளான அக்டோபர் 15 ஆம் தேதியை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ள ஐ.நா. சபை அதிகாரப்பூர்வமாக உலகம் முழுவதும் இந்த நாளை மாணவர் தினமாக கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அங்கீகாரம் இந்தியாவின் தலைவர் ஒருவருக்கு இதுவரை கிடைக்காத ஒரு சர்வதேச ஒரு சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore...
Tuesday, September 21, 2010

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவும் கருணாநிதியின் பகுத்தறிவும்.

0 comments
 
சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்த போது இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்ட தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலின் ஆயிரம் ஆண்டுகள் நிறைவு விழாவை தமிழக அரசு சில நல்ல? கலைநிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாட இருகிறது, பார்பனர்களின் யோசனைபடி வெற்றி சின்னமாக நிர்மானிக்கப்பட்ட இ...க்கோயிலில் பல்லாயிரம் தேவ தாசிகளின் நாட்டிய ஒலியும் நடன அசைவுகளுக் புதைந்து கிடக்கிறது, அடிமைப்படுத்தப்பட்ட தொல்குடி தொழிலாளர்கள் சிந்திய வியர்வையும், தேவ தாசிகளின் காற்சலங்கை கீறி கொட்டிய இரத்த கறையின் மேலும் நடக்கும் இவ் விழாவில் இக்கொயிலினுள் பரத நாட்டியம் நடத்தலாம், ஆணால் பறையாட்டம் கூடாது என உத்தவிட்ட திராவிட மணி கலைஞர் கருணாநிதியின் பகுத்தறிவை எண்ணுகையில் புல்லறிக்கிறது.போகிற போக்கை பார்த்தால் திமுக வரலாற்றின் கடைசிமுதல்வர் தான்(கருணாநிதி) தான் என்னபதை நிருபித்து விடுவார் போலிருக்கே!
Readmore...
Friday, September 10, 2010

அன்று போபர்ஸ் பீரங்கி, நேற்று ஸ்பெக்ரம் இன்று காமன்வெல்த் போட்டி ஊழல்- தொடறும் காங்ரஸின் சாதனைகள்.

1 comments
 
போபர்ஸ் பீரங்கி மற்றும் ஸ்பெக்ரம் ஆகியவற்றுக்கு சற்றும் குறைவில்லாமல் தற்போது காமன்வெல்த் போட்டி ஊழல் சோனியா தயவில் சிறப்பாக‌ நடந்துவருகிறது. மேற்கூறிய அனைத்து முறைகேடுகளும் காங்ரஸ் ஆட்சியின் தான் நடந்தது என்பது கவணிக்கத்தக்கது.

காமன்வெல்த் போட்டி வரலாற்றிலேயே அதிக செலவு செய்தது இந்தியாதான். முதலில் 617.5 கோடி என்றார்கள், அப்புறம் 1895.3 கோடி அப்புறம் 7000 கோடி என்றார்கள். இப்போதைய நிலவரப்படி 65500 கோடி செலவாகுமாம். காமன்வெல்த் போட்டி 2014 ல் நடத்தப்போகும் ஸ்காட்லான்ட் திட்டமிட்டுள்ளது மொத்தமே 3749 கோடிகள்.

காமன்வெல்த் ஏற்பாடு முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதில் தொடர்புடைவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். போட்டி முடிந்த பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய பிரதமர் அமைச்சரவை குழுவை நியமித்துள்ளார் என்று மட்டும் கூறிவிட்டு காங்ரஸ் தலைவர் சோனியா காந்தி முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படுவது நாகரீகமற்ற அரசியல்.

மணிஷங்கர் ஐயர் பெரிய அளவில் துவக்கிய இந்த பிறச்சனை பாராளுமன்ற இருஅவைகளையும் சில நாட்கள் முடக்கியதேடு தற்போது முடங்கி கிடக்கிறது, அதுமட்டுமல்லாமல் காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்குத் தொடர்பு உள்ளது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சாமியும் கூறியுள்ளார். இதில் ஒரு பெரும் தொகை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு லண்டனில் வைத்து செலுத்தப்பட்டது.லண்டனில் உள்ள போது ராகுல்காந்தி ரவுல் வின்சி என்ற பெயரில் வலம் வந்துள்ளார். மாதம் ஒரு முறையாவது லண்டனுக்கு விஜயம் செய்யும் ராகுல் காந்திக்கு இந்திய ஹைகமிஷனர் அலுவலகத்தைச் சார்ந்த ஒருவர் எடுபிடியாக செயல்பட்டு வருகிறார் என சுப்ரமணியன் சாமி விவரிக்கிறார்.


30 ரூபாயிக்கு வாங்கவேண்டிய‌ கொசு விரட்டியை 90 ரூபாயிக்கு வாடகை எடுத்துள்ளார்கள், 30 ஆயிரம் ரூபாயில் சொந்தமாகவே நல்ல கணினி வாங்கமுடியும் போது இவர்கள்  90 ஆயிரம் கொடுத்து கணினியை வாடகை எடுத்துள்ளார்கள், இதுமட்டுமல்லாமல் சாலை, மைதானம், கழிவறை  போண்ற எல்லா நிலையிலும் கொல்லையோ கொல்லை, ஆனால் அவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படாத பிரதமர் அனுவிபத்து மசோதாவை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தார்.

இன் நிலையில் டெல்லியில் பெய்துவரும் கடும் மழையால் பெரும்பாலான வேலைகள் தடைப்பட்டுள்ளதாக செய்திகள் தெறிவிக்கின்றன.     ஒலிம்பிக்கில் சீனா சாதித்ததுபோல், காமன்வெல்த் போட்டியில் இந்தியா சோபிக்குமா என்பது சோனியாவுக்குதான் வெளிச்சாம்.
Readmore...
Friday, September 3, 2010

நான் ஏன் குத்தாட்டத்தை ரசிக்கிறேன்? உடன்பிறப்புகளுக்கு கருணாநிதி பதில்.

0 comments
 
உடன்பிறப்பே! தந்தை பெரியாரால் ஈர்க்கப்பட்டு அறிஞர் அண்ணாவால் வளர்க்கப்பட்டு, உடன்பிறப்புகளால் நான் அரசியலுக்கும் பதவிக்கும் வந்தவன் நான் என்பதை நீங்கள் அறியாதவர்கள் அல்ல‌. தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் நான் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வருகிறேன் என்பதை உலகறியும். 650 கோடி ரூபாய் செலவில் நாம் நட்டத்திய செம்மொழி மாநாட்டை உலகம் மறந்துவிடுமா? இல்லை 100 நாட்களில் 4 தொலைக்காட்சி அலைவரிசைகளை கலைஞர் தொலைக்காட்சிக்காக துவங்கியதை மக்கள்சாதனை என்று சொல்லகூடாதா? இந்த வயதிலும் மிக கடுமையாக நான் உழைக்கிறேன் என்றால் அதை சில விஷ‌மிகளும், திராவிட பன்பாட்டு எதிரிகளும் தவறாக பேசுகிறார்கள்,பொய் பிர‌ச்சாரம் செய்கிறார்கள்.



ஷாருக் கான் போன்ற நடிகர்கள் மராட்டிய முதல் மந்திரியை பார்பதற்க்கு கூட அனுமதி மறுக்கப்படுகிற வேலையில் தமிழக முதல்வர் அலுவலக கதவு சின்னதிரை மற்றும் வெள்ளிதிரை கலைஞர்களுக்காக எப்போழுதுமே திறந்தே இருக்கிறது என்பதை கலையுலகம் நன்கறியும். எத்தனை சலுகைகள், எத்தனை எத்தனை பாராட்டு விழாக்கள்! இப்படி நடிகர்கள் மற்றும் நடிகைகள் புடைசூழ இருப்பதையே நான் பெருமையாக நினைக்கிறேன். சின்னதிரை கலைஞர்களுக்கு தனி நலவாரியம், சின்ன மற்றும் வெள்ளிதிரை நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் போன்றோர்களுக்கு 75 ஆயிரம் இலவச வீடு திட்டம் என இந்த அரசின் சாதனைப்பட்டியல் நீள்கிறது. இப்படி மக்களின் வரிபணத்தை வாரி வழங்குவதால் தான் அவர்கள் பாராட்டு விழா என்ற பெயரில் நல்ல குத்தாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள், இதை ஏதோ நான் மட்டும்தான் கண்டுகளிப்பதுபோல சில பத்திரிக்கைகள் எழுதுகின்றன, அதே குத்தாட்டத்தை நமது கலைஞர் தொலக்காட்சியில் பல்வேறு வர்த்தக விளப்பரங்களுக்கிடையில் ஒளிபரப்பு செய்யவில்லையா, அல்லது அதை தமிழக மக்கள் தி.மு.க அரசு கொடுத்த இலவச டி.வியில் பார்க்கவில்லையா, ஏதோ இதுபோண்ற குத்தாட்டங்கள் பாராட்டுவிழாக்கள் என்ற பெயரில் நடத்துவதை ஒருசிலர் குறை கூறினாலும் அது மக்களுக்காவே என்பதை என்போண்ற திராவிட சிந்தனை உள்ளோர்கள் புரிந்துள்ளார்கள்.



ஏதோ இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளில் நான் மட்டும்தான் சின்ன திரைக்கும் வெள்ளிதிரைக்கும் அதிக நேரம் செலவிடுவதாக சிலர் நினைக்கிறார்கள்,அவர்கள் நினைத்திவிட்டு போகட்டும்,தமிழில் வெளிவரும் எல்லா திரைப்படத்தையும் நமது அமைச்சர் பெருமக்களோடு திரையரங்கிற்க்கே சென்று நான் பார்கிறேனே ஏன்? திராவிட இயக்கத்தை வளர்த்ததே கலையும் இலக்கியமும் தான் என்பதை அறிஞர் அண்ணா போண்றோர் எத்தனையோ மேடையில் பேசியிருக்கிறார்கள் என்பதை நீ நினைவில்கொள்ளவேண்டும்.


இன்று நேற்றல்ல கடந்த 60 ஆண்டுகளாக எனக்கு தமிழ் திரைஉலகோடு தொடர்புன்டு, என்னையும் இயக்கத்தையும் வளர்த்த தமிழ் திரைஉலகை சிறப்பாக வளர்க்க என்குடும்பத்தார்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை நன்கறிவீர்கள், முரசொலி மாறனால் ஏற்படுத்தப்பட்ட சன் குழுமம் இன்று 22 தொலைக்காட்சி அலைவரிசையோடு தென் இந்தியா முழுவதும் கலைசேவை செய்துவருகிறது, மாறன் சகோதரர்களால் ஏற்பட்ட மனகசப்பால் உதயமான நமது கலைஞர் தொலைக்காட்சி தற்போது 5 அலைவரிசையோடு தமிழக மக்களுக்கு அல்லும் பகலுமாக‌ சேவை செய்துவருகிறது, அது மட்டுமா இன்று தமிழில் எடுக்ப்படும் பெரும்பான்மையான திரைப்படத்தை தயாரிப்பவர்களும், நடிப்பவர்களும் என் பேரன்களான உதயநிதியும், துறை தயாநிதியும் போண்றோர்கள்தான், இப்படி இந்த வெள்ளி மற்றும் சின்னதிரையை நாங்கள் ஆக்கிரமித்துள்ளதை கண்டு பொருக்கமுடியாத சிலர் அரசிற்க்கு எதிராக பேசுகிறார்கள், எமது நல்லாட்சிக்கு கலங்கம் ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயல்கின்றன.


பேசுபவர் பேசட்டும் ஏசுபவர் ஏசட்டும், இந்த தள்ளாத வயதில் குத்தாட்டத்தை கண்டுகளிப்பதை நிருத்தமுடியாது, அதுவும் நமிதா போன்றோர் ஆடும் ஆட்டம் என் மனதையும் தொடும்படியாக அமைந்துள்ளது,கண்டுகளிப்பது குத்தாட்டமானாலும், கலைவளர்ப்பது நாமல்லவா! பலன் பெறுவது கலைஞர்கள் ஆனாலும் பயனடைவது தமிழக மக்கள் அல்லவா!! ஆகையால் உடன்பிறப்பே உன் தலைவனுக்கு பாராட்டு விழா என்றால் பற‌ந்துவா, நீ கழக‌ அரசு கொடுத்த இலவச டி.வியில் பார்ப்பதைவிட நேரில் பார்க்க வேண்டும் என்பதே என்விருப்பம். வாழ்க தமிழ்! வளர்க திராவிடம்!!



(கற்பனை ஆனாலும் உண்மை)
Readmore...

