ஒரே உலகம்! ஒரே கனவு!!
தலித் அடிமைகள்... தலையிடாத அரசு!
இது கதையல்ல; நிஜம்! சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியத்துக்குள் வரும் கருங்கல்லூர் என்ற கிராமத்தில்தான் இந்தக் கொடுமை நடந்திருக்கிறது.ஏன் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற விடாமல், பையனைத் தடுத்தனர்? ஏனென்றால், அவன் ஒரு தலித்! கீழ்சாதிக்காரன் தொட்டால் தீட்டு என்று அவனைத் தடுத்து விட்டார்களாம்!
மனதை சில்லிட வைக்கும் இந்த சம்பவத்தை நம்மிடம் சொன்னவர், இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மேட்டூர் மற்றும் கொளத்தூர் ஒன்றியச் செயலாளரு மான மேவை.சண்முகராஜா. அவரைச் சந்தித்தோம்.
''தீண்டாமைங்குறதே இல்லைனு எல்லா அரசாங்கமும் சொல்றது எந்த அளவுக்கு உண்மைங்கறத பாக்குறதுக்காக இந்த சர்வேயை எடுத்தோம். ஒரு குழுவுக்கு ஆறு பேருன்னு மொத்தம் இருபத்தஞ்சி குழுக்களா சர்வே டீமை பிரிச்சோம். இந்தக் குழுவுல அரசு ஊழியர்கள், வக்கீல்கள், பட்டதாரி இளைஞர்கள்னு எல்லோரையும் கொண்டு வந்தோம். 35 கேள்விகள் கொண்ட கேள்வித்தாளை ரெடி பண்ணி, கொளத்தூர் ஒன்றியத்துல இருக்கிற 54 தலித் கிராமங்களுக்கு அவங்க போனாங்க. அதுல பத்தாயிரம் பேரை சந்திச்சாங்க.
பெரியதண்டா, நீதிபுரம், ஊர்நத்தம், ஒட்டன்காடு, கோவிந்தபாடி, சி.எஸ்.புரம் ஆகிய ஊர்களில் தலித் மக்களுக்கு சலூன் கடையில முடி வெட்டுறது இல்ல. என்ன காரணம்னு விசாரிச்சா தலித் மக்கள் உட்கார்ந்து முடி வெட்டிக்கிட்டுப் போனா அந்த நாற்காலியில மத்த சாதிக்காரங்க உட்கார மாட்டாங்களாம். அதனால இன்னைக்கு வரைக்குமே அந்தக் கட்டுப்பாடு இருந்துகிட்டேதான் இருக்கு. பா.ம.க. மாநிலத் தலைவரான ஜி.கே.மணியோட சொந்த ஊரான கோவிந்தபாடியிலும் இதே கொடுமைதான்.
இந்த ஒன்றியத்துல மொத்தம் 127 டீக்கடைகள் இருக்கு. அதுல 32 டீக்கடையில இன்னும் இரட்டை டம்ளர் முறை இருக்கு. சத்யா நகர் ஏரியாவுல ஹோட்டல்களில் தலித்கள் இன்னமும் கீழேதான் உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்காங்க. இந்திரா நகர்ல உள்ள கடைகளில் கொட்டாங்குச்சியிலதான் அவங்களுக்கு டீ கொடுக்கிறாங்க.