தனுஷ்கோடி: வலிநிறைந்த வறலாற்று சுவடுகள்:

1 comments
 
தனுஷ்கோடிக்கு போக நேர்ந்தது, 1964 புயலுக்கு பலியான அந்த கடற்கரை நகர் இன்றுவரை மறுகட்டமைப்பு செய்யப்படவில்லை, புயலுக்கு முன்பு சாலை, இரயில் பாதை என எல்லா வசதியும் நிறைந்த அந்த நகரை மறுகட்டமைப்பு செய்தால் விடுதலை புலிகளின் நடமாட்டத்தை தடுக்க முடியாது என உணர்ந்த இந்திய அரசும், தமிழ் இன அழிப்புக்கு துனை நிற்க்கும் தமிழக அரசும் நினைத்ததால் இன்றும் தனுஷ்கோடி 1964லேயே இருக்கிறது, கட்சதீவை இலங்கையிடம் தாரைவார்த்தவர்கள் எதிர் காலங்களில் மன்னார் வளைகுடா பகுதியை சீனாவிடம் இழந்தாலும் வியப்பேதுமில்லை.

என் கேம‌ராவில் ப‌திவான சில‌ தனுஷ்கோடி புகைப்ப‌ட‌ங்க‌ளை மிகுந்த வலியோடு உங்க‌ளுட‌ன் ப‌கிற்ந்துகொள்கிறேன்.






புகைப்படத்தை க்ளிக் செய்தால் பெரிய அளவில் தெறியும்.
Readmore...
Saturday, August 14, 2010

புல்லட் ரயில் இந்தியாவில் எப்போது இயக்கப்படும்?

0 comments
 
உலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அது இந்தியாவை தொடுவதற்க்குள் அந்த மற்றம் பல்வேறு புதிய பரினாமங்களை கண்டுவிடும். வெள்ளையர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நீராவி இரயில் தற்போது மின்சாரத்தாலும், டீசலாலும் இயக்கப்படுகிறதென்பதைத் தவிர நமது ரயில்வேதுறையில் வேறேந்த பெரிய மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை.

2009இல் அன்றைய ரயில்வேதுறை அமைச்சர் லாலூ பிரசாத் ஜப்பான் சென்று புல்லட் ரயிலில் பயண‌ம் மேற்கொண்டார், அது போலவே இந்தியாவிலும் விரைவில் புல்லட் ரயில் இயக்கப்படும் என மக்கள் ஆவலோடு எதிற்பார்த்தார்கள் ஆனால் மீண்டும் அத்துறை மமதாவிடம் சென்றதால்  புல்லட் ரயிலைப்பற்றி முற்றிலும் மறந்துவிட்டார்.

ஏற்கனவே புணே-மும்பை-ஆமதாபாத் இடையே 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலை இயக்குவது தொடர்பான ஆய்வை ரயில்வே அமைச்சகம் நடத்தி வந்தது, புணேவிலிருந்து ஆமதாபாத்துக்கு 533 கிலோ மீட்டர் தூரமாகும். இந்த தூரத்தை கடக்க 10 மணி நேரமாகிறது. எனவே புணே-மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரயிலை இயக்குவதற்கான வாய்ப்பு உண்டு, சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ரூ.15 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்தொகையை மகாராஷ்டிர மாநில அரசும், ரயில்வே அமைச்சகமும் இணைந்து வழங்கியது.

மேலும் புல்லட் ரயிலை இயக்குவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பத்தைத் தருவதாக சமீபத்தில் இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் யுகியோ ஹடோயமா தெரிவித்தார். ஜப்பான் நாட்டிடமிருந்து புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை வாங்கும் திட்டம் இந்தியாவிடம் தற்போது இல்லை.

பின்பு தில்லி-பாட்னா-தில்லி-சண்டீகர்-அமிர்தசரஸ், ஹவ்ரா-ஹால்டியா, ஹைதராபாத்-தோரங்கல், விஜயவாடா-சென்னை, சென்னை-பெங்களூர்-கோவை-எர்ணாகுளம் ஆகிய வழித்தடங்களிலும் புல்லட் ரயிலை இயக்குவது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் என ரயிவே தெறிவித்தது.

இன்னிலையில் சீனா 2009ம் ஆண்டே புல்லட் அறிமுகம் செய்தது, அதுமட்டுமல்லாமல் 2015க்குள் சுமார் 8000 கிமி தொலைவுள்ள புல்லட் ரயில் பாதையை கட்டமைக்க சுமார் 8 லட்சம் கோடி ஒதுக்கியிள்ளது, இந்த நிதி சுமார் இந்திய பட்ஜெட்டில் 80 சதவிகிதம் ஆகும், ஆனால் இந்தியாவோ புல்லட் ரயிலைப்பற்றி கவலைப்படவில்லை என்பது நாட்டிற்க்கு பெரும் பின்னடைவு என பொதுமக்கள் கருதுகிறார்கள்.

Readmore...
Saturday, July 31, 2010

சென்னையில் குடிசைவாழ் மக்களை வெளியேற்றுகிறது திமுக அரசு‍ ஜெயலலிதா அறிக்கை

1 comments
 
சென்னையில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் எற்ற பெயரில் குடிசைப்பகுதிகள் காலிசெய்யப்படுவதாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடற்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் துறைமுகம் ‍‍மதுரவயில் சந்திப்பை இனைக்கும் உயர்நிலை மேம்பால சாலை 9கிமி  என முதலில் திட்டமிடப்பட்டது ஆனால் அந்த் பாதையை செயல்படுத்தினால் திமுக வினரின் சொத்துக்கள் பாதிக்கப்படும் என்பதற்க்காக 19கிமி அளவிற்க்கு நீட்டிப்புசெய்து பாதையை சுற்றுபாதையாக அமைத்து சென்னையில் வசிக்கும் பெறுவாரியான  குடிசைப்பகுதில் வசிக்கும் குடும்பங்க்ளை காலிசெய்ய வைத்திருக்கிறார்கள்.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைவாழ் குடும்பங்கள் வெளியேற்றி மிகவும் மோசமான பகுதியில் அவர்களை குடியமத்தியுள்ளார்கள்.

குடிசைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த வேண்டிய குடிசைமாற்று வாரியம் பூங்காக்கள், வணிக வளாகங்கள் என்ற பெயறில் குடிசைகளை அகற்றி வருகிறது.

கூவம் ஆற்றை சுத்தப்படுத்துகிறேன் என்றபெயரில் ஏராளமான குடும்பங்களை வெளியேற்றியுள்ளார்கள்.


சர்வதேச மாற்றுவாழ் திட்டத்தின்படு ஓர் குடும்பத்திற்க்கு 450 சதுர அடி குடியிருப்பு இருக்க வேண்டும் ஆனால் செம்மங்சேரி, கண்ணகி நகர் பகுதியில் உள்ள வீடுகளின் அளவு குறைவாகவே உள்ளது. இந்த மக்களின் வாழ்வாதாரங்களை வீனாக்காமல் அவர்கள் உள்ள இடத்திலேயே வீடு கட்டி தரவேண்டும் இல்லையேல் அதிமுக இவர்களுக்கு அதரவாக போராட்டம் நடத்தும் என கூறியுள்ளார்.  தினமணி செய்தி: 1.08.2010

Readmore...
Tuesday, July 27, 2010

நெருப்பு நரியை வெள்ளுமா எபிக் ப்ரௌசெர்?

2 comments
 

ஏபிக் ப்ரௌசெர் பெங்களுரு வாழ் மென் பொருள் வள்ளுனர் அலோக் பரத்வாஜ் என்பவருக்குச் சொந்தமான 'ஹிடன் ரேப்லெக்ஸ்' எனும் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு, எபிக் நெருப்பு நரியின் நீட்சிதான் இருப்பினும் மண்ணின் மைந்தர்கள் தம் மக்களுக்கென உறுவாக்கியதை,உயோகிப்பது நமது கடமையல்லவா!

சுமார் 10.5 எம்.பி கனமுள்ள எபிக் கிட்டதட்ட ஒபர மற்றும் கூகுள் குரோம் ஆகியவற்றை நினைவி படுத்துகிறது.. தற்போது பன்னிரண்டு இந்திய மொழிகளில் பயன்பாட்டு வசதி உள்ளது.

இதன் முக்கிய அம்சம் என்னவெனில் இதில் உள்ள ஆன்டி வைரஸ் சைட்பார் தான், இதன் மூலம் சாதாரன கோப்புகளை மட்டுமல்லாமல், உங்கள் மொத்த கணினியையே நீங்கள் ஸ்கேன் செய்யலாம், அதுமட்டுமல்லாமல் நீங்கள் தரவிரக்கிய கோப்புகளையும் ஸ்கேன் செய்து அதில் உள்ள வைரஸ்களை அழிக்கலாம்.

மேலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப, தீம்களை மாற்றிக்கொள்ளலாம் இதற்காக 1,500 தீம்கள் உள்ளது,ஒன் கிளிக் பிரைவேட் ‌டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் & நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது

மேலும் இதனை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளாம்.
Readmore...
Monday, July 5, 2010

புதுவையில் பந்த் அமேக வெற்றி!

0 comments
 
மக்கள் பிறச்சனையை துச்சமென மதிக்கும் மன்மோகன் அரசின் பெட்ரோல் விலைஉயர்வை கண்டித்து ப.ஜ.கா மற்றும் இடதுசாரிகள் நடத்திய நாடுதழுவிய பந்த் இன்று புதுவையில் அமோக வெற்றி பெற்றது.

காலையில் இருந்தே கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை, தமிழக அரசு பேருந்துக்களை தவிர வேறுரெந்த தனியார் பஸ்களும் இயக்கப்ப்படவில்லை, கடலூரிலில் இருந்து புதுவைக்கு சென்னை வழிதடத்தில் செல்லும் அரசு பேருந்துமட்டுமே சென்றது அதுவும் ஒருசிலரோடு! ஷேர் ஆட்டோ, ஆட்டோ, வேன், டாக்சி போன்ற எந்த வாகனமும் இயங்கவில்லை ஒருசில இரு சக்கர வாகனத்தைத் தவிர.

ஒரு சில வியாபாரிகள் பெட்டிகடைகளை பாதி திறந்து பீடி சீகரெட் போண்றவற்றை விற்பனை செய்தார்கள், மெடிக்கல் மற்றும் சிறிய பால் பூத்துக்க்ளை தவிர வேறெந்த கடையும் திறக்கப்படவில்லை.

காலை 10.30 மணிய,ளவில் ஆற்பாட்டம் செய்த இடதுசாரி தோழர் மற்றும் தோழியர்களை போலிஸ் பேருந்தில் அடைத்து சிறைக்கு கொண்டுசென்றார்கள் காவலர்கள், பேருந்தில் செல்லும் போதும் மைய அரசிற்கெதிராக கோஷம் போட்டுக்கொன்டே சென்றார்கள்.

காங்ரஸ் ஆளும் புதுவையில் இந்த பந்தின் வெற்றி உண்மையில் எதிபாராத ஒன்றுதான்  ஆனால் மக்கள் மத்திய அரசின் மேல் நம்பிக்கையிழந்துள்ளார்கள் என்பதை தான் இந்த வெற்றி நமக்கு உண்ர்ந்துகிறது.
Readmore...
Thursday, June 10, 2010

மலிவு விலையில் மனித உயிர்கள், மரண வியாபாரத்தில் இந்தியா!

0 comments
 
"முதலாளி தன் லாபத்தில் தொழிலாளிக்குப் பங்கு கொடுக்கத் தேவையில்லை, ஆனால் தொழிலாளி எப்பொழுதும் தன்னை தன்னுள் இழந்து
கொண்டிருக்கிறான்" என்றார் கார்ல் மார்க்ஸ். ஜனநாயக ஆட்சி என்ற போர்வையில் முதலாலிகளுக்காக ஆட்சி நடந்துகொண்டிருக்கும் இந்த தேசத்தில், ஏழைகளின் நிலை மார்க்ஸ் கண்ட தொழிலாளர் வர்க்கங்களைவிட மோசமாக இருக்கிறது. இந்தியா வளர்ந்துகொண்டிருக்கிறது, ஆனால் இங்குள்ள ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாக்கப்படுகிறார்கள். இந்த நாட்டின் வளர்ச்சியில் தன்னையிழக்கும் ஏழைகள், தங்கள் நாட்டின் வளர்ச்சியால் தாங்கள் உயரவில்லை என்ற எண்ணமே இல்லாமல் இருப்பதுதான் சாபக்கேடு. மார்க்ஸ் சொன்னதுபோல் "தொழிலாளர்கள் புரட்சியாளனாக இருக்க வேண்டும், இல்லையேல் இல்லாமல் போகவேண்டும்".

தன் நாட்டு பத்திரிக்கையாளன் தாலிபன்களால் கடத்தப்பட்டத ற்காக பல மில்லியன் டாலர் செலவுசெய்கிறது அமெரிக்க அரசு. இந்தியா வோ, அமெரிக்கக் கம்பெனியால் கொல்ல‌ப்பட்ட 15 ஆயிரம் மனித உயிர்களுக்காக நீதியையே குழிதோண்டிப் புதைத்திருக்கிறது. போபாலில் 1984, டிசம்பர் 2 நள்ளிரவில் யூனியன் கார்பைடு இன்டியா லிமிட்ட‌ட் கம்பெனியிலிருந்து கசிந்த மீத்தைல் ஐசோ சயனேட் நச்சினால் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். 15 ஆயிரம் உயிர்கள் காற்றில் கரைந்து போயின. இந்த வழக்கில் 26 ஆண்டிற்குப் பிறகு தீர்ப்பளித்த போபால் நீதிமன்ற ம் எட்டு நபர்களுக்கு மட்டுமே இரண்டு ஆண்டு சிறைதண்டனை கொடுத்துவிட்டு, அவர்களையும் அன்று மாலையே பிணையில் வெளியிட்டுவிட்ட அநீதி உலகில் வேறு எங்கும் நிகழாத மாபெரும் மனித உரிமை மீறல். இதுபோன்ற பேரழிவிற்குப் பிறகும், மேலைநாடுகளில் தடைசெய்யப்பட்ட பல்வேறு இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளை அமைக்க மத்திய அரசு தொடர்ந்து மானியத்தோடு அனுமதியளித்துக் கொண்டுதான் இருக்கிற து.

இந்திய அரசு ஏழை எளிய மக்களைத் தன்னுடைய குடிமக்களாக ஒருபோதும் கருதியது இல்லை என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் வேறேது?

உணவு, உறைவிடம், உடை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவ வசதி என மனிதனுக்குரிய எந்த அடிப்படைத் தேவைகளையும் பூர்த்திசெய்ய விரும்பாத நாடாக இந்தியா இன்றும் இருந்துவருகிறது. சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆனபின்பும் கூட குடிநீருக்காகவும், மருத்துவமனைக்காகவும் இந்திய மக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருக்கிறது. இந் நிலையில் அணுஆயுத வல்ல‌ரசு என்று தன்னை வெட்கப்படாமல் அறிவித்துக்கொள்கிறது இந்தியா. ஏழை, எளிய மக்களை ஒரு பொருளாகக் காட்டி உலக வங்கியில் குறைந்த வட்டியில் அதிக அளவு கடன் பெற்று, இந்த நாட்டின் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை முதலாளிகளுக்காக ஏற்படுத்திக் கொடுக்கிறதே தவிர, ஏழ்மையைப் போக்க, பட்டினி சாவைக் குறைக்க எந்த நடவடிக்கையும் தீவிரமாக இங்கு மேற்கொள்ளவில்லை.

கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு விமான விபத்தில், ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 158 பயணிகள் உயிரிழந்தார்கள். விபத்தில் இறந்தவர்களுக்கு தலா 72 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக அவர்களின் குடும்பத்தார்களுக்கு வழங்கப்படும் என சம்மந்தப்பட்ட‌ துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அதே மாநிலத்தில் அடுத்த சில நாட்களில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரு பேருந்தில் பயணித்த 30 பயணிக‌ள் கொல்ல‌ப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் மரணத்திற்கு மாநில அரசு ரூ 2 லட்சம் மட்டுமே இழப்பீடாக அறிவித்தது. இதாவது பரவாயில்லை சாதிய வன்கொடுமையில் உயிரிழந்தவர்களுக்கு வெறும் 1.5 லட்சம் மட்டுமே இழப்பீடு கொடுக்கப்படுகிறது. அதுவும் அந்தப் படுகொலைக்கு முறையாக வழக்கு பதிவு செய்தபின்புதான் இந்த இழப்பீட்டைக் கூட கொடுக்க அரசு சம்மதிக்கிறது. என்ன ஓரு பாகுபாடு பாருங்கள்! தன் குடிமக்களின் மரணத்தில் கூட ஏழை, பணக்காரன் என தரம் பிரித்து இழப்பீடு வழங்கும் இந்த அரசை மக்கள் அரசு எனறால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? மக்கள் அனைவரும் சமம், அவர்களுடைய ஒவ்வொரு வாக்கும் சம மதிப்புடையது என்ற மக்களாட்சி தத்துவத்தையே மழுங்கடிக்கும் இந்த தேசத்தின் அரசியல் மற்றும் அதிகார வர்க்கங்கள், பெரு முதலாளிகளைவிடக் கொடுமையானவர்கள்.

இயற்கை பேரிடர்களான வெள்ளம், புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றில் உயிரிழந்தவர்கள் மற்றும் உடமையிழந்தவர்களுக்கு எந்த ஒரு குறிபிட்ட தொகையையுமே இழப்பீடாக "பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005" இல் மத்திய அரசு நிர்ண‌யிக்கவில்லை. மாறாக உடனடி நிவாரண‌மாக சில ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத ஆளும் கட்சிக்காரர்களுக்கு மாநில அரசு கொடுத்தபின்பு, பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு ஆய்வு செய்தபின்பே மத்திய அரசு நிவாரண‌த் தொகை அனுப்புகிறது. அப்படி தரும் நிவாரண‌ம் கூட முழுமையாக மக்களுக்குக் கிடைப்பதில்லை. 2004ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆண்டுகள் முடிந்தபின்பும் வீடுகள் கட்டித்தரப்படாத அவல நிலை நீடிப்பதைக் காணமுடிகிறது.

நிவாரண‌ம் வழங்குவதில் தமிழக அரசு யாருக்கும் குறைவைப்பதில்லை. எல்.சி.டி டிவி வைத்திருப்பவனுக்குக் கூட இலவச டிவி கொடுப்பதுபோல், வெள்ளம் வந்துவிட்டால் மூன்றாவது மாடியில் குடியிருப்போர்களுக்கும் கூட இரண்டாயிரம் ரூபாய் நிவாரண‌த் தொகை கிடைக்கிறது. வாக்கிற்கு ஐநூறு என்ற கணக்கு போலும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவேண்டிய நிவாரண‌ம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவது, உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்துவது போலல்லவா இருக்கிறது? அதுமட்டுமல்லாமல் குடிசையை இழந்து தவிப்பவன் இரண்டாயிரம் ரூபாயில் மச்சிவீடா கட்டமுடியும்?சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேட்டிசேலை தருவ‌தாகச் சொல்லி பலபேர் நெரிசலில் சிக்கி இறந்த கதையும் உண்டு.
இவைமட்டுமின்றி மரணங்கள் பல்வேறுவகையில் நம் மக்களைத் தழுவுகிறது. சிறைச்சாலைகள் மற்றும் போலிஸ் கஸ்ட‌டியில் ஆண்டிற்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், சாலை விபத்தில் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோரும் உயிரிழப்பதாக மனித உரிமை ஆர்வல‌ர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் விபத்தில் ஆண்டிற்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட‌ மானுட உயிர்கள் சாலையில் மடிந்துபோகின்றன. இதைத்தவிர‌ இரயில் விபத்து, விமான விபத்து, குடும்ப வன்முறை, சாதி மத மோதல், கடத்தல் மற்றும் காணாமல் போதல், எல்லைப் பிரச்சனை, வெடிகுண்டு, இயற்கை மற்றும் செயற்கை பேரிடர், காலரா, காசநோய், பட்டினிச் சாவு, சிசுக் கொலை, பிர‌சவ இறப்பு, உயிர்க்கொல்லி மற்றும் தொற்று நோய்கள் என ஆண்டிற்கு பல லட்சம் உயிர்களை நம் அரசு கவன‌க்குறைவு மற்றும் முறையற்ற நிர்வாகத்தால் பலிகொடுக்கிறது. வன விலங்குகளைக் கூட மின்வேலி அமைத்துப் பாதுகாக்கும் அரசு, மனிதர்களை மரணத்திலிருந்து பாதுகாக்க ஏன் தயங்குகிறது? முறையான போக்குவரத்து விதி, சாலை பராமரிப்பு, வாகன தணிக்கை, கட்டாய தலைக்கவசம், சாலையோர மருத்துவமனை மற்றும் சாலை விபத்துகள் பற்றிய விழிப்புண‌ர்வு போன்ற செயல்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டாலே ஆண்டிற்கு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்களையாவது சாலை விபத்திலிருந்து காக்க முடியும்.

இவை எல்லாவற்றிற்க்கும் காரணம் ஏழை எளிய மக்களின் சமூக பாதுகாப்பின்மை மட்டுமல்ல, சாதி மாதங்கள் கடந்து ஏழை எளியமக்கள் ஒன்று படாதது, மேலும் நாட்டின் 60 சதவிகித வருமானத்தை ஈட்டித்தரும் சுமார் 93 சதமுள்ள முறைசார தொழிலார்களின் நலன் புறக்கணிப்பு, அரசியல் மற்றும் அதிகார வர்க்க தலையீடு, முறையற்ற நிதி மற்றும் நீதி நிர்வாகம், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை, சாதி மத மற்றும் தீண்டாமை பிரச்சனை என காரணம் நீண்டுகொன்டே போகிறது. அமெரிக்கா, பிரான்ஸ் போண்ற வளர்ந்த நாடுகளில் ஏழை மற்றும் முதியோர்களுக்கு பல்வேறு இலவச ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியா குறைந்த அளவு சமூக பாதுகாப்பையாவது தன் குடிமக்களுக்கு கொடுக்க முன்வரவேண்டும். ஒரு முழுநேர அரசு ஊழியருக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் 12 ஆயிரம் கொடுக்கும் அரசு, வயதுவந்தோர்க்கு ஓய்வூதியமாக மாதம் ஐநூறு மட்டுமே அளிப்பது எந்தவிதத்தில் நியாயம்?


இந்திய ஜனநாயகம் சாதி மத சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளதால், ஏழைகள் மீண்டும் மீண்டும் கூறுபோடப்பட்டு முதலாளி வர்க்கத்திற்கு மட்டுமே பாடுபடும்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் பணிக்கப்படுகிறார்கள். "சமூக விடுதலையை நீங்கள் வென்றெடுக்காத வரையில், சட்டம் அளித்த விடுதலை உங்களுக்குப் பயன்படப் போவதில்லை" என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனை இன்றும் நமக்குப் பொருந்துவதாக உள்ளது. சட்ட திட்டங்களால் உயராத நம் வாழ்க்கை, சகோதரத்துவத்தால் உயரும் என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்? கைவிரலில் மை வைக்க காத்துக் கிடக்கும் கூட்டமாக நாம் இருக்கும் வரை, முதலாளிகளை மட்டுமே ஈன்றெடுக்கும் இந்திய ஜனநாயகம் என்பதை நம் புரிந்துகொண்டால் ம்ட்டுமே மக்களுக்கு சேவைசெய்யும் மக்களாட்சி மலரும். இல்லையேல் இந்திய மக்களாட்சி எப்பொழுதும் போல் முதலாளிகளாலே வழிநடத்தப்படும்.

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=9478:2010-06-10-11-32-10&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139
Readmore...
Thursday, April 15, 2010

திராவிடக் கட்சிகளும் கருணாநிதியும் தலித் மக்களுக்கு செய்ததென்ன?

0 comments
 
மனுதர்மத்தின் வழியில் இந்திய நிலப்பரப்பை ஆட்சிசெய்த பல்வேறு அரசர்களையும் பிரபுக்களையும் மிரட்டி, விரட்டி இந்த தேசத்திற்கு இந்தியா என்று வடிவம் தந்த ஆங்கிலேயர்களே இந்து மதத்தின் வர்ணாசிரமப் பிரிவுகளைக் கண்டு சற்று விலகியே நின்றார்கள். மதம் என்ற பெயரில் மனித வளத்தைக் கூறுபோட்ட இந்திய சாதி, மதவாதிகள், நீக்ரோக்களை அடிமைப்படுத்தி ஒரு மிருகத்தை விடவும் கேவலமாக நடத்திய தென் அமெரிக்க பருத்தி விவசாயிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது உலகம் அறிந்தது. அமெரிக்காவில் கூட அப்ரகாம் லிஙகன், மார்டின் லூதர் கிங், தற்போது  பராக் ஒபாமா என கருப்பின மக்களின் விடுதலை நாயகர்கள் தொடற்கிறாகள். ஆனால் இந்த தேசத்தில் தலித் மக்கள் விடுதலைக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த மானுட விடுதலைக்காக பாடுபட்ட டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களையே, சாதியத் தலைவனாக பார்க்க பார்ப்பன அடிவருடிகள் வெட்கப்படுவதில்லை.