ஊர்நத்தம்ங்குற கிராமத்துல வெளியூரைச் சேர்ந்த தலித் ஒருத்தரு தெரியாம அந்த ஊருல இருக்கிற பிள்ளையாருக்குத் தண்ணி ஊத்திட்டு சாமிக் கும்பிட்டிருக்காரு. இந்த விஷயம் தெரிஞ்சி, பஞ்சாயத்தைக் கூட்டி அவருக்கு நூறு ரூவா குத்தம் போட்டிருக்காங்க. ஏரிக்காடுங்குற கிராமத்துல மீனாங்குற பொண்ணு பொது பைப்ல தண்ணிப்பிடிக்க போயிருக்கு. அப்போ பைப்ல வச்சிருந்த குடத்துல தண்ணி ரொம்பி கீழே போயிட்டு இருந்திருக்கு. அந்தக் குடத்தை நகர்த்தி வச்சிட்டு, இந்தப் பொண்ணு தண்ணி பிடிச்சிருக்கு. மேல் சாதிக்காரங்க குடத்தை கீழ் சாதிக்காரப் பொண்ணு எப்படி தொடலாம்னு அந்தக் குடத்தைப் போட்டு உடைச்சி தீ வச்சதோடு இல்லாம, குடத்தைத் தொட்ட மீனாவுக்கு நூறு ரூவா தண்டமும் விதிச்சிருக்காங்க!
இருபது கோயில்கள்ல தலித் மக்களை இப்பவும் உள்ளே விடுறது இல்ல. தலித் பையன்கூட வேற சாதி பொண்ணு லவ் பண்ணி ஓடி போயிடுச்சின்னு அந்தப் பொண்ணைப் பிடிச்சிக் கொண்டுவந்து, பொண்ணோட நாக்குல பிளஸ் குறி போல சூடு போட்டுத் தீட்டுக் கழிச்சிருக்காங்க. இது இன்னைக்கு வரைக்கும் வழக்கத்துல இருந்துகிட்டுதான் இருக்கு. தலித் மக்களைப் பண்ணை அடிமைகளாக வச்சிக்கிட்டு வேலை வாங்கிட்டு இருக்கிற பழக்கம் பல கிராமங்கள்ல இன்னும் இருக்கு. அவுங்களுக்கு வருசத்துக்கே சம்பளமா நாலாயிரம்தான் கொடுக்கிறாங்க. ஒரு நாள் வேலைக்கு லீவு போட்டா சம்பளத்துல நூறு ரூவா புடிச்சிக்குவாங்க. நாங்க இப்படி ஒரு சர்வே எடுக்கிற விஷயம் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிஞ்சி போச்சி. உடனே ஒவ்வொரு கிராமத்துக்கா அதிகாரிகள் போய் எதையும் வெளியே சொல்லக்கூடாதுன்னு மிரட்டிட்டும் வந்திருக்காங்க.
தீண்டாமை இல்லைனு சொல்ற அதிகாரி யாரா இருந்தாலும் என்கூட நேரா வரச் சொல்லுங்க. நானே ஸ்பாட்டுக்குக் கூட் டிட்டுப் போறேன். இந்த சர்வேயோட மொத்த ரிப்போர்ட் டையும் தொகுத்து மாவட்ட ஆட்சியர் கிட்ட கொடுக்கப் போறோம். அவரு நடவடிக்கை எடுக்கலன்னா, அதுக்கு மேலதான் எங்க கச்சேரியே இருக்கு. நாங்க சொல்ற கிராமங்களில் உள்ள தலித் மக்கள் மீது நடக்கும் தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கிற வரைக்கும் எங்க போராட்டம் தொடர்ந்துகிட்டுதான் இருக்கும்.