இந்தியாவில் தலித் மக்களின் எழச்சிக்காக ஆங்கியேயர்கள் காலத்தில்தான் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது, 1845 ல் கொத்தடிமை ஒழிப்பு சட்டம் (The Slavery Abolition Act) கொண்டு வந்ததன் மூலம் வரி பாக்கிக்காக தலித் அடிமைகளை விற்பனை செய்வது ஓரளவிற்கு தடுக்கப்பட்டது, 1861ல் The Indian Penal Code ஐ நிறைவேற்றி அதுவரையில் இருந்த பிராமண சட்டத்தை காலாவதியாக்கினார்கள், இப்படி கல்வி உரிமை, தெருக்களில் நடமாடும் உரிமை, நில உரிமை என தலித் மக்கள் ஓரளவு சுதந்திரமாக வாழ ஆங்கியேயர்கள் உறுதுணையாக இருந்தார்கள்.

இந்திய விடுதலைக்கு பிறகு நாட்டின் ஆட்சி வெள்ளையர்களிடமிருந்து காங்கிரஸ்காரர்கள் கைப்பற்றி இன்றுவரை தொடர்கிறார்கள், இடைப்பட்ட 63 ஆண்டுகளில் இந்த தேசத்தில் வாழம் 30 சதவிகித தலித் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை நிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என யோசித்தால் கோபமும் குற்றவுண‌ர்வும் தான் மிஞ்சுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸின் ஆதிக்கத்தை 1967ல் முடிவுக்கு கொண்டுவந்தார் அண்ணாத்துரை, பின்பு 1969 முதல் இன்றுவரை ஐந்தாவது முறையாக முதல்வராக உள்ளார் திரு.கருணாநிதி, இததனை ஆண்டு கால தி.மு.க  ஆட்சியில் தமிழக தலித் மக்களுக்கு எந்த ஒரு திடமான திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியது கிடையாது.

1937 வாக்கில் நீதிக்கட்சியால் தொடங்கப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தையே ஓர் ஆயுதமாக்க் கையான்டு அரசியலில் வெற்றிகண்ட அண்ணாத்துரை, இந்தி எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு என தமிழக தலித் மக்க‌ளின் மொழி இனச் சிந்தனையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இவர்களை அரசியல் மைய நீரோட்டத்தில் சேர்க்காமல் கொடிபிடிக்கவும், கோஷம் போடவும் மட்டுமே பயன்படுத்தினார். திராவிட கட்சிகளால் தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்ற உணர்வு இன்றுவரை தலித் மக்களுக்கு ஏற்படாததற்க்கு இம்மக்களின் இயற்கையான மொழி இனப் பற்றே காரணம்.

கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய 44 தலித் விவசாய கூலித் தொழிலார்களை கூண்டோடு வைத்துக் கொளுத்திய கொடுமை 1968ல் அண்ணா ஆட்சியில் தான் நடந்தது, இதைப்பற்றி சட்டசபையில் விவாதிக்க மறுத்த அண்ணா இதை ஓர் கனவாக நினைத்து மற‌ந்துவிடுங்கள் என கேட்டுக்கொன்டார். தலித் மக்களின் உயிரின்மேல் அவர் வைத்திருந்த பற்றைப் பாருங்கள். இது போன்ற நிலப்பிரச்சனையில் 1997ல் பிகாரில் லாலுப்பிரசாத் ஆட்சிகாலத்தில் 58 தலித் மக்கள் சாதி இந்துக்களால் குருவியைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அண்ணா மற்றும் லாலுபிரசாத் ஆகிய இருவரும் பார்ப்பன எதிர்பாளர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இதுமட்டுமல்லாமல் கருணாநிதியின் முந்தைய ஆட்சிக்காலத்திலும், தற்போதும் சாதி மோதல்கள், படுகொலைகள், கழ்பழிப்பு என தலித் மக்கள் மீது எண்ணற்ற வன்கொடுமைகள் தொடர்கிறது. கடந்த பிப்ரவரி மாதம், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் தலித் மக்களுக்கான திட்டங்களை ஆய்வுசெய்த தேசிய SC/ST கமிஷனின் துணைத் தலைவர் கும்ளே, கருணாநிதி அரசை மிக வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தேசிய SC/ST கமிஷனுக்கு தமிழக அரசு எந்தவித ஒத்துழைப்பும் அளிக்காதது மட்டுமல்ல, தலித் மக்களுக்கான திட்ட விவரங்களை கொடுக்காதது, கமிஷனை கலந்தாலோசிக்காமல் உள் ஒதுக்கீடு செய்தது என தேசிய SC/ST கமிஷனை கருணாநிதி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது.

சுமார் 60 ஆயிரம் கோடியளவில் நிதியறிக்கை தாக்கல் செய்யும் தமிழக நிதியமைச்சர், தலித் மக்களுக்கு வெறும் 600 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளார், இந்த நிதியில் 90 சதவிகிதம் ஆதி திராவிட ப‌ள்ளி ஆசிரியர்களின் ஊதியம், மற்றும் மாணவர் விடுதி செலவுகளுக்குத்தான் பயன்படுகிறது, தலித் காலனிகளின் உள் கட்டமைப்பிற்காக எதுவும் செய்வதில்லை, இப்படி நடத்தப்படும் ஆதி திராவிட ப‌ள்ளிகளின் தரம் மிக கேவலமாகவே இருக்கிறது, அரசாங்க பள்ளியின் சராசரி தேர்ச்சி விகிதம் 65 சதவிகிதமாக இருக்கையில் ஆதி திராவிட ப‌ள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதம் வெறும் 45 சதவிகிதத்திற்க்கும் கீழ்தான்.

தலித் மக்களுக்கு நிதி ஒதுக்கி அதில் சமத்துவபுரம் கட்டியது, பஞ்சமி நிலங்களை திட்டமிட்டே பிற்படுத்தப்பட்ட‌ மக்களுக்கு இலவச நிலமாக கொடுத்தது, SC/ST பாதுகாப்பு சட்டம் 1989 ஐ நடைமுறைப்படுத்தாமை, எட்டாயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட பஞ்சமி நில வழக்குகளை விசாரிக்காமை என தி.மு.க அரசு தலித் மக்களுக்கு இழைக்கும் கொடுமைகள் சொல்லி மாளாது.

இதுபோன்ற‌ பல்வேறு உள்குத்து வேலைகளை மிகத் தெளிவாக செய்யும் கருணாநிதி, தந்தை பெரியார் சொன்ன கலப்பு திருமணத்திலும் கைவைத்திருக்கிறார் என்பதுதான் வேதனை, தமிழக அரசின் கலப்பு திருமண உதவி ரூ.20 ஆயிரம் வழங்க தகுதியாக தமிழக அரசு கூறியுள்ளதை சற்று கவனிக்கவும், அதாவது ஒருவர் தலித் சமுகத்தில் திருமண உறவு வைத்துக் கொண்டாலோ அல்லது ஓர் பிற்படுத்தப்பட்டவர் முற்படுத்தப்பட்ட சமுகத்தில் திருமண உறவு வைத்துக் கொண்டாலோ அரசின் கலப்பு திருமண உதவிக்கு தகுதியானவர்கள் எனக் கூறுகிறது, இது தந்தை பெரியார் சொன்ன கலப்பு திருமனத்திற்க்கு எதிரானது. தந்தை பெரியார் சொன்ன கலப்பு திருமணம் என்பது பிற சாதிக்காரர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் திருமண உறவு வைத்துக் கொண்டால் மட்டுமே அது கலப்புத் திருமனம் என்பதாகும்.

கடந்த நிதியாண்டில் சுமார் 23 லட்சம் தமிழக விவசாயிகள் (சாதி இந்துக்கள்) பெற்ற 7000 கோடி ரூபாயை முழுவதுமாக தள்ளுபடி செய்த கருணாநிதி, தலித் மக்கள் பெற்ற தாட்கோ கடன் 74 கோடியை தள்ளுபடி செய்ய மறுத்தார், பின்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட்  கட்சி  போன்ற கட்சிகளைச் சேர்ந்த MLA க்கள் தாட்கோ கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என முதல்வரிடம் கடிதம் கொடுத்தும், ஓர் ஆண்டுகாலம் கழித்தபின் சென்ற நிதியாண்டின் இறுதியில் தான் தாட்கோ கடன் 74 கோடியும் அதனுடன் மீன‌வர்கள் கடன் 72 கோடியும் சேர்த்து தள்ளுபடி செய்வதாக கருணாநிதி அறிவித்தார். தலித் குடும்பத்தில் சம்மந்தம் செய்த முதல்வரின் தலித் பற்றை பாருங்கள்!

சிறப்பு உட்கூறு திட்டத்தைச் இதுவரை செயல்படுத்தாமல் இருந்த தமிழக அரசு, இந்த நிதியாண்டில் (2010-11) ரூ.3,828 சிறப்பு உட்கூறு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது, மெலும் இதில் எந்தெந்த துறைகள், எத்தனை சதவிகிதம், எதற்க்காக ஒதுக்கியுள்ளார்கள் என்பதை இதுவரை தமிழக அரசு வெளியிடவில்லை.

இதுபோன்று எண்ண‌ற்ற துரோகங்களை தலித் மக்களுக்கு செய்த தமிழக அரசு, பிற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை சற்று கவனித்தால் நல்லது, குறிப்பாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைமுறையில் உள்ள உயர்கல்வி செலவை திரும்பக் கொடுக்கும் திட்டம் என்பது அங்குள்ள தலித் மாணவர்களுக்கு மிக உதவியாக உள்ளது, அதாவது ஓர் தலித் மாணவன் தனியார் பொறியியல், மருத்துவம் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க நேர்ந்தால் அவனுடைய படிப்புச் செலவை அதிகபட்சம் ஆண்டிற்கு 1.5 லட்சம் வரை மாநில அரசு திரும்பக் கொடுத்து விடுகிறது, ஆனால் உயர்கல்வியை முழுவதுமாக தனியார் மயமாக்கிவிட்ட தமிழக அரசு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தியிருந்தால் பல்லாயிரக்கணக்கான தமிழக ஏழை தலித் இளைஞர்கள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் மாறியிருப்பார்கள்.

மத்திய அரசு தயாரித்து, நடிகர் மம்முட்டி நடித்த டாக்டர்.அம்பேத்கர் திரைப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட ரூ.10 லட்சம் கொடுத்துதவ தமிழக அரசு மறுத்ததால் அப்படம் இன்னும் தமிழக மக்களை சென்று சேரவில்லை, அதே நேரத்தில் பெரியார் திரைப்படத்திற்காக 92 லட்சம் மானியமாக தமிழக அரசு அளித்துள்ளது.

1810 போன்ற காலங்களில் "பெரிய பறைச்சேரி" என்னும், பிற்காலங்களில் "கருப்பு நகரம்"(Black Town) என்னும் அழைக்கப்பட்ட சென்னை ஜார்ஜ் டவுனில் இன்று கூவம் நதியை தூய்மைப்படுத்தும் திட்டம், மேம்பாலம் கட்டுதல், அகலப்பாதை அமைத்தல், குடிசை மாற்று வாரியம் போன்ற பல்வேறு திட்டங்களின் பெயரால், சென்னையில் வசித்த கிட்ட்த்தட்ட 3 லட்சம் சேரி குடும்பங்கள் கருணாநிதியின் இந்த ஆட்சிகாலத்தில் மட்டும் முகவரியிழந்துள்ளார்கள்.

எத்தனை துரோகங்கள், எத்தனை எத்தனை இழப்புக்கள் இப்படி திராவிட கழகங்கள் தலித் மக்களுக்கு செய்த துரோகங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம், ஆனால் அது வீண் வேலையாகத்தான் இருக்கும், இன்று தலித் மக்கள் தங்களுக்கென்று மிகத் தெளிவாக அரசியல் தளத்தை உருவாக்க முடியாமல் தவிக்கிறார்கள், ஏனெனில் தலைவன் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களெல்லாம் தமிழக தலித் மகளுக்கு துரோகத்தை தவிர வேறொன்றும் செய்து விடவில்லை, இதனால் இம்மக்கள் திடாவிடக் கட்சிகளின் காலடியில் கிடப்பதை தவிர வேறு வழியில்லை. அயோத்திதாச பண்டிதர், தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்ற பல்வேறு தலைவர்களை கண்ட இந்த சமூகம் இன்று பாதை தெறியாமல் பரிதவிக்கிறது.  திராவிடக் கட்சிகளை எதிர்த்தும், அடிப்படை உரிமைக்காகவும் போராட தமிழக தலித்துக்கள் முன்வந்தால் மட்டுமே விடுதலை சாத்தியம் என தமிழக தலித் மக்கள் உணர்வார்களா?





Readmore...
Tuesday, March 9, 2010

மத்திய நிதியறிக்கை 2010-11: முதலாளிகளுக்கு முழுசாப்பாடு ஏழைகளுக்கு எச்சிலை

1 comments
 
ப‌.அப்ரகாம் லிஙகன்.
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி..என்ற வள்ளுவரின் வாக்கிற்கிண‌ங்க மக்களாட்சி தத்துவத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் இந்திய குடிமக்கள், உலகிலுள்ள ஒருசில ஜனநாயக நாடுகளுக்கு சிறந்த வழிகாட்டிகள். இப்படிப்பட்ட உன்னத மக்களாட்சித் தத்துவத்திற்கு தலைவண‌ங்கி வாழும் த‌ன் குடிமக்களுக்கு, இந்த தேச‌த்தின் அரசிய‌ல் மற்றும் நிர்வாக தலைவர்கள் கொடுக்கும் அன்புப் பரிசுதான் வறுமையும் வேலைவாய்ப்பின்மையும். உலகில் மிக‌ அதிக‌ ம‌க்க‌ள்தொகை கொண்ட சீனாவில் ம‌னித‌வ‌ள‌ம் முழுமையாக‌வும் திற‌ம்ப‌ட‌வும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டு சீனா இன்று உல‌கில் அசைக்க‌முடியாத‌ ச‌க்தியாக‌ மாறிவ‌ருகிறது. ஆனால் இந்தியாவில் நிலை‌மை த‌லைகீழ். இங்கு ம‌னித‌வ‌ளம் ம‌தத்தாலும், மொழியாலும், சாதியாலும் ந‌சுக்க‌ப்படுகிற‌து. ம‌க்க‌ளின் வ‌ரிப்பண‌த்தை அர‌சு மேல்த‌ட்டு ம‌ற்றும் ந‌டுத‌ட்டு ம‌க்க‌ளுக்கு ம‌ட்டுமே பகிர்ந்த‌ளிக்கும் ஓர் சடங்காகத்தான் 2010-11ஆம் ஆண்டு நிதியறிக்கையை த‌லித் ம‌க்க‌ள் காண்கிறார்கள்.

நாட்டின் வருமானத்தில் ஒவ்வொரு ருபாயிலும் 19 பைசா இந்த தேசம் தான் பெற்ற கடனுக்காக வட்டி செலுத்துகிறது என்கிறார் 1108749 கோடி ரூபாய்க்கு நிதியறிக்கை தாக்கல் செய்த ப்ரணாப் முகர்ஜி. மேலும் வரும் நிதியாண்டில் ஏற்படும் நிதிப்பற்றாக்குறையை பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை, 3G அலைக்கற்றை விற்பனைகளின் மூலம் சமாளிக்க முடியுமென நிதியமைச்சர் நம்புகிறார். நாட்டின் மொத்த வருவாயில் 35சதம் திட்ட பணிக்காகவும், 65 சதம் திட்டமில்லாத பணிக்காகவும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வரும் 2014-15ல் வறுமையை 50 சதவிகிதம் குறைத்துவிட முடியுமென நிதியறிக்கையில் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

நிலைமை இப்படியிருக்க மத்திய அரசு செயல்படுத்திவரும் சில வறுமை ஒழிப்பு திட்டங்களை சற்று கூர்ந்து கவனிப்பது நல்லது. இந்திராகாந்தி வீட்டுவசதித் திட்டத்தில் ஏழைகளுக்கு ஓர் வீடுகட்ட 45 ஆயிரம் ஒதுக்கும் மத்திய அரசு, நடுத்தர மற்றும் வசதிபடைத்தவர்கள் வீடுகட்ட 20 லட்சம் கடனும் அதில் ஒரு ச‌தவிகிதம் மானிய‌மாக‌வும் அதாவ‌து 20 ஆயிர‌ம் மானிய‌மும் அளிக்கிற‌து.

கடந்த தேர்தலில் "மக்கள் தொகையின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு சிறப்பு உட்கூறு திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய தேசிய காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும்" என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி பார்த்தால் வரும் நிதியாண்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு 460540 கோடி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு ஒதுக்கியதோ 284284 கோடி ரூபாய் மட்டுமே. இதில் சுமார் 3200 கோடி மட்டுமே தலித் மக்களின் சமூக பாதுகாப்பிற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சரி சிறப்பு உட்கூறு திட்டத்திற்காக (SCP&TSP) 284284 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே, இந்த நிதியை செலவு செய்ய குறிப்பிட்ட அமைச்சகம்/துறையிடம் ஏதாவது திட்டமுள்ளதா? என‌ கேள்விகள் எழலாம், ஆனால் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க ஆளும் கூட்டத்திற்கு நேரமேது!

மத்திய/மாநிலத்திலுள்ள ஒவ்வொரு துறையும் தங்களுடைய மொத்த திட்ட நிதியில் 20 சதவிகிதத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆனால் மத்தியில் மொத்தமுள்ள 83 துறை/அமைச்சகத்தில் 18 துறைகள் மட்டுமே சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளன. அதுவும் 20 சதவிகித நிதி ஒதுக்கமால் 3 முதல் 5 சதவிகித நிதி மட்டுமே மேற்கண்ட 18 துறைகளும் ஒதுக்கியுள்ளது வேதனைக்குரிய உண்மையாகும். இப்ப‌டி சிறப்பு உட்கூறு திட்டத்தை முறையாக‌ ந‌டைமுறைப்ப‌டுத்தாத‌ ம‌த்திய‌ அர‌சு, அனைத்து துறையின் திட்ட‌த்தில் 20 ச‌த‌விகித‌ம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி ம‌க்க‌ளுக்கு செல‌விட‌ப்ப‌டுவ‌தாக‌ கூறுவ‌து ந‌கைப்புக்குரியது.


உதார‌ண‌த்திற்கு தேசிய‌ ஊர‌க‌ வேலைவாய்ப்பு(NREGA) திட்ட‌த்திற்கான‌ நிதி 40100 கோடி ரூபாயில் 20 ச‌த‌விகித‌ம் த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளுக்கு சென்ற‌டைய‌ வேண்டும் என்ற‌ க‌ட்டாய‌மோ இல‌க்கோ குறிப்பிட்ட‌ அமைச்ச‌க‌த்திட‌மில்லை. இதுபோல‌வே ம‌த்திய‌ ஊர‌க‌ வ‌ள‌ர்ச்சித் துறை சிறப்பு உட்கூறு திட்ட நிதியாக‌ 13220 கோடி ஒதுக்கியிருக்க‌ வேண்டும். ஆனால் வெறும் 4957 கோடி ரூபாய் ம‌ட்டுமே த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளுக்கு ஒதுக்கியுள்ள‌து.

நகர்ப்புற ஏழைகளை மையப்படுத்தி செயல்படும் ஸ்வர்ண‌ ஜெயிந்தி யோஜனாவிற்கு(SJSY) 5400 கோடிரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளுக்கான 1080 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த திட்டத்தில் தலித் மக்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்ற அறிவிப்போடு முடித்துவிட்டார்கள். தேசிய கிராம வாழ்வாதர இயக்கம்(NRLM) என்ற புதிய திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் நபருக்கு தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்கப்பட இருப்பதாக நிதி அறிக்கை கூறுகிறது. ஆனால் இத்திட்டத்தில் 20 ஆயிரம் த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படுமா என்பது சந்தேகமே.


தற்போது உலகில் அதிகம் பேசப்படும் பருவநிலை மாற்றத்தின் பாதிப்பினைக் குறைக்கும் வகையில் 1000 கோடிரூபாய் ஒதுக்கியுள்ள மத்திய அரசு, பருவநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படும் த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி இன பெண்களுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கவில்லை.

இந்தியாவில் மெட்ரிக் கல்வி பெறுவதற்கு ஒரு மாணவன் மாதத்திற்கு 1550 ரூபாய் செலவுசெய்தாக வேண்டிய சூழலில், த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி மாணவர்களுக்கு அரசு 77 ரூபாய் மட்டுமே ஒரு மாதத்திற்கு செலவு செய்கிறது. மேலும் கடந்த ஆண்டு சிதம்பரம் அவர்கள் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் 20 மாவட்டங்களில் நவோதயா பள்ளி தொடங்கப்படும் என்றார். ஆனால் தற்போது இதுபோண்ற சிறப்பு திட்டங்களேதும் மத்திய அரசு வெளியிடாதது வருத்தத்திற்குரியதே.

இவ‌ற்றையெல்லாம் மிஞ்சும் வ‌கையில் உட்கட்ட‌மைப்பு நிதியான‌ 173552 கோடியில், அதாவ‌து மொத்த‌ திட்ட‌ செல‌வில் 47 ச‌த‌விகித‌ நிதியில் த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளுக்கான‌ உட்க‌ட்ட‌மைப்பு நிதி என‌ 20 ச‌த‌விகித‌ம் ம‌த்திய‌ அர‌சு ஒதுக்க‌வில்லை. இதுபோலவே 94765 கோடி ரூபாய் இர‌யில்வே நிதியறிக்கையில் த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளின் ப‌ங்கான‌ 15875 கோடிரூபாய் ஒதுக்க‌ப்ப‌ட்டிருந்தால் ப‌ல்லாயிர‌க்கண‌‌க்கான‌ த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளுக்கு நேர‌டி வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.

க‌ட‌ந்த‌ பிப்ர‌வ‌ரி 25ல் ம‌த்திய‌ நிதி அமைச்ச‌க‌ம் வெளியிட்ட‌ 2009-10ம் ஆண்டிற்கான‌ பொருளாதார‌ அறிக்கையில் த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளுக்கான‌ திட்ட‌ங்க‌ள் திருப்தியளிக்கும் விதத்திலில்லை எனக் கூறியுள்ள‌போதும், 2010-11 நிதியறிக்கை தலித் மக்களுக்கான எந்தவித சிறப்புத் திட்டமுமில்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு உட்கூறு திட்டத்தைப் ப‌ற்றிப் பேசும்போது, அந்தத் திட்டங்‌களை செய‌ல்ப‌டுத்தும் சில‌ துறைக‌ளை கூர்ந்து கவனித்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது. ம‌த்திய‌ உயிர் தொழில்நுட்பத் துறை 3 ச‌த‌விகித‌த்திற்கும் குறைவான‌ நிதியை சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது. அவ‌ற்றில் 2008-09 ஆண்டிற்கான‌ ஒதுக்கீட்டில் ஓசூர் டி.வி.எஸ் அற‌க்க‌ட்ட‌ளை 12.5 ல‌ட்ச‌ம் ரூபாயை கால்ந‌டை குறித்த‌ விழிப்புண‌ர்வை விவ‌சாயிக‌ளிட‌ம் ஏற்ப‌டுத்த‌ பெற்றுள்ள‌தாகத் தெரிகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கால்நடைகளுக்காக கொடுப்பது முறையா?

இதுபோன்ற‌ ந‌டைமுறைச் சிக்க‌ல்க‌ள் ம‌ற்றும் குழ‌ப்ப‌ங்க‌ளை போக்க‌ த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி அமைப்புக‌ள் கீழ்க‌ண்ட‌ யோச‌னைக‌ளை ம‌த்திய‌ அர‌சுக்கு தெரிவித்துள்ளன‌.

1.திட்டக் க‌மிஷனின் பரிந்துரைப்ப‌டி அனைத்து துறைக‌ளும் சிறப்பு உட்கூறுத் திட்டத்தை செய‌ல்ப‌டுத்த‌ வேண்டும்.

2.நிதி அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு, தலித் மற்றும் பழங்குடி இனத் தலைவர்கள் மற்றும் அமைப்ப்புகளிடம் கருத்து கேட்க வேண்டும்.

3.சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் மலைவாழ் மக்கள் சிறப்பு திட்டங்களுக்கு மக்கள் தொகையின் அடிப்படையில் நிதி ஒதுக்குவது குறித்த சட்டம் இயற்றப்பட வேண்டும்.
4.SCP&TSP நிதியை மற்ற துறைகள் எவ்வாறு செலவிடுகிறது என்பதைக் கண்காணித்து மத்திய சமூக பாதுகாப்புத் துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறைகள் ஆண்டுதோறும் அறிக்கையளிக்க வேண்டும்.