கொளத்தூர் ஒன்றியத்துல தொடங்கி இருக்கும் இந்த சர்வேயை, அடுத்த கட்டமா சேலம் மாவட்டம் முழுக்க பண்ண போறோம். எந்த ஊருல நாங்க சர்வே பண்ண போறோம்னு முன்கூட்டியே தெரிஞ்சிட்டா அதிகாரிகளும், மத்த சாதிக்காரங்களும் போய் தலித்களை மிரட்டி வச்சிடுறாங்க. அதனால நாங்க எங்கே சர்வே எடுக்கிறோம், எப்படி எடுக்கிறோம்ங்குறதை ரொம்பவும் ரகசியமா வச்சிக்குவோம்'' என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து முடித்தார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி இந்தக் கொடுமைகளை வெளியே சொல்லவும் திட்டமிட்டிருக்கிறார்கள், இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியினர்.சேலம் மாவட்ட கலெக்டர் மதிவாணனிடம் இது தொடர்பாகப் பேசினோம். நாம் சொன்ன விஷயங் களைக் கேட்டுத் திடுக்கிட்டவர், ''கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்னும் எனக்கு எந்த விவரமும் சொல்லலை. அப்படி அவுங்க ரிப்போர்ட் கொடுத்ததும் உடனடியா அவுங்க சொல்ற இடங்களுக்கெல்லாம் அதிகாரி களை அனுப்பி, விசாரிக்கச் சொல்றேன். தீண்டாமைக் கொடுமை இருந்தா கண்டிப்பா நடவடிக்கை எடுக்கப்படும். அதுல எந்த சந்தேகமும் வேண்டாம்'' என்றார்.எத்தனை மகாத்மாக்கள் வந்தாலும் தீண்டாமைக்கு மட்டும் மரணமே இல்லை போலிருக்கிறது!
நன்றி:கே.ராஜாதிருவேங்கடம், ஜூ.வி - Issue Date: 08-04-07
இரண்டு எதிரிகள்! - அம்பேத்கர்
நண்பர்களே! தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான் பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது. இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். சமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில் நாம் தீவிரமாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. நமது மனிதமே நசுங்குமளவுக்குப் பெரும் சுமைகளை சுமந்தோம் என்னும் குறைபாடு, நமக்கு இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நமது போராட்டத்தால் எந்தப் பயனும் விளையவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. அதே நோக்கில் தீண்டாமையை ஒழிப்பதில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதும் உண்மையில்லை.
மனிதர்களுக்குத் தேவையான சில அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் நாம் இன்னும் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். அரசியல் அதிகாரத்தைப் போராட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறோம் என்பதும் உண்மை. அதிகாரம் இருக்குமானால், விடுதலையும் இருக்கும் என்னும் கூற்றில் உண்மை இருக்கிறது. அதிகாரம் ஒன்றின் மூலம் மட்டுமே விடுதலை பெற முடியும். தடைகளைக் கடந்து தளையிலிருந்து விடுபட முடியும். அரசியல் அதிகாரம் அத்தகைய வீரியம் கொண்டது. மத, பொருளாதார அதிகாரத்தைப் போல் அத்தனை வலிமை அரசியல் அதிகாரத்திற்கு இல்லையென்றாலும், அரசியல் அதிகாரமும் உண்மையில் பலன் தரக் கூடியதாகும்.
புதிய அரசமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வென்றெடுத்த அரசியல் அதிகாரம், சிலரால் பறிக்கப்படுவதும் உண்டு, வீணாகப் போவதும் உண்டு. இதற்கு பøகவர்களின் சூழ்ச்சி, நம்முடன் உள்ள சில தான்தோன்றிகளின், சுயநலப் பேராசைக்காரர்களின் சீர்குலைப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணம். பின்னணியில் ஓர் அமைப்பு இல்லாத அதிகாரமும், பின்னணியில் ஓர் மனசாட்சியில்லாத அதிகாரமும் அதிகாரமே அல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அமைப்பு ரீதியாகத் திரளும் நாள், தங்கள் அதிகாரத்தை உணரும் நாள், அதை அறிவார்ந்த முறையிலும் திறன் வாய்ந்த முறையிலும் பயன்படுத்தி, சமூக விடுதலையை வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!
நம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக இல்லை. சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப் பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த நீண்ட காலமாக நாம் தவறி விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே, தீண்டத்தகாதோர் என்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் என்னும் அடிப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நாம் இன்று திரண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு புதிய திருப்பம். ஆனால், சிலர் இந்தத் திருப்பத்திற்கு ஒரு தீய உள்ளர்த்தம் கற்பிக்கிறார்கள். இதில் நான் பங்கேற்பதற்காக என் மீது எதிர்மறை விமர்சனம் செய்தார்கள். தொழிலாளர் தலைவர்கள் அல்லாமல் வேறு இடத்தில் இருந்து இந்த விமர்சனம் வந்திருந்தால், நான் அதை லட்சியம் செய்திருக்க மாட்டேன். இத்தகைய மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் நாம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகிறோம் என்று தொழிலாளர் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.என்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும் போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம். தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால், இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம் சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம், உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று சொல்லவில்லை. அந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிற வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம் பார்க்கிறது.(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175)
உள் ஒதுக்கீடு ஒரு பார்வை
ஆண்டான்டுகாலமாய் அடிமைப்படித்தப்பட்ட மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்தும் நோக்கோடு சுதந்திர இந்தியாவில் இடஒதுக்கீட்டை டாக்டர் அம்பேட்கள் அவர்கள் அரும்பாடுபட்டு கொண்டுவந்தார். இதனை பொருக்கமுடியாத மேல்தட்டுக் கூட்டங்கள் பல்வேறு வகையிலும் இடையூறு செய்துவறுகிறது என்பது நாம் அறிந்ததே, கல்வில் அதிக மதிப்பென் பெற்ற தாழ்த்தப்பட்ட சமுக மணவனையும் இடஒதுக்கீட்டில் சேர்த்து அந்த இடத்தில் ஒரு சாதி இந்துவை தினிப்பதே அதிகார வர்கத்தின் வாடிக்கை, இதை கேட்க படித்த, இடஒதுக்கீட்டினால் அரசுபணியிலமர்ந்த பெரும்பான்மையான தலித்துக்கள் கண்டுகொள்வதில்லை, ஏனென்றால் தங்களுடைய வேலை போய்விடும் என்ற ஒன்றை வார்த்தையைத் தவிர வேறொறையும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இது இப்படி இருக்க ஆளும் கூட்டங்கள் இந்த இடஒதுக்கீட்டு அமைப்பையே தகர்த்துவிடும் பணியை நம் கண்முன்னறே செய்து வருகின்றார்கள், இவர்கள் தற்போது எடுத்திருக்கும் ஆயுதம் "உள் ஒதுக்கீடு" என்பதாகும். இந்த உள் ஒதுக்கீடுட்டை பற்றி கவனமாக நாம் பார்ப்பது மிக அவசியம்.
இந்த உள் ஒதுக்கீட்டை முதலில் சட்டமாக கொண்டுவந்ததே ஆந்திரபிரதேச அரசுதான், இம் மாநிலத்தில் உள்ள தலித் மக்களை எ,பி,சி மற்றும் டி என நான்கு குழுவாக பிரித்து, கல்வி மற்றும் அரசு வேலைகளில் இந்த உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஓர் குழு அமைத்து, அதன் பரிந்துரையின் அடிப்படையில் உள் ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்த சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி.திரு.என்.சந்தோஷ் ஹேக்டே தலமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு நவம்பர் 5,2004ம் ஆண்டு தனது தீர்ப்பை வழங்கியது. அதில் "வகைப்பாட்டு பட்டியலில் உள்ள மக்களை ஒரே குழுவாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, இக் குழுவை இரண்டு அல்லது இரண்டிற்க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிக்க கூடாது" என தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறார்கள். மேலும் இச் சட்டத்தை கொண்டுவந்த ஆந்திரபிரதேச அரசை எச்சரித்ததுடன் "இதுபோண்ற செயல் சட்டத்திற்க்கு முன் அனைவரும் சமம் என்ற இந்திய குடியுரிமைச் சட்டம் ஆர்டிகிள் _14 லை (Equality before law -Article 14) மீறும் செயல்" என ஆந்திரபிரதேச அரசை மிகக் கடுமையாக சாடியுள்ளத்து குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாதா தமிழக அரசு,ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதையாக, உள் ஒதுக்கீடு என்ற போர்வையில் தலித் மக்களுக்குள் வன்முறையை தூண்டும் வகையில் இந்த உள் ஒதுக்கீடு ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளது, தலித் மக்களுக்கான சுமார் ஒன்றறை லட்சம் பணியிடங்கள் நிறப்பப் படாமலிறுக்கும் இந்த நிலையில் இதுபோண்ற ஒர் நாடகத்தை கூசாமல் அரங்கேற்ற இந்த அரசுக்கு வெக்கமில்லையா? இவற்றையேல்லாம் பார்த்துக்கொடு ஓட்டுக் கட்சிகள் வேண்டுமானால் சும்மா இருக்கலாம் ஆனால் சமூக அக்கறை கொண்ட எவறும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது திண்ணம். உள் ஒதுக்கீட்டை முற்றிலும் நிராகறிப்பது நமது நோக்கமல்ல, அருந்ததியர் சமூகம் உட்பட அனைத்து சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைத்தான் நாம் விரும்புகிறோம், ஆனால் இது உள் ஒதுக்கீட்டால் மட்டும் சாத்தியமாகாது என்பதை நாம் உணர வேண்டும். நிரப்பவேண்டிய பணியிடங்களை நிரப்புவதன்மூலமே இம்மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் என்பது நிதர்சன உண்மை.