5.மத்தியில் மற்றும் மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு அமைச்சகமும்/துறையும் SCP&TSP நிதியை செலவிட தனி குழுவை அமைக்க வேண்டும்.

6.மேலும் மாவட்ட, வட்ட மற்றும் கிராம அளவில் இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்கானிக்க தலித் இயக்கங்கள், மனித உரிமை ஆர்வல‌ர்கள் ஆகியோர் அடங்கிய குழுவை மாவட்ட‌ந்தோறும் அமைக்க வேண்டுமென பல்வேறு த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி அமைப்புக‌ள் ம‌த்திய அர‌சிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள‌ன‌.

இந் நிலையில் நிதியறிக்கைகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவ‌‌தால் இம்மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை என உலகஅளவில் தொண்டாற்றிவரும் ஆக்ஸ்பார்ம்(OXFAM) நிறுவனம் மத்திய அரசிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஆனால் இவற்றைப்பற்றி பாராளுமன்றத்தில் குரலெழுப்ப எந்த தலித் கட்சிகளும் முன்வராதது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது.

தலித் மக்களின் வீட்டில் போய் உணவருந்தும் சில அரசியல்வாதிகள், இம் மக்களுக்கு எங்கள் ஆட்சியில் அதைச்செய்கிறோம், இதைச்செய்கிறோம் என ஓட்டுக்காக வாய் சவடால் விடுவதோடு சரி, தலித் பழங்குடி மக்களின் வாழ்வை உயர்த்த எந்த திட்டத்தையும் செய்யாமல் மழுப்பும் மத்திய மாநில அரசுகளை கண்டிக்க முன்வருவதில்லை. இது போன்ற சாதி இந்துக்களின் வாய்ஜாலத்தை உணர்ந்த பண்டிதர் அயோத்திதாசர் 97 ஆண்டுகளுக்கு முன்பே இப்படிச் சொன்னார் "கொல்லாமல் கொல்லப்பட்டு வரும் இத்தேசத்தின் பூர்வ இந்தியர்களாம் ஆறுகோடி தாழ்த்தப்பட்டோர்களில் முன்னேறியிருப்பது பிரிட்டிஷ் துரைமார்களின் கருணையிலும் மிஷனரி கிருஸ்த்துவ துரைமார்களின் அன்பினாலுமேயன்றி சாதி துவேஷ‌முள்ள சீர்திருத்தக்காரர்களால் அல்ல(தமிழன் 24.12.1913)". பண்டிதரின் இச்சிந்தனை 100 சதவிகிதம் இன்றும் பொருந்தும். சுதந்திர இந்தியாவில் தலித் மக்கள் சுதந்திரமின்றி வாழ்வதற்கு சுதந்திர இந்தியாவை அதிக காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சியே பொறுப்பு. ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல் தேச வளத்தையும், பணத்தையும் எல்லா மக்களுக்கும் பங்கிடாத எந்த நிதி அமைச்சரும் முதலாளிகளின் கைக்கூலிகள் என்பதில் சந்தேகமில்லை. சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் செட்டியார் முதல் பிரணாப் முகர்ஜிவரை எல்லோரும் நிதியறிக்கை என்ற பெயரில் முதலாளிகளுக்கு முழுசாப்பாடும் ஏழைகளுக்கு எச்சிலையுமே போட்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்த உண்மை.
-------------------





Readmore...
Wednesday, March 3, 2010

வாழ்க‌ நித்தியானந்தம்! வ‌ள‌ர்க‌ ஊட‌க‌ அர‌சிய‌ல்!!

1 comments
 
"உலகில் கடவுளேன்னு எதுவுமில்லை, கடவுளைத்தவிர உலகில் வேறொன்றுமே இல்லை" என 2000 ஆண்டுக‌ளுக்கு முன்பே புகழ் பெற்ற புத்த தத்துவ ஞானி நாகர்ஜீனா(சிலர் சமஸ்கிருத அறிஞர் என்றும் கூறுவர்) அவர்கள் சொண்ண‌தாக பன்டித நேரு தன் கண்டுனர்ந்த இந்தியா(Discovery of India) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மனிதன் இயற்க்கையோடு இனைந்து வாழ்ந்த காலத்தில் மதம் தோண்றவில்லை, அவன் நாகரீக முதிற்ச்சி அடைந்த பின்பே மதம் தேவைப்பட்டது, அன்று முதல் இன்றுவரை ஒருசிலர் கடவுளை எதிற்ப்பதும் சிலர் கடவுளை ஆதறிப்பதும் தொடர்கிறது.

சக மனிதனின் மீது நம்பிக்கை குறையும் போதும், தன்னம்பிக்கை துவளும்போதும் நமக்கு கடவுள் தேவைப்படுகிறார், கடவுளின் தேவையும், கடவுள் எதிற்ப்பும் இந்த பூமியில் கடைசி மனிதன் உள்ளவறை தொடறும், மதங்களின் பெயரால் ஏற்பட்ட போர்களும், அவற்றால் ஏற்பட்ட மனித இழப்புகளும் மதங்களுக்கு இருப்பு கொடுத்ததே தவிர மனிதனுக்கு படிப்பு கொடுக்கவில்லை.

இன்னிலையில் இன்றைய நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்திக்கொண்டு மதம் த‌மது வேர்களை மிக ஆழமாக மனிதன் மேல் பதித்துள்ளது, பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் மத்திற்க்கு அடிமை என சொல்லாம், இப்படி வாழ அவன் வெட்கப்படுவதில்லை, ஏனெனில் சுயநலம் நம்மை ஆக்கிற‌மித்துக் கொண்ட போது, நாமக்கு கடவுளைத்தவிர வேறு வழியில்லை, அதனால்தான் இந்த தேசத்தில் பட்டினியால் மக்கள் வாடும்போது திருப்பதி உண்டியல் நிரம்பி வழிகிறது, கொடுப்பதில் உள்ள சுகத்தை உண‌ரா சமூகத்தை ஆண்மீகத்தால் திருத்த முடியாது என்பதையே நித்தியானந்ததின் அந்தரங்க காட்சியும் அதன் எதிர்வினையும் நமக்கு உணர்த்துகிறது.

வாழ்க‌ நித்தியானந்தம்! வ‌ள‌ர்க‌ ஊட‌க‌ அர‌சிய‌ல்!!
Readmore...
Saturday, February 6, 2010

தலித் மக்களின் சமூக பாதுகாப்பும் மத்திய மாநில அரசின் அலட்சியமும்

0 comments
 
 சனி, 06 பெப்ரவரி 2010 ல் வெளிவந்த என்னுடைய இந்த கட்டுரையை கீற்று தளத்தில் கானவும்.

நாடோடிகளாக அலைந்து திரிந்த மனிதன், நிலத்தை தன் கட்டிப்பாட்டிற்குள் கொண்டுவந்த பின்புதான் நிலைத்து வாழவே துவங்கினான். அன்று முதல் இன்று வரை நடந்த அனைத்து மோத‌ல்களும் நிலத்தை மையப்படுத்தியே நடந்துவருகிறது.  நில‌த்தை வெறும் பிழைப்புக்கான‌ வ‌ழி என‌ எண்ணாம‌ல், இந்தியாவில் அவை அதிகார‌த்தின் குறியீடாக மாற்றப்பட்டிருப்பதால் இங்கு நில‌த்தின் அவ‌சிய‌ம் க‌ட்டாய‌மாகிற‌து. இந்தியாவைப் பொருத்தவரை வெள்ளையர்கள் ஆட்சியில் தான் இந்த தேசமே ஒரு வடிவம் பெற்றது, அப்போதும் நிலத்தின் பெரும்பங்கு ஆளும் வர்க்கம் எனப்படும் அரசர், பிரப்புக்கள் ஆகியோரிடம் மட்டுமே இருந்தது.

இந்நிலையில் ஆங்கிலேயேர் ஆட்சியில் பார்ப்பனர்கள் மற்றும் வெள்ளாளர்கள் காணியக்காரர்களாக உயர்ந்தார்கள். பின் படிப்படியாக நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டு சாதி இந்துக்களும் பட்டாதாரர்களாக மாறினார்கள். தொடர் பஞ்சம், உள்நாட்டுக் கலவரம் போன்ற பல்வேறு பாதிப்புகளால் நாடு பலவீனப்பட்டு கிடந்த காலகட்டத்தில் பிழைப்பு நடத்த வழியில்லை என தலித் மக்கள் ஆங்கிலேயர்களிடம் முறையிட பார்ப்ப‌ன‌ ம‌ற்றும் சாதி இந்துக்க‌ளின் ப‌ல‌த்த‌ எதிர்ப்பையும் பொருட்ப‌டுத்தாம‌ல் பஞ்சமி நிலத்தை ஆங்கிலேயர்கள் தலித் மக்களுக்கு வழங்கினார்கள். நீங்க‌ள் கொடுப்ப‌துபோல் கொடுங்க‌ள் நாங்க‌ள் எடுத்துக்கொள்கிறோம் என‌ காத்துக்கிட‌ந்த‌ ஓநாய்க் கூட்டங்கள் அத்த‌னை பஞ்சமி நி ல‌ங்க‌ளையும் அப‌க‌ரித்துக் கொண்ட‌ன. இம் மக்கள் ஊட‌க‌ வ‌லிமைய‌ற்ற‌ ஊமைக‌ள் என்ப‌தால் ஆங்காங்கு நடைபெரும் நில‌ உரிமைப் போராட்ட‌ங்க‌ள் இன்றும் இருட்ட‌டிப்பு செய்ய‌ப்ப‌டுகிற‌து.


சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர்களை கடுமையாக சாடியுள்ளதற்க்குக் காரணம் இதுதான் "கன்னியாகுமரி அருகிலுள்ள ஏழுதேசம் கிராமத்தில் தலித் மக்களுக்கு அரசு அளித்த வீட்டுமனைகளை கோயில் நிலம் என்று சாதி இந்துக்கள் அபகரித்துக் கொண்டார்கள். மேலும் இவர்கள் இந்த நிலத்தை கடந்த 2003ஆம் ஆண்டு பதிவுசெய்ய முயலுகையில் அதை பதிவுத்துறை நிராகரித்தும் விட்டது. இதனையடுத்து அந்த நிலத்தை தலித் மக்களுக்கு வீட்டுமனையாக அளித்த‌ அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆணையை எதிர்த்து, க‌ட‌ந்த‌ ஆறு ஆண்டுக‌ளாக‌ இந்த‌ ம‌னைக‌ளை த‌லித் ம‌க்க‌ள் உரிமைகோர‌க் கூடாதென‌ சாதி இந்துக்க‌ள் உய‌ர்நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்காடி வ‌ருகிறார்க‌ள் (The Hindu, Sep 13, 2009, Page 5), இந்த‌ வ‌ழ‌க்கை விசாரித்த‌ நீதிப‌திக‌ள் உட‌ன‌டியாக‌ இந்த‌ வீட்டும‌னைக‌ளை த‌லித் ம‌க்க‌ளுக்கு கொடுத்திட‌ வேண்டும் என உத்த‌ர‌விட்ட‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல் தாம‌தித்த‌ மாவ‌ட்ட‌ நிர்வாக‌த்தை க‌டிந்து கொண்ட‌து. ஆக‌ எந்த‌ வ‌கையிலும் த‌லித் ம‌க்க‌ளுக்கு பொது சொத்து போய் சேர்ந்துவிட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ த‌மிழ‌க‌ம் முழுக்க‌ சாதிப் பாகுபாட‌ற்று கழகம் மற்றும் க‌ட்சிக‌ள் இணைந்து மிக‌த் தெளிவாக‌ செய‌ல் ப‌ட்டுவ‌ருகின்றன.