நாடகம்
குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் என்பது தலித் இன அழிப்பை குறிவைத்திருக்கும் தொலைநோக்கு சதித்திட்டம்!
மக்கள்தொகை அதிகம் ஆகியதால், அனைவற்றிற்கும் பற்றாக்குறை, பஞ்சம், பட்டினி, நோய், சுகாதாரமற்ற சூழ்நிலை போன்றவைகளை காரணம் காட்டி குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களை அரங்கேற்றி நடத்தி வருகிறார்கள். இதன் உண்மையான பின்புலம் என்னவாகும் இருக்கும்?
இந்த கேள்விக்கு பதில் தேட முயற்சிக்கும் முன், மேற்கூறிய பசி, பஞ்சம், பட்டினி... ஆகியவைகளை பற்றி கொஞ்சம் உற்று நோக்கி பார்க்க முயற்சிப்போம்.
பயம், பக்தி, கடவுள் போல் இந்த பஞ்சங்களும், பட்டினிகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கற்பனை சோடிப்புகளே. நாட்டின் அனைத்து வளங்களையும் ஒரு சிறுபான்மையினர் மட்டும் தங்கள் வசப்படுத்திவிட்டு, மற்றவர்களை ஏழ்மையில் வாழ வைத்துவந்தனர் என்பதே உண்மை. மக்களை சிறைபிடிக்க உருவாக்கப்பட்டதே இந்த பஞ்சங்களும், பட்டினிகளும். மாபெரும் திறந்தவெளி அடிமை மனிதக்கிடங்கே இம்மக்கள் கூட்டங்கள்.
உண்மையிலேயே பசி பஞ்சம் பட்டினி இருந்திருந்தால், பணக்காரர்கள், மிராசுதாரர்கள் எப்படி உருவாகி இருக்கமுடியும்? முறையான கூலிகளை, உணவு வகைகளை, இயற்கை வளங்களை கொடுக்காமல், ஒருசில ஆதிக்க கும்பல்கள் இந்து மத ஆசியுடம் அனைத்தையும் தம்வசம் அடக்கி மற்றவர்களை அழித்து வந்தனர். இதுதான் உண்மை.
இன்று இதே ஆதிக்க பொய்யர்கள், அடக்கப்பட்டு வந்த எளிய மக்களை சுத்தமாக பூண்டோடு அழிப்பதற்கு மிகுந்த தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கிய படுமோசமான இன அழிப்பு சதித்திட்டமே இதுபோன்ற குடும்ப கட்டுப்பட்டுத் திட்டங்கள். உலக வங்கிகள் போன்ற இன அழிப்பு சதிகார கும்பல்களுடன் கூட்டு சேர்ந்து உள்நாட்டு கையாலாகாத காட்டிக்கொடுத்த பரம்பரையில் வந்த எச்சிலைகள் நடத்தும் இன அழிப்பு திட்டமே இது. இவர்கள் சொல்லும் எதையும் நம்பக்கூடாது. எதையும் ஏற்றுக்கொள்ளவும் கூடாது. அனைத்தும் பொய்யைத்தவிர வேறொன்றும் இல்லை. பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகாண திறமையற்ற மடையர்களின் கூட்டம், அப்பிரச்சினைகளை வேரோடு அழித்து தடயமே இல்லாமல் ஆக்குவதற்கு சதிதிட்டம் தீட்டி வருகின்றனர்.
ஏழையை சுய அறிவும் ஆற்றலும் பெற்ற வசதி படைத்த மனிதர்களாக ஆக்கி ஏழ்மை இல்லாமல் ஆக்குவதற்கு பதில், ஏழைகளை சமுதாயத்திலிருந்து பூண்டோடு அழித்து சமுதாயத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள். இப்படி செய்து கிராமங்களை சேரிகளை அதன் மக்களோடு சேர்த்தே அழித்து அனைத்தையும் தம்வசமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இதுவும் உண்மை.
மண்ணின் மைந்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை கொடுக்க தெரியாத மடையர்கள், ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்த கொடுப்பாவி முதலாளிகள், மதம் சாதி என்கிற பெயரில் திகில் பயம் உண்டாக்கி அடிமையாக்கி வைத்திருந்த மதவெறி பேய்கள், வளங்கள் அனைத்தையும் தம் வசமே தக்கவைத்துக்கொண்டு அனுபவித்து வந்த சுயநல சோத்துப் பிண்டங்கள் இப்போது ஏழைகளை, குறிப்பாக தலித்துக்களை சமுதாயத்திலிருந்து அடியோடு அழிப்பதற்காக உருவாக்கிய திட்டம்தான் இதுபோன்ற குடும்ப கட்டுப்பாட்டு சதித் திட்டங்கள்.
குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டஙகளினால் பாதிக்கப்பட இருப்பது குறிப்பாக தலித் இன மக்களே. பணக்காரன் எத்தனை குழந்தைகள் பெற்றாலும் அவை அத்தனையையும் நல்லபடியாக கரை சேர்த்துவிடுவான். ஏழைகளோ, ஐந்தாறு பெற்றால், அதில் ஒன்றிரண்டே ஓரளவு நல்ல நிலைக்கு வரமுடியும். இதனால், தலித்துக்கள், மற்றும் இதர வகை பரம ஏழைகள் அனைவரும் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும். இல்லை என்றால், இன்னும் சில தலைமுறை இடைவெளிக்கு பிறகு, தலித் இன மக்கள் சமுதாயத்தில் இருந்து அடியோடு அழிக்கப்பட்டு இருப்பார்கள். மேலும் தலித்துக்கள் குழந்தைகள் பெறுவதை குறைத்துக் கொண்டால், காலப்போக்கில் இவர்களது மக்கள் தொகையும் வெகுவாக குறைந்து இதனால் ஓட்டுச் சக்திகளும் குறைந்து பிரதிநிதித்வம் இழந்து, பலமிழந்து மேலும் மேலும் சமுதாயத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டு அழிக்கப்படுவர்.
பெரும்பான்மை பிரதிநிதித்வம் உள்ள அரசியல்வாதிகள் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு, வசதிகள் எப்போதும் கிடைக்கும் அப்படி இப்படி என்று கதைவிட்டுக்கொண்டே இருபார்கள். அதை ஒருகாலும் நம்பவே கூடாது. நமது பாதுகாப்பிற்கும், வசதிகளுக்கும் நாம்தான் வழி தேடிக் கொள்ளவேண்டும். உண்மை மனதுடன் தம்மக்களை நேசிக்கும் ஒரு தலைவன் தம்மக்கள் அதிகம் பேறு பெறுவதைத்தான் பெரிதும் போற்றுவான். ஆனால், இங்கோ எல்லாம் தலை கீழாக நடக்கிறது. இதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய சதித்திட்டம் உங்களுக்கு வெளிச்சம்.