அரசாங்கத் திட்டங்கள் தலித் மக்களுக்கு சென்றடையாவண்ணம் எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பதற்கு மற்றும் ஓர் எடுத்துக்காட்டு சிவகங்கை அருகில் வசிக்கும் ராஜி! சிவகங்கை மாவட்டம் கீழவிளங்சம்பட்டியில் வசித்துவரும் ராஜி கடந்த 2008 பிப்ரவரி 10ம் தேதி தன்னுடைய இரண்டு வயது குழந்தைக்கு போலியோ சொட்டுமருந்து போட அழைத்துச் சென்றார். ஆனால் சாதி இந்துக்கள் அதை தடுத்துவிட்டார்கள். காரணம் ராஜி உட்பட ஐந்து தலித் மக்கள் அரசாங்கத்தின் 2 ஏக்கர் நிலம் திட்டத்தின் மூலம் பயனடைந்தார்கள். அவர்கள் பெற்ற அந்த 10 ஏக்கர் நிலத்தையும் கோயிலுக்கு கொடு எனக் சாதி இந்துக்கள் கேட்க, தலித் மக்கள் அதை நிராகரிக்க, அந்த ஐந்து குடும்பத்திற்கும் நீர், நெருப்பு, உப்பு உறவு கூடாது என பஞ்சாயத்தால் தீர்மானிக்கப்பட்டதால் அவர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து நிராகரிக்கப்பட்டது. தேசிய அளவில் செயல்படுத்தப்படும் போலியோ சொட்டுமருந்து திட்டத்தைக்கூட தலித் மக்கள் பயன்படுத்தக் கூடாது என எண்ணும் இத்தகைய கொடியவர்கள் முன் சட்டம் தன் கடமையைச் செய்யுமா?

இது போன்ற எண்ணற்ற வன்செயல் தலித் மக்கள் மீது ஒவ்வொரு நிமிடமும் நிகழ்ந்தவண்ண‌மே உள்ளது. தலித் மக்களை அடிமைப்படுத்த வெட்கப்படாத இவர்களின் கையில் தான் இந்த தேசத்தின் எல்லா பொது வளங்களும் உள்ளன. நீர் நிலைகள், காடு கழனி முதல் சுடுகாடுவரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இச்சாதி இந்துக்கள், ஆங்காங்கே எழும் சில தலித் மக்களின் உரிமைக்குரல்களை அடக்காமல் ஓய்வதில்லை.

இந்த நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் நேர்முக மற்றும் மறைமுக வரிசெலுத்தும்போது, இங்கு எதுவுமெ இலவசம் இல்லை, சொத்துக்கள் யாவுமே அரசாங்கத்திற்கு சொந்தம், அரசாங்கமோ மக்களுக்கு சொந்தம். இதை ஏன் இந்த நாட்டின் சாதி இந்துக்கள் ஏற்க மறுக்கிறார்கள்? சட்ட திட்டங்களால் தீண்டாமையை ஒழித்துவிட முடியாது; மாறாக இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் சமத்துவ சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இன்று நாட்டின் எல்லா மூலையிலும் தீண்டாமை பரவியிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தைப் பொருத்தவரை படித்தவர்களே மிக நுணுக்கமாக தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள்.

 8 சதவிகித வளர்ச்சி, 72 சதவிகித படிப்பறிவு என கூறிக்கொள்ளும் தமிழகத்தில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக அளவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள். அரசு பள்ளியில் படிக்கும் ஜந்தாம் வகுப்பு மாண‌வனுக்கு ஆனா ஆவன்னா கூட கற்றுக் கொடுப்பதில்லை. இவையெல்லாம் நடைமுறை பிழையல்ல. தலித் மக்களின் வளர்ச்சியை முளையிலேயே கிள்ளியெறிய கழகங்கள் நடத்தும் கபட நாடகம்.

விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட இந்த நாட்டில் நிலம் தான் ஒரு மனிதனின் வாழ்வாதாரம்; கல்வியால் மட்டுமே கரைசேர்ந்துவிட முடியாது என ஆங்கிலேயர்கள் உண‌ர்ந்ததால்தான் பஞ்சமி நிலம் தலித் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அண்டை மாநிலங்களான மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் நிலச் சீர்திருத்தம் செவ்வனே நிகழ்ந்தபோது, தமிழகத்தில் மட்டும் ஏன் நிலச் சீர்திருத்தம் நடைபெறவில்லை?

க‌ருணாநிதி ஆட்சிக்கு வ‌ந்த‌தும் நில‌மில்லா ம‌க்க‌ளுக்கு 2 ஏக்க‌ர் நில‌ம் த‌ருவ‌தாக‌ சொன்னார். பின் புற‌ம்போக்கு நில‌ங்க‌ளை யார் ப‌யிர் செய்கிறார்க‌ளோ அவ‌ர்க‌ளுக்கு ப‌ட்டா வழ‌ங்கப்ப‌டும் என்றார். அதாவ‌து திருட‌ன் கையில் சாவியைக் கொடுக்கும் இந்த‌ முறையில் உண்மையில் ப‌ய‌ன‌டைவ‌து பிற்படுத்த‌ப்ப‌ட்டோரும் முற்ப‌டுத்த‌ப்ப‌ட்டோரும் தான். நில‌ங்க‌ளை தலித் ம‌க்க‌ளுக்கு ப‌கிர்ந்த‌ளிக்க‌ வேண்டிய‌ அர‌சு, திட்ட‌மிட்டு பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட ம‌ற்றும் முற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு கொடுப்ப‌து ஒரு க‌ண்ணில் வெண்ணையும் ம‌றுக‌ண்ணில் சுண்ணாம்பும் வைப்ப‌த‌ற்கு ச‌ம‌மான‌த‌ல்ல‌வா?

சுதந்திர இந்தியாவில் 60 சதவிகித மக்கள் தங்களின் அன்றாட உணவிற்கே நிலச்சுவான்தார்களிடம் இன்னும் கையேந்தும் நிலை தொடர்கிறது. இதை மாற்ற இம் மக்களின் வாழ்வை உயர்த்த மத்திய மாநில அரசுகள் இதுநாள்வரை எந்தத் திட்டத்தையும் முறையாக நடைமுறைப்படுத்தாமல், இம் மக்களை வெறும் வாக்கு வங்கிகளாக வெட்கமே இல்லாமல் பயன்படுத்திவருவது உலகில் எங்குமே நிகழாத மாபெரும் மனித உரிமை மீறல்.

தமிழ்நாடு எஸ்டேட் சட்டம் 1948, தமிழ்நாடு நிலக் குத்தகை சட்டம் 1956, தமிழ்நாடு நிலச் சீர்திருத்த சட்டம் 1961 என சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் எத்தனையோ நிலச் சீர்திருத்த சட்டங்கள் இயற்றப்பட்டது. ஆனால் இவற்றினால் நிலம் அதிகம் வைத்திருப்போர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் நிலமீட்பு போராட்டங்களை முன்னெடுக்காத தலித் இயக்கங்கள் ஏதோ கடமைக்கு சில போராட்டங்கள் செய்வதுதான் மன்னிக்க முடியாத துரோகம். இந்தியாவைப் பொருத்தமட்டில் நிலம் தான் ஜீவாதாரம்; நிலமில்லையேல் ஏது வாழ்வாதாரம்!

உலகில் நிறம், இனம் மற்றும் சாதியப் பிரிவினையால் பாதிக்கப்படும் 200 மில்லியன் மக்களில் 160 மில்லியன் மக்கள் இந்திய தலித் மக்கள் என ஜக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை கவுன்சில் (UNHRC) கூறுகிறது. அதும‌ட்டுமல்லாமல் இந்தியாவில் 40 மில்லியன் தலித் மக்கள் கொத்தடிமையாக இருக்கிறார்கள் எனவும் ஜநா தெரிவிக்கின்றது.

தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான தேசிய கமிஷனின் புள்ளிவிபரப்படி ஜீலை 2004 முதல் ஆகஸ்ட்டு 2006 வரை சுமார் 2389 கொலை, 4814 கற்பழிப்பு என மொத்தம் 99746 வழக்குகள் தலித் மக்கள் மீது திணிக்கப்படும் வன்முறைக்கெதிராக இந்த நாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 1999 ம் ஆண்டை தமிழக அரசு தீண்டாமைக்கு எதிரான ஆண்டு என அறிவித்ததோடு சரி, தீண்டாமையைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை 19.18 சத‌விகித தலித் மக்களின் நிலப்பங்கீடு வெறும் 7.1 சதவிகிதம் மட்டுமே. ஆகையால் 2002 போபால் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள 21 தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முன் வரவேண்டும். அதுமட்டுமல்லாமல் நிலப்பங்கீடு, தனியார் துறை இடஒதுக்கீடு, பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வி, குறைந்தது 600 சதுர அடி குடியிருக்க வீடு, மூத்த தலித் மக்களுக்கு ரூ1000 மாத உதவித்தொகை, தலித் பெண் குழந்தைகளுக்கு சிற‌ப்பு உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு, வேலையில்லா தலித் பட்டதாரிகளுக்கு மாதம் 1000 உதவித்தொகை, தலித் தொழில் தொடங்க வட்டியில்லா வங்கிக் கடன் மற்றும் மானியம், காலனி தோறும் இணையத்தொடர்புடன் கூடிய கணினி வசதி, படிப்பகம், சுயவுதவிக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் நிதியுதவி, தலித் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு, மிகவும் பின்தங்கிய தலித் குடும்பங்களுக்கு கரவல்மாடு, சாதிய வன்முறையால் பாதிப்படைந்த குடும்பத்திற்கு 5 லட்சமும் உயிரிழந்த குடும்பத்திற்கு 10 லட்சமும் அரசு உடனடியாக வழங்கவேண்டும். தனியார் கலை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் தலித் மாணவர்களின் படிப்புச்செலவை அரசே ஏற்றுகொள்ளுதல் என எல்லா வகையிலும் இம் மக்களின் சமூகப் பாதுகாப்பை அரசு இனியாவது நிறைவேற்ற முன்வரவேண்டும், இல்லையேல் எதிர்வரும் காலங்களில் இந்தியாவின் சனநாயக முகம் கிழிபட்டு, வளமான பாரதம் கானல்நீராகவே தொடரும்.

நன்றி!
Readmore...
Sunday, January 31, 2010

கோவையில் தீண்டாமைக்கு துணைபோன பெரியாரும், பிள்ளையாரும்

0 comments
 










நாகரிக வாழ்விற்கு நான்கு சுவர்கள் அவசியம், ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களை பிரித்து வைப்பதற்க்கு தீண்டாமை சுவர்கள்கள் அவசியமா?

உத்திரபுரத்தை அடுத்து தற்போது கோவையிலும் தீண்டாமை சுவர் எழுப்பி தலித் மக்களை நடமாட விடாமல் கடந்த 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள‌தை தற்போது தற்காலிகமாக உடைத்தெறிந்திருக்கிறது அரசு.

கோவை 10வது வார்டில் உள்ள பெரியார் நகரில் 58 தலித் குடும்பங்கள் வசிக்கின்றன, இவர்கள் கலணிக்கு அடுத்துள்ள பிரதான காமராஜர் சாலைக்கு செல்ல முடியாவன்னம், காலணியையும் காமராஜர் சாலையும் இனைக்கும் ஜீவா சாலையின் குறுக்கே 30 அடி நீலத்தில் சாதி இந்துக்களால் 1990ல் கட்டப்பட்டதுதான் இந்த பெரியார் நகர் தீண்டாமை சுவர்.

பெரியார் நகரில் வசிக்கும் தலித் குடும்பங்ககுக்கு 1989ல் அரசு வீட்டுமனை கொடுத்தது, இன் நகர் துவங்கும் இடத்தில் பெரும்பாலும் சாதி இந்துக்கள்தான் வசித்துவருகிறார்கள், ஆகையால் 1990ல் காலணி துவங்கும் இடத்தை மறைக்கும் விதமாக ஜீவா சாலையின் குறுக்கே ஓர் வினாயகர் சிலையை வைத்து சிறிய குடிசை எழுப்பினார்கள், பின் அதன் பின்புறம் 30 அடி நீலத்திற்க்கு சுவர் எழுப்பிவிட்டார்கள், ஆக சாதி இந்துக்கள் தெருவில் இருந்து பார்த்தால் காலணி தெரியது, அதே வேலையில் காலணி மக்களும் ஜீவா சாலையை கடந்து காமராஜர் சாலையை அடைய முடியாது, என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவிற்கினங்க, மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு அத்துமீரலை உறுதிசெய்தபின், தீண்டாமை தடுப்பு சுவரை பெக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்க முற்படும் போது அப்பகுதி ஆதிக்க சாதி பெண்கள் தீண்டாமை தடுப்பு சுவரை இடிக்க விடாமல் தடுக்க முயற்சித்ததால் பலத்த காவல் பாதுகாப்போடு அச் சுவர் தற்காலிகமாக இடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்லாது இந்த தேசம் முழுக்க இது போண்ற எண்ணற்ற தீண்டாமை தடுப்பு சுவர்கள் தலித் மக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒடுக்கிகொண்டிறுப்பது காலம் காலமாக நடந்துவரும் தொல்குடி மக்களுக்கு எதிரான நிகழ்வுதான்.

உத்திரபுரத்தில் கட்டப்பட்ட தீண்டாமை தடுப்பு சுவருக்கும், கோவை பெரியார் நகரிலுள்ள தீண்டாமை தடுப்பு சுவருக்கும் பெரிய வித்தியாசமில்லை, இரண்டின் நோக்கமும் தலித் மக்களை தங்களுடைய வசிப்பிடத்திலிருந்து பிரிக்கவேண்டும், மேலும் அவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்த வேண்டும் என்ற மிக கீழ்தரமான, கேவலமான எண்ண‌த்தோடு எழுப்பப்பட்டதே தவிர வேறோன்றும் காரண‌மில்லை.

ஓர் மாந‌கரிலேயே இப்படி தீண்டாமை தடுப்பு சுவரை எழுப்பி தங்களுடைய ஆதிக்கத்தை சாதி இந்துக்களால் நிலை நாட்ட முடிகிறதென்றால் உத்திரபுரத்தின் ஏன் நிகழாது? வெரும் தீண்டாமை தடுப்பு சுவர் மட்டும் கட்டினால் பிறச்சனை ஏற்படும் என்பதற்க்காக, மிக நூதனமாக காலணி துவங்கும் ஜீவா சாலையின் குறுகே ஓர் பிள்ளையார் கோயில் கட்டி அதன் பின் புறம் தீண்டாமை தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது, இப்படி மிக திறமையாக தீண்டாமையை கடைபிடிக்கும் இவர்களுக்கு ஏன் ஜனாதிபதி விருது வழங்கி கெளரவிக்க கூடாது?

நாட்டில் மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் ஆதிக்க சாதி மக்கள் ஏழைமக்களை மீன்டும் மீன்டும் சுரன்டி கொழுத்து வருகிறார்கள் என்பதற்கு மேற் கண்ட இரண்டு தீண்டாமை தடுப்பு சுவர்களும் சாட்சி.

மனுதர்மத்தால் பெரும்பான்மையான் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்க்காகவே, பெரியார் கடவுள் எதிப்பு இயக்கம் நடத்தினார், ஆனால் அவரின் பெயரில் நகர் அமைத்து, அவர் உடைத்தெரிந்த அதே வினாயகர் சிலையை வைத்தே மனுதர்மத்தை நிலைநாட்டும் இவர்களுக்காகத்தான் பெரியார் கடவுள் எதிப்பு இயக்கத்தையே நடத்தினார் என்பதை இவர்கள் அறிய முற்படதது மிக துரதிஷ்ட்டவசமானது.

ஓர் மனிதனின் சுதந்திரத்தைப் பரிக்கும் யாருக்கும் சுதந்திரத்தைப் பற்றி பேச உரிமையேயில்லை, ஆதிக்க சாதிகள் பார்பனனிடமிருந்து விடுபட்டது போல், இன்று தலித் மக்கள் ஆதிக்க சாதிகளிடமிருந்து விடுபட முயற்சிக்கும் போது எண்ண‌ற்ற தீன்டாமை சுவர்கள் எழப்பப்படுவது வளர்சிக்கு வழிவகுக்காது. நிலங்களையும், வளங்களையும் பகிர்ந்தலிக்காமல் கழகங்கள் மிக கவனமாக, திட்டமிட்டே தலித் மக்களை ஒடுக்கிவருவது இந்த மண்ணின் பெருமையை குலைக்கும் முயற்சி.

இதுபோண்ற கழகங்களின் மலட்டு தத்துவங்களால் கைகள் கட்டப்பட்ட சில தமிழக தலித் மக்கள்/தலைவர்களால் தான் இந்த மண்ணில் இன்னும் தீண்டாமை தடுப்பு சுவர் நிலைத்து நிற்கிறது, இல்லையேல் என்றாவது ஒருநாள் பெர்லின் சுவர்போல் இடித்து நோறுக்கப்படுவது தீண்டாமை தடுப்பு சுவர் மட்டுமல்ல சாதி இந்துக்களின் ஆதிக்க மனப்பான்மையும்தான்.

News source: http://www.hindu.com/2010/01/31/stories/2010013157880100.htm
Readmore...
Tuesday, January 19, 2010

தமிழ் நாட்டில் த‌ர‌மிழ‌க்கும் 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்

0 comments
 

ஓரு நாட்டின் வளம் அந்த நாட்டின் மனித வளத்தை வைத்தே கனிக்கப்படுகிறது, இப்படிபட்ட சூழலில் நம்முடைய தாய்நாட்டின் கல்வியை பற்றிய கவலை/கவனம் நம் எல்லோருக்கும் உண்டு, நாட்டின் தற்போதைய கல்வி தரம் சொல்லிக் கொள்ளும் அளவிலில்லை, மத்திய அரசின் உலகமையம்,தாராலமயம், தனியார்மயத்தில் கல்விகூடங்களுக்கும் விலக்கிலை.


அரசாங்கத்திடம் இருந்து கல்வித்துறை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் வசம் செல்வதை இன்று நாம் கண்கூடாக காண‌முடிகிறது, கோத்தாரி கமிஷன் பறிந்துரைப்படி மொத்த வருவாயில் 6 சதம் கல்விக்காக ஒதுக்க வேண்டும், அனைவருக்கும் கட்டாய பள்ளி கல்வி அளித்திட வேண்டும் என்ற எந்த கோறிக்கைக்கும் மத்திய அரசு செவிசாய்க்காமல், மன்(ண்) மோகன் ஒபாமாவின் பின்னாலேயே அலைந்துகொன்டிருக்கிறார்.


தமிழக அரசைப் பொருத்த‌வரை, கலைஞர் ஒரு கில்லாடி, எதையும் ஆய்ந்து அறிவியல் பூர்வமாக? செய்வதில் அவருக்கு நிகர் அவரே! ஆம் இங்கு ஓட்டலில் மட்டன் சாப்பிடுவதைபோல காசுக்கு பட்டம் வாங்கலாம், இதை நான் சொல்லவிலை இந்த கேவலமான நிலையைக் கண்டு, மத்திய அரசு கடந்த ஜனவரி 18ல் உச்ச நீதிமன்றத்திற்கு ஓர் அரிக்கை சமர்பித்தது, அதில் இந்தியாவில் உள்ள 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அந்தஸ்த்தை விலக்கிகொல்வதாக கூறியுள்ளது, இதில் தமிழகத்தை சேர்ந்த கீ.வீரமனியின் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் என 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அபேஸ் ஆகின்றன.


இந்தியாவிலெயே அதிக‌ எண்ணிக்கையில் த‌ர‌மிழ‌க்கும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் த‌மிழ‌க‌த்தில் தான் அதிக‌ம், அத‌னால்தான் எண்ணவோ இங்கு இர‌ண்டு க‌ல்வி அமைச்ச‌ர்க‌ளைப் போட்டு யாவார‌த்தை ரொம்ப‌ நுனுக்க‌மாக‌ ந‌ட‌த்துகிறார்க‌ளோ?


த‌ர‌மிழ‌க்கும் 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் பட்டியல்:

Christ College, Bangalore Vignan's Foundation for Science, Technology and Research, Guntur, Andhra Pradesh Lingaya's University, Faridabad St Peter's Institute of Higher Education and Research, Chennai Noorul Islam Centre for Higher Education, Kanyakumari Jaypee Institute of Information Technology, Noida Shobhit Institute of Engineering and Technology, Meerut Sumandeep Vidyapeet, Vadodara, Gujarat Sri Devraj Urs Academy of Higher Education and Reserch, Kolar, Karnataka Yenepoya University, Mangalore BLDE University, Bijapur, Karnataka Krishna Institute of Medical Sciences, Satara, Maharashtra D Y Patil Medical College, Kolhapur, Maharashtra Meenakshi Academy of Higher Education and Research, Chennai Chettinad Academy of Research and Education, Kanchipuram HIHT University, Dehradun Santosh University, Ghaziabad Maharshi Markandeshwar University, Ambala, Haryana Manav Rachna International University, Faridabad Sri Siddhartha Academy of Higher Education, Tumkur, Karnataka Jain University, Bangalore Tilak Maharashtra Vidyapeeth, Pune Siksha "O" Anusandha, Bhubaneswar Janardan Rai Nagar, Udaipur, Rajasthan Institute of Advanced Studies in Education of Gandhi Vidya Mandir, Sardarshahr, Rajasthan Mody Institute of Technology, Sikar, Rajasthan Dr MGR Educational and Research Institute, Chennai Saveetha Institute of Medical and Technical Sciences, Chennai Kalasalingam Academy of Research and Education, Virdhunagar, Tamil Nadu Periryar Maniammai Institute of Science and Technology, Thanjavur Academy of Maritime Education and Training, Chennai Vel's Institute of Science, Technology and Advanced Studies, Chennai Karpagam Academy of Higher Education, Coimbatore Vel Tech Rangaraja Dr Sagunthal R&D Institute of Science, Chennai Gurukul Kangri, Haridwar Grapich Era University, Dehradun Nehru Gram Bharati Vishwavidyalaya, Allahabad Sri Balaji Vidyapeeth, Puducherry Vinayaka Mission's Research Foundation, Salem, Tamil Nadu Bharath Institute of Higher Education And Research, Chennai Ponnaiya Ramajayam Institute of Science and Technology, Thanjavur, Tamil Nadu Nava Nalanda Mahavira, Nalanda, Bihar Rajiv Gandhi National Institute of Youth Development, Sriperumbudur, Tamil Nadu National Museum, Institute of the History of Art Conservation and Musicology, Janpath, New Delhi


Readmore...
Wednesday, January 13, 2010

இந்தியன் ஹாக்கி‍‍‍ ‍: கலையும் கணவுகள்

1 comments
 

இந்திய தேசிய விளையாட்டு என்று போற்றப்படும் ஹாக்கி, முன் ஒருகாலத்தில் உலகையே உலுக்கியெடுத்தது, 1928இல் நெதெர்லெந்தில் தொடங்கி 1956 மெல்பர்ன்(ஆஸ்த்திரேலியா) ஒலிம்பிக் வரை இந்திய அணி தொடர்ந்து ஆறு முறை தங்கம் வென்று சாதனைப்படைத்தது, அதன் பிறகு ஜப்பான் மற்றும் இரஷ்யாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் தங்கம், என மொத்தம் 8 ஒலிம்பிக் தங்கம்,ஒரு உலக கோப்பையில் தங்கம், ஆசியா போட்டிகளில் 4 தங்கம் என 13 தங்கம் மேலும் எண்ண‌ற்ற வெள்ளி, வெங்கலம் என கலக்கிகொண்டிருந்த இந்த அணிமீது யார் கண்பட்டதோ, இன்று இது ஆசியா கோப்பைக்குகூட தகுதி பெறமுடியாமல் போனது.

ஒரே ஒரு முறை மட்டுமே உலககோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த மரியாதை, பொண், பொருளில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட ஹாக்கி வீரர்களுக்கு கிடைக்க வில்லை என தெறிந்தும், அரசால் திட்டமிடப்பட்டே இந்த விளையாட்டை இந்தியாவில் பொலிவிழக்க செய்துவிட்டனர்.

இந்திய ஹாக்கி வீரர்கள் சில ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்க்காக இன்று பயிற்சியை புறக்கனித்து தங்களுடைய எதிற்ப்பை தெறிவித்தும் கூட ஆளும் தர‌ப்பு அதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை என்பது இந்த தேச விளையாட்டை மட்டுமல்ல இந்த தேசத்தையே அவமானப்படுத்துவாதாகத்தான் அர்த்தம்.

தென்டுல்கர் மற்றும் தன்ராஜ் பிள்ளையும் ஒரே ஆண்டில் அவரவர் விளையாட்டுக்கு நுழைந்தார்கள், ஆனால் தென்டுல்கரின் நிலை யென்ன, பிள்ளையின் நிலை என்ன? தன்ராஜ் பிள்ளை என்ற‌ அந்த வீரன் நான்கு பாக்கிஸ்தான் ஹாக்கி வீரனுக்கு சமம் என வர்னிக்கப்பட்டவரின் திறமையை இந்த ஹாக்கி போர்ட் சரியாக பயன்படுத்தியாதா?


ஹாக்கி தெரியாதவர்னெல்லாம் ஹாக்கி போர்டில் இருந்துகொன்டு அரசியல் செய்துகொண்டிருகிறார்கள், இந்திய ஹாக்கி இந்த 2010 லாவது சீர் பெற்று, வெற்றி வாகை சூடவில்லையேல், ஹாக்கி என்ற விளையாட்டையே மக்கள் மறந்துவிட வேண்டியதுதான்.
Readmore...