தலித்துக்கள் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டும். மேலும் மேலும் அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்டெ இருக்கவேண்டும். இன அழிப்பு சதிகார கும்பல்களின் திட்டங்களை முறியடிக்கவேண்டும். தத்தமது சமூகங்களை அழிந்துபோகவிடாமல் காக்கவேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகிறது. அனாவசியமாக கற்பத்தடை வழிகளை கையாளவும் கூடாது. வீணான கரு கலைப்புகளும் கூடாது. கரு கலைப்பு என்பது இயற்கைக்கு மாறான செயல். பொய்யர்களின் புரட்டுகளுக்கு மயங்கிவிடாதீர்கள். உங்கள் கை விரல்களை கொண்டு உங்கள் கண்களையே குத்திக்கொள்ள வைக்கும் பயங்கர இன அழிப்பு சதித் திட்டமே இது. இந்து மத அயோக்கியர்கள் அந்நிய சக்திகளுடன், பன்னாடை பரதேசிகளுடன் கூட்டு சேர்ந்து மண்ணின் மைந்தர்களின் அழிவிற்கு வகைசெய்யும் துராகச் செயல்தான் இது. இது ஒரு அமைதிமுறை இன அழிப்பு சதித்திட்டமே!
நீங்கள் விருப்பப்படும் அளவிற்கு குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்பது உங்களுடைய அடிப்படை மனித உரிமை. இதில் எந்த மடையனுக்கும், மடைச்சிக்கும் தலையிட உரிமையே கிடையாது!
தேவை இப்போதே விழிப்புணர்வு.
நன்றி: http://naalainamathae.blogspot.com
வறுமையின் நிறம் கருப்பு
வளம் நிறைந்த அந்த பூமியில் என்று வெள்ளைகாரன் கால் பட்டதோ அன்றே அதற்கு வறுமை பிடித்துவிட்டது, இயற்கை வளங்களை சுரண்ட வந்த கூட்டம் இன்று அந்த கண்டத்டையே அபகறித்துக் கொண்டது, வறுமையின் நிறம் சிகப்பென நாம் நினைத்தால் அது பொய் என்பது இந்த புகைபடத்தை பார்த்தாலே தெறியும்.
புத்த மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு
No.12016/28/90-SCD (R.Cell)
Government of India/Bharat Sarkar
Minister of welfare /Kalyan Mantralaya
New Delhi.
31st July, 1990
To
The Secretary
Scheduled Castes/Scheduled Tribe
Welfare Department of all the state government/U.T. Administrations
Subject: Removal of bar on the Scheduled caste to Buddhism from being deemed to be member of Scheduled Castes.
Sir,
A copy of the constitution (Scheduled Castes) Orders (Amendment) Act, 1990, which received the assent of the present on 3.06.1990 and published in the Gazette of India on 4.06.90, is enclosed for taking further necessary action at your end.
Yours faithfully
Sd/-
(B.N.SRIVASTAVA)
Director
Gazette Notification
Extra ordinary part II –Section –I
Published by Authority
Ministry of law and justice
(Legislative Department)
New Delhi, the 4th June, 1990/Jyaistha 14,1912(Saka)
The following act of parliament received the assent of the President on the 3rd June
, 1990, and is hereby published for general information:
The CONSTITUTION (SCHEDULED CASTE) ORDERS (AMENDMENT) ACT.1990 No.15 of 1990
An Act further to amend the Constitution (Scheduled Castes) (Union Territories) Order 1951 and to amend the Constitution (Jammu and Kashmir) Scheduled Castes Order,1956, the Constitution (Dadra and Nagar Haveli) Scheduled Castes order,1962, the constitution (Pondicherry) Scheduled Castes Order,1964 and the Constitution (Sikkim) Scheduled Castes order,1978.
Be it enacted by Parliament in the forty-first year of the Republic of India as follows:
(1) This act may be called the Constitution (Scheduled Castes) Order (Amendment) Act, 1990.
(2) In Paragraph 3 of the Constitution (Scheduled Castes) order, 1950, for the words “or the Sikh”, the words, “the Sikh or the Bhuddhist” shall be substituted.
(3) In paragraph 3 of the Constitution (Scheduled Castes) (Union Territories) iorder, 1951, for the words “or the Sikh”, the words, “the Sikh or the Bhuddhist” shall be substituted.
(4) In the proviso to paragraph 2 of the Constitution (Jammu and Kashmir) Scheduled Castes Order, 1956, for the words “or the Sikh”, the words, “the Sikh or the Bhuddhist” shall be substituted.
(5) In the proviso to paragraph 2 of the Constitution (Dadra and Nagar Haveli) Scheduled Castes Order, 1962, for the words “or the Sikh”, the words, “the Sikh or the Bhuddhist” shall be substituted.
(6) In the proviso to paragraph 2 of the Constitution (Pondicherry) Scheduled Castes Order, 1964, for the words “or the Sikh”, the words, “the Sikh or the Bhuddhist” shall be substituted.
(7) In the proviso to paragraph 2 of the Constitution (Sikkim) Scheduled Castes Order, 1978, for the words “or the Sikh”, the words, “the Sikh or the Bhuddhist” shall be substituted.
Sd/-
(V.S.RAMA DEVI)
Secretary of the Govt. of India
நன்றி : தலித் முரசு
உண்மை சுடும்
வீடும், நிலமும், காடும், கறையுமற்று எத்தனை காலம்தான் வாழ்வை நடத்துவது என நாம் ஏன் எண்ண மறுக்கிறோம்? கழனி இல்லாததால்தான் கஞ்சிக்கில்லை, வறுமையால் தான் நமக்கு வாய்ப்புகளில்லை என முடிவாகி தொடருகின்ற இந்த சாதியெனும் நோய்க்கு மருந்து கொடுக்க நம்மில் எவறும் வைத்தியரில்லையா? அல்ல நமக்கு வைத்தியரிடம் செல்ல வழிதான் தெறியவில்லையா? நாகரிக வளர்ச்சியால் முதிற்சியடைந்த மனிதனுக்கு நாவும் நோவும் நீண்டுகொண்டே போகிறது என பேசாமல் விட்டுவிட்டோமா? இல்லை இலக்கன பிழைபோல் இதுஒரு இனப்பிழை என எண்ணுகிறோமா? அல்லது குருட்டு விழிகளுக்குள் குடியிருக்கும் இருட்டைப்போல் இது நிரந்திரமானது என தீர்மானித்துவிட்டோமா?
இராயிரம் ஆண்டுகளுக்கு முன், மதியை மறந்து விதியின் வழியில் வாழ்ந்துகொண்டிருந்த மானுட கூட்டத்தின் மடமையை போக்க காட்டை நோக்கி நடந்தான் கெளதமன். ஐந்து பேருன்மையையும், எட்டு நல்வழிகளையும், ஆசையை ஒழிக்க அறுமருந்தென கூறினான். நிலையானது என்ற வார்த்தை மட்டுமே நிலையானது என்றதால் சிலையானான் என்றும் நிலையானான்.
இது நாயமா?
கஞ்சி போடாமல் நீ கதர் கூட அணிவதில்லை _ உண்ண
கஞ்சி இலார் பற்றி உமக்கென்ன கவலை?
60 ஆண்டுகளாய் நமக்கு காங்ரஸ் கொடுத்ததென்ன? வறுமையும் பசியும் தவிர வேறென்ன்? ஓட்டு பிச்சை கேட்ட வேட்கமில்லையா?
அரசில் மாற்றம்
தாவுவதற்க்கு தயாராகுது குரங்கு _ வெறும்
பனம் மட்டுமே வெல்லும் போது ஏன் இந்த
தேர்தல் எனும் சடங்கு